விடியும்!- நாவல் – (38)

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அந்தோனி பரவாயில்லை, நாலு வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டார், அவருக்குப் பின் அவனை வழியில் நிறுத்தியவர்களோ, ளாளுக்கு இழுத்துப் பிடித்து வைத்து ஏதோ தாங்களே பக்கத்தில் நின்று படம் பிடித்த மாதிரி னையிறவு விசயத்தை அளந்தார்கள். திண்ணையில் வசதியாகச் சாய்ந்து காலுக்கு மேல் கால் போட்டு நீட்டிக் கொண்டு வெற்றிலை போட்டபடி கற்பகம் பாட்டி சொல்கிற கதை போலத்தான் இருந்தது அவனுக்கு.

அயலட்டைக் குழந்தைகள், வயசுக்கு வந்தவர்களும் தள்ளுபடியில்லாமல், முகத்தில் ஈ மொய்க்கிற பிரக்ஞை கூட இல்லாமல் பாட்டியை சுற்றி வளைத்திருப்பார்கள். முக்கால்வாசியுமே அண்டாகாக் கசம் அபுகாக் குசும் வகையிலான மாயாஜாலக் கதைகள். இடையிடையே வந்து விழுகிற அண்டப்புழுகுகளுடன் த்திசூடி கொன்றைவேந்தன் வரிகளையும் பொருத்தமாகக் குழைத்து நம்பும்படியாகச் சித்தரிப்பாள் பாட்டி. கையால் மடியால் இட்டுக்கட்டி செப்பமாக்கிய நவீனங்களை கிழவி சொல்கிற நளினத்தில் பிள்ளைகள் சோறுதண்ணி மறந்து போவார்கள். அம்மாமார் சாப்பிடக் கூப்பிட்டால் முகத்தைத் திருப்ப அவகாசமில்லாமலே அடிக்கிற மாதிரி பதில் சொல்வார்கள்.

ஏழுமலை தாண்டி ஏழு கடல் ஏழு குகை தாண்டி அந்தப் பக்கம் போனா பென்னாம் பெரிய அகழி. அகழி நிறைய முதலை. அதையும் தாண்டினா யிரக் கணக்கில் கருநாகப் பாம்பு. அதையும் தாண்டினா, மலையுச்சியில் ஒரு ஏழுதலைப் பாம்பு. அதன் தலையில் பளிச்சென்று மின்னுது வைர மோதிரம். அதை எடுத்து வந்துட்டா இராசகுமாரியை கை பிடிக்கலாம் என்றார் மகாராசா.

அவளது கதாநாயகன் ஏழுமலையென்ன எழுபது மலைகளைக்கூட ஒரே தாண்டில் தாண்டக்கூடிய வல்லமை கொண்டு விளங்கினான். ஜேம்ஸ் பொண்ட்டை சினிமாவில் சித்தரித்தவர்களைக் காட்டிலும் பாட்டி திறமைசாலியாக இருந்தாள். சகல தடைகளையும் கபளீகரம் செய்து வைர மோதிரத்தை எடுத்து வந்து இராசகுமாரியை மணமுடித்து அரசருக்குப்பின் நல்ல முறையில் ராசாங்கம் நடத்தினான் என்று சுபமாக முடியும் கதை.

கேள்விகள் கேட்கும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள். குறுக்குக் கேள்விகளை நறுக்கென மடக்க வெவ்வேறு கிளைக்கதைகளை நேரத்திற்கேற்றபடி நுழைத்தாலும், மூலக்கதையின் தொடர்பு விட்டுப் போகாமல் சமாளிக்கும் ற்றல் வெறும் கேள்விஞானம் மட்டுமேயிருக்கும் அந்தக் கிழவியிடம் எப்படி சாஸ்வதமாகியது என்பது பெரிய ச்சரியம்.

அந்தக் காலத்தில் பாட்டியிடம் கேள்வி கேட்டவர்களில் அவனும் ஒருவனாக இருந்தான். அந்தக் குணமோ என்னமோ, இப்போதும் அவனிடம் பல கேள்விகள் முளைத்தன. தாரமாக எடுத்துக் கொள்வதற்கு பத்திரிகைச் செய்திகள் இல்லை. வானொலி தொலைக்காட்சிகள் கூட மெளனம் சாதித்தன. எதையும், தீர விசாரித்து அறிய வேண்டுமென்று திருவள்ளுவர் வேறு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

நம்பாலிருக்க வேறு நியாயங்களும் இருந்தன. முதலாவது – இரானுவ முகாம் தங்களது ஏகோபித்த கட்டுப்பாட்டில் இருப்பதாக தகுதி வாய்ந்த அரச அதிகாரி கடந்த சில நாட்களாக தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அடுத்தது – பொதுவாக இது போன்ற முகாமை விழுத்துவது காட்டுயானையை விழுத்துவது போலத்தான். னையிறவு இலங்கைத்தீவின் தொண்டைக்குழி – யாழ்குடாவின் வாசல். மின்சாரம் பாய்ச்சிய முள்வேலிகள், நாலு பக்கமும் கோபுர அரண்கள், சுற்றியுள்ள பூமியெல்லாம் லட்சக்கணக்கில் விதைத்த கண்ணிவெடிகள், பத்தாயிரத்திற்கும் குறையாத இரானுவ வீரர்கள், அதிலும் அமெரிக்க இரானுவத்தால் அதிஉயர்பயிற்சி வழங்கப்பட்டவர்கள், ஐம்பது நூறாண்டு காலக் கடன்களாக வெளிநாடுகளிடம் கையேந்தி வாங்கிக் குவித்த பயங்கர யுதங்கள், கொரில்லா நடவடிக்கைகளை வெகு தூரத்திலிருந்தே மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கக்கூடிய தொழில்நுட்ப உபகரணங்கள்.. .. .. .. .. இலேசுப்பட்ட முகாமில்லை.

இருந்தும், இத்தனையையும் பொய்யாக்கி முகாம் முகம் குப்புற விழுந்திருக்கிறது என்கிறார்கள். இனியென்ன, அடுத்தது பலாலி முகாம், இரானுவம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கடலில் குதிக்கப் போகிறது என்கிற அளவிற்கு ஹேஷ்யங்கள், நம்பிக்கைகள் உலா வரத் தொடங்கிவிட்டன. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள், இது – எங்கு திரும்பினாலும் மூச்சை முட்டும் புகைமண்டலம். ஒரு பொழுதும் கல்லாப்பெட்டியை விட்டு அசையாத மூலைக்கடை முருகேசரே, தெருவில் இறங்கி இப்படிச் சொன்னார்.

“காகத்துக்கு குறிபார்க்கிற சுண்டிவில் மாதிரி ஒரு சின்னத் துவக்கோடுதான் துவங்கினது. இப்ப உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்று தலை தெறிக்க ஓடுது இரானுவம். இவ்வளவு அடக்குமுறைக்குள்ளும் எங்களை தலை நிமிர்ந்து நடக்க வைச்சாங்களே, இந்தப் படை தோற்கின் இனி எந்தப் படை வெல்லும். சொல்கிற போதே எனக்கு மேலெல்லாம் சிலிர்க்குது, இங்க பார் இங்க பார்” என்று தன் இரண்டு கைகளையும் அவர் நீட்டிக் காட்டிய போது அவனுக்கும் சிலிர்த்துக் கொண்டு வந்தது. சுதந்திரம் கிடையாமல் ஓய்வதில்லையென்ற தீர்மானமும் அதற்காக உயிரையே விலையாகக் கொடுக்கிற தியாக உணர்வும் இருக்கின்ற வரை வெற்றிகள் அவர்களைத் தேடிவரும் போலவே அவனுக்கும் தோன்றியது.

வீட்டுக்கு வந்தபின், தான் விருப்பமாகச் சாப்பிடும் தோசைக்கு சின்னம்மா நேற்றிரவே உழுந்தரைத்து வைத்தது தெரிந்திருந்தும், அவனுக்கு பசியில்லை. நேரே சினனம்மாவிடம் போனான். சின்னம்மா அரிசியில் கல்லுப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். முற்றத்து வெய்யிலில் காயப் போட்டிருந்த மோர்க் கொச்சிக்காயை காகம் கொத்தாமல் காவல் பண்ணிக் கொண்டிருந்தார் அப்பா. அப்பாவையும் கூப்பிட்டு பக்கத்தில் இருக்கச் சொல்லிவிட்டு செவ்வந்தியின் கல்யாண எழுத்து முற்றான விசயம் சொன்னான்.

சொன்ன மாத்திரத்தே, திரண்ட மேகச் சிறையிலிருந்து மீண்ட முழு நிலவாயிற்று சின்னம்மாவின் முகம். நீண்ட இடைவெளிக்குப்பின் அப்படியொரு பிரகாசம். அப்பா ஐந்து வயது குறைந்தவர் போல உற்சாகமானார். செவ்வந்தியின் எழுத்து முற்றானதும் னையிறவு விழுந்ததுமான இரண்டு செய்திகளும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வந்தவை. இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் அவனுக்கு முக்கியமானவை. அவை ஏற்படுத்திய அதிர்வு இன்னும் தீரவில்லை. விடாயில் வந்தவனுக்கு வயிறு முட்டக் குடித்து விட்ட இட்டுமுட்டு.

தம்பியும் போயிருப்பானோ! நினைக்கப் பயமாக இருந்தது, பிரமிப்பும் வந்தது. கூடவே சுடலை ஞானமும் ஒட்டிக் கொண்டு நின்றது. தம்பியே எட்டடி பாய்ந்திருக்கிறான், நான் ?

பின்பக்கம் வந்தான். கிணற்றடிக்கட்டு அவன் தனிமை வேண்டி ஒதுங்கும் இடம். அவனுக்கு இப்போது தனிமை வேண்டும். இந்த மண்ணின் விடுதலைக்காக ஒரு துரும்பைத் தானும் எடுத்துப் போடாத தனது கையாலாகாத்தனத்தை இன்னும் துருவித் துருவி ராய வேண்டும்.

இதரை வாழை பொத்தி தள்ளியிருந்தது. சாம்பல்மொந்தன் குலை பெரிதாக விழுந்திருக்கிறது. நன்றாக முற்றிய நாலைந்து காய்களை சின்னம்மா பொரியலுக்காக பிய்த்திருந்தாள். சில தலைவாழை இலைகளும் விரதகாலத் தேவைக்காக வெட்டப்பட்டிருந்தன. தைப்பொங்கலன்று அவன் கையால் நட்ட கப்பல் வாழையின் அடியில் குட்டிகள் கிளம்பியிருந்தன.

நான் என்ன செய்வது ? நிலத்தைப் பிளந்து கிளம்பியிருக்கிற அந்தக் குட்டிகளைப் போலவே சில யோசனைகள் கிளம்பின. உணர்ச்சிமயமான அந்த சமயத்தில் உதித்த எல்லா துணிகர யோசனைகளும் சாத்தியமானவையாகத் தோன்றின. தமிழ்ப்படக் கதாநாயகன் தோள்த்துண்டை வீசியெறிந்து கொண்டு வீராவேசமாக ஸ்லோ மோசனில் நடந்து வருவது போல அவனை கற்பனையில் மிதக்கவும் வைத்தன.

நேரம் போகப் போக, கற்பனை கரைந்து காணாமல் போகவும், முட்டிக் கொண்டு நின்ற யோசனைகளில் பத்துக்கு ஒன்பதும் சாத்தியமற்றவையாக யதார்த்தத்தில் மாறிக் கொண்டு வர, ஒவ்வொன்றாக கழைந்து கொண்டே வந்து ரம்பத்தில் தொடங்கிய இடத்திற்கே பாதுகாப்பாக வந்து சேர்ந்தான். எட்டடியல்ல எட்டங்குலம் கூடப் பாய்வது கடினம்.

குசினி வளையில் வைக்கோற் சரங்கள் தொங்கிய இடத்திற்கு மேலே கொத்தாக இருந்தது குருவிக்கூடு. தாய்க்குருவி பறந்து வந்து இரையை நீட்டுவதும் உள்ளிருந்த குஞ்சுகள் பற்றிக் கொள்வதும் உடனேயே அடுத்த இரைதேடலுக்காக அது சிருக்கென்று பறந்து போவதும் அவன் இதே இடத்தில் பல தடவைகள் கண்ட மனம் தொட்ட காட்சிகள். மற்றவருக்காக செய்வதற்கு, எத்தனையோ இருந்திருக்க அவையெல்லாம் இந்தக் கணம் வரை தன் கண்ணில் படாமல், பட்டிருந்தாலும் கவனத்தில் வராமல் எப்படி விலகிப் போயிற்று என்று யோசித்தான். பகல் முழுக்க கடும் யோசனையில் கழிந்தது. சாப்பிட்டபோது பிரக்கடித்தது, விக்கலும் வந்தது. தண்ணீர் குடிக்கக் கொடுத்து நெஞ்சையும் தடவி விட்ட செவ்வந்தி ரோ அண்ணனை நினைக்குதுகள் என்றாள்.

எப்போதும் போலவே வெய்யில் வடிந்து மாலையாயிற்று. மாலையும் மங்கிக் கொண்டு வந்தது. சின்னம்மா விளக்கு வைத்துவிட்டாள். அப்பா கைகால் முகம் அலம்பி று மணி வானொலிச் செய்தி கேட்க குந்திவிட்டார். செவ்வந்தி அடுப்படிக்குள் இரவு உணவுக்கு வகை தேடிக் கொண்டிருந்தாள்.

அவன் கிளம்பினான். இனித் தள்ளிப் போடல் இல்லை பின்வாங்கலும் இல்லை என்று தீர்மானம் கொண்டவனாய் முகம் கழுவி சட்டை போட்டுக் கொண்டான். எங்க தம்பி ராயிருட்டால என்று சின்னம்மா முகச்சாடையால் கேட்டாள். இதில ஒருக்கா போயிற்று ஓடிவாறன் என்றான் செல்வம். செவ்வந்தியின் எழுத்து விசயமாக இருக்கும் என்று எண்ணினாள் சின்னம்மா. நிலைமை நல்லாயில்லை அங்கயிங்க மினக்கெடாம கெதீல வந்து சேர் என்றார் அப்பா.

தெருவில் பெரிதாக நடமாட்டமில்லை. அன்றைய சோலியை முடித்த காகங்கள் பூவரசு மரக்கொப்புகளில் தங்கி அரட்டையடித்துக் கொண்டிருந்தன. ரிக்கி அவனைத் தொடர்ந்து வந்தது. பக்கத்து வளவு நாயைப் பார்த்து சண்டைக்குத் தயாரானது போல் உறுமத் தொடங்கிற்று. வாசல்வரை விரட்டி வந்து வளவுக்குள் விட்டு கதவைச் சாத்திவிட்டு நடந்தான்.

தெருவிளக்குகளுக்கு விடுமுறை போலும், ஒட்டுமொத்தமாக எரியாமல் இருந்தன. ட்டோ ஸ்டான்டில் சவாரி கிடைக்காமல் மீதப்பட்டுப் போன ஒரு டிரைவர் எழுந்து நின்று கண்ணால் பேசினான். ஏற வேண்டும் போலிருந்தாலும் தலையாட்டிவிட்டு நடந்தான்.

பலசரக்குக் கடைகளுக்கு பலகை போட்டுக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழக்கடையில் ஒரு குலையை திருப்பித் திருப்பி நோட்டம் பார்த்த ஒருவர் பழத்தைப் பிய்த்து விழுங்கி விட்டு தோலை கடை வாசலில் விட்டெறிந்தார், யார் சறுக்கி விழுந்தாலும் பரவாயில்லை என்கிற மாதிரி.

நெருக்கமாயிருந்த கடைகள் முடிந்து வீடுகள் தொடங்கிய வளவிலிருந்து ட்டுப்புழுக்கையின் மொச்சை அடித்தது. சாணக்குவியலில் வண்டுகள் வட்டமிட்டன. மூக்கை மூடிக் கொண்டு நடந்தான். இன்னும் அரை மைல் தூரமாவது நடக்க வேண்டும். இங்கிருந்து பார்த்தால் அடுத்த முனையில் சைக்கிளில் வருகிறவரை தெரிகிற அளவிற்கு நேரான தெரு.

அது போய் முடியும் இடத்தின் இடப்புறமாக இருட்டு ஒழுங்கையில் இருக்கிறது அம்மா இல்லம். லீவில் வந்தபின் ஒரு முறை அங்கு போயிருந்தான். அம்மாவின் திவச நாளன்று, கோயிலுக்குக் கொடுத்தது போக அநாதைப் பிள்ளைகளுக்கு அவித்துப் போடும்படி அதற்குண்டான அரிசி பருப்போடு இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்து வர. மூன்று மாதமாவது இருக்கும்.

அவன் போயிருந்த போது ஒவ்வொரு வயசிலும் வரிசையாக குஞ்சு குருமான்கள், ணும் பெண்ணுமாய் நோஞ்சானாய் கிராமத்துக் களையில் கண்கள் முட்டிய எதிர்பார்ப்புடன் வரவேற்ற விதம் இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. வருகிறவர்களுக்கு எழுந்து வணக்கம் சொல்ல வேண்டும் என்று சொல்லிப் பழக்கியிருந்தது புரிந்தது. நிரந்தரமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று அன்றைக்கே தோன்றத்தான் செய்தது. தள்ளிப் போடுகிற குணம். தள்ளியே போய்விட்டது. அங்கிருந்த பெரியவர் சொல்லத்தான் செய்தார்.

‘ஏதோ அரை வயித்துக்கு வந்து சேந்துருது. இதுகளின் எதிர்காலந்தான் எப்படியாகுமோ என்று கவலையாயிருக்கு. ‘

“ஏனய்யா ?”

“கவலையே தெரியாம ஓடியாடி விளையாடித் திரிகிற வயசில ருமில்லாம அந்தரிச்சுப் போய் நிக்குதுகள். படிக்கிறதுக்கு நிறைய சையிருக்கு, வசதிதான் இல்லை.”

“என்ன பிரச்னை ?”

“கல்வியைக் குடுத்திட்டா அது கடைசிவரை கூடப் போகும். பெண்பிள்ளைகளை நினைத்தால்தான் நெஞ்சைக் கலக்குது. ஏதாச்சும் சின்ன வேலைக்குப் போகிற அளவுக்காவது படிப்பித்துவிட்டால் தங்கள் பாட்டை தாங்களே பார்த்துக் கொள்வார்கள்.”

கிழவர் எல்லாரிடமும் பாடுகிற பல்லவிதான். அகப்படுகிறதோ இல்லையோ அவர் தூண்டில் எறியத் தவறுவதில்லை. பிறந்த நாள், இறந்த நாட்களில் தற்காலிகமாக வந்து போகிற சனம் நிரந்தரமாக பாரம் சுமக்கத் தயாராயிருக்குமா ? இவன் றுதலாய் நின்று தங்கம் கேட்கப் போக, அவர் இன்னும் விஸ்தாரமாக கூறினார்.

“இந்தா நிற்கிறதே பிள்ளை வந்து எட்டு நாளாச்சு. மி சுட்டதில தகப்பனுக்கு காயம் பட்டு சரியான கவனிப்பில்லாமல் மனுசன் செத்துப் போயிட்டுது. ஐஞ்சு வயசுப் பொடியனோடு தாய்க்காரி அகதி முகாமில் இருக்குது. இந்தப் பிள்ளை குமராகி விட்டாள். முகாமில் வைத்திருக்கப் பயம். இங்க வந்திட்டுது.”

அந்த அம்மா இல்லத்திற்குத்தான் அவன் போய்க் கொண்டிருந்தான். முற்றத்தில் வெளிச்சம் விழுந்திருந்த வளவில் வானொலிச்செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் பக்கமாய் பிரிந்து சென்ற அந்த இருண்ட ஒழுங்கையில் நடந்த போது அம்மா இல்லத்தில் இரவுப் பிரார்த்தனை முடிந்த தருணம். வாசலில் செருப்புகளை கழட்டிவிட்டு கோயிலுக்குள் நுழைகிற பாவத்தோடு காலடி வைத்தான்.

பிள்ளைகளின் முன்னால் சப்பாணி கொட்டியிருந்த பெரியவர் இன்னும் கண் திறக்கவில்லை. வரிசையாக இருந்த பிள்ளைகளில் சில திரும்பிப் பார்த்தன. முன்வரிசையிலிருந்த ஒரு சிறுவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்தில் ஏதோ சொல்லிச் சிரித்தான். பின்னுக்கிருந்த வளத்தியான பெண்பிள்ளை வாயில் விரல் வைத்து சூ என்றாள். அவனுக்கு எல்லோரையும் முந்திவிடும் அவசரம், ஐயா ரோ வந்திருக்கு என்று குரல் வைத்தான். கண் திறந்த பெரியவர், எழுந்து வந்து வாங்க தம்பி என்று வரவேற்றார்.

எல்லாரும் சத்தம் போடாம இருங்க என்று சத்தம் போட்டாள் ஒரு பிள்ளை. காய்கறிகள் பரத்தியிருந்த சின்ன அறைக்குள் அவனை அழைத்துப் போய் கதிரை இழுத்துப் போட்டார் பெரியவர். நேரடியாகவே விசயத்திற்கு வந்தான் செல்வம்.

“ஐயா, ஐஞ்சு பிள்ளைகள் படிப்புக்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்ளுறன். மாதாமாதம் காசு அனுப்புவன்.” அவன் சொல்லி முடிக்கவில்லை, பெரியவர் சாமிப்படத்தைப் பார்த்துக் கண் கலங்கி அவன் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.

எந்த அடிப்படையில் ஐந்து பிள்ளைகளைத் தேர்வது என்ற யோசனை வந்தது. அத்தனை குழந்தைகளையும் ஒரு முறை பார்த்தான். எல்லாமே அவனைப் பார்த்து கொள்ளையாகச் சிரித்துக் கொண்டு நின்றன. கள்ளம் கபடமற்ற இந்தக் குழந்தைகளில் யாரையென்று தெரிவது ?

ள் பார்த்து அழகு பார்த்து குலம் கோத்திரம் பார்த்து தேர்ந்தெடுக்கும் குணம் தனக்கு வந்ததையெண்ணி அடுத்த கணமே வெட்கம் வந்தது. வந்த நோக்கத்தையே அது களங்கப்படுத்திவிடுமென உணர்ந்து பெரியவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதென அமைதியானான். பெரியவர் மேசைலாச்சியில் ஏதோ தேடிக் கொண்டிருக்க, அறைக்கு வெளியே கசமுசவென்று ஊசாடித் திரிந்த பிள்ளைகளின் கூட்டத்தை முழுதுமாகப் பார்த்தான்.

மற்றப் பிள்ளைகளுக்கு என்ன வழி!

—-

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்