ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

நட.சிவகுமார்


அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்…

உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் என்னும் இந் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கின்றன.

சமத்துவத்தை வலியுறுத்தியதில் உலகின் எந்த மதத்திற்கும் இணை சூற முடியாத இடத்தை இஸ்லாம் பெற்றது உண்மையே. ஆனால் இந்தியாவில் இஸ்லாமியரின் வாழ்வியல் நெருக்கடிகள் சச்சார் கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகுதான் பகிங்கரப்படுத்தப்ப்பட்டுள்ளன். இவற்றையெல்லாம் வசதியாக மூடி மறைத்துவிட்டு நாம் சிறுபான்மையினர் நலம் குறித்து விவாதிப்பதில் யாதொரு மேன்மையும் இருக்க முடியாது.

வடமாநிலங்களில் அஷ்ரப்கள், அரபுப் பூர்வீக அடையாளத்துடன் உயர்ஜாதி அந்தஸ்து பெறுகின்றனர்.அஜ்லப்கள் எனப்படுவோர் இந்துக்களிலிருந்து மதம் மாறிய காரணத்தால் கீழ்நிலையினர் என்று ஒதுக்கப்படுகின்றனர்.அர்சால்கள் இன்னும் பல படிநிலைக்கு கீழே பரிதவிக்கின்றனர்.காரணம் இவர்கள் தலித்துகளாயிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள். தமிழகத்தில் உருது மொழி பெசுகின்ற முஸ்லிம்கள் நீங்கலாக தமிழ்முஸ்லிம்களிடையே ராவுத்தர், லெப்பை,மரைக்காயர் ,ஒஸா என்று பல பிரிவினர் ஏற்றத்தாழ்வுகளில் உழல்கின்றனர்.
வாழ்வாதாரங்கள் ஏதுமின்றி விளிம்புநிலையினராக இருக்கின்ற ஏழை முஸ்லிம்களாக பாவித்து அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கு தடையாக இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தின் காவலர்களேயாவர்.பட்டினியால் கிடந்து செத்தாலும் தலித் முத்திரை மட்டும் விழாமல் பாதுகாப்பதற்கு பெயர்தான் மதாபிமானம் போலும்.

தமிழின் தலைசிறந்த சீர்திருத்தவாதி தந்தை பெரியார் இஸ்லாத்தை நேசித்துத் தழுவுவதற்கு ஏற்றமதமென டக்டர் அம்பேத்கருக்கு சிபாரிசு செய்ததும் பிறகு பெரியாரின் சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டதும் அம்பேத்கர் இறுதியில் பெளத்தம் போய் சேர்ந்ததுமெஅதனால் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதும் நம் கடமையாகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரபுப் பாலைவனச் சூழலுக்கேற்ப இயற்றப்பட்ட சட்டங்களை இன்றளவும்நடைமுறைப்படுத்தத்துடிக்கிறது அடிப்படைவாதக் குழு.மெளனமாகத்தான் நாம் இதற்கான எதிர்வினைகளை புரிய வேண்டியிருக்கிறது.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எண்ணற்ற ஆதாரங்களுடன் இந்நூலில் தலித் முஸ்லிம்கள் குறித்த உரையாடல்களை மனத்தடைகளின்றி நிகழ்த்துகிறார்.தெளிவும் மறுசிந்தனையும் தீர்வும் கோரி அவை நம்முன் நிற்கின்றன.எனினும் எல்லாவற்றையும் கடந்த சமத்துவத்திற்கான மக்கள் போராட்டமே இன்றைய தேவை.

இந் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

1) சச்சார் அறிக்கையும் அர்சால் முஸ்லிம்களும்
2)பின்காலனிய இஸ்லாம்
3) பின்காலனியச் சூழலில் அடித்தள முஸ்லிம்கள் குறித்த உரையாடல்
4)கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் – ஜாகிர்ராஜாவின் மீன்காரத்தெரு நாவலை முன்வைத்து
இதர விவரங்கள்

நூல்வெளியீடு
பாரதி புத்தகாலயம்
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை – 18

பக்கங்கள்: 48
விலை:25
—————————————————————————————————————–
ஹெச்.ஜி.ரசூலின் இதர ஆய்வுநூல்கள்
இஸ்லாமியப் பெண்ணியம் – பாரதி புத்தகாலயம்
அரபுமார்க்ஸியம் – பரிசல் வெளியீட்டகம்
குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – கீற்று வெளியீட்டகம்.
பின்நவீனத்துவ வாசிப்பில்
இஸ்லாம்பிரதிகள் – மருதா பதிப்பகம்.
கெண்டை மீன்குஞ்சும் குரான் தேவதையும் – ஆழி பதிப்பகம்

Series Navigation

நட.சிவகுமார்

நட.சிவகுமார்