வேத வனம் விருட்சம் -60

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

எஸ்ஸார்சி



இந்திரன் சூரன்
அவன் எம் தோத்திரம் ஏற்க
வீரன் இந்திரன்
சுஷ்னன் எனும் அசுரனை
முடித்தோன்.

கடமை தொலைத்தோன்
எம்மைத்தெரியாது
வேறு பாதை செல்வோன்
மனிதக்குணம் இலி
எம்மைச்சுற்றித்திரியும்
அவனே தச்யு
இந்திரன் நீயே
பகை முடிப்போன்
நிராயுதபாணி ஆக்குக அவனை.

கை கால்கள்
என்றேதுமிலா இப்புவி
அந்தரத்தில்
தேவர்களாலே சுழல்கிறது
வலமாய் வந்து
உலகம் சுற்றி
மானிடனுக்காய்
சுஷ்னன் எனும்
அசுரனை முடித்த
இந்திரச் சூரனே
பருகுக சோமம் ( ரிக்10/22)

இந்திரனே கேள்
வசுக்கிர முனி யான்
புவியை நனைக்கும் நீ
எல்லா உயிர்களிலும்
வாழ்கிறாய் மையமாய்
விண்ணும் மண்னும்
நின்னை வெல்வதேது

முனியே யான் இந்திரன்
கூடிய பசுக்கள்
புல் மேய்கின்றன
கோபாலன் அழைத்தால்
ஔடோடும் அவை
எத்தனை முறை பால் பொழிகின்றன

புல்லைத்தின்னும்
விளைபயிர் உண்ணும்
மிருகங்களை
மனிதர்களோடு இணைக்கிறேன்
வசுக்கிரமுனி யான்
இணைக்கப்பட்டவன்
அவிழ்க்கப்பட அவாவுகிறான்
இணைக்கப்படா ஒருவனின் எதிரியோ
அவனை இணைக்க முனைகிறான்

பொருள் வேண்டி
கரம் பிடித்தவனை
எத்தனை ப்பெண்கள்
திருப்தி செய்கிறார்கள்
கண்ணியமான பாக்கியவதி
தானே தன்
துணையைத் தேடுகிறாள்
புகழ்ந்து பேசினால் போதும்
எத்தனைப்பெண்கள்
மகிழ்ந்து போகிறார்கள்

இந்திரனுக்குக் கீழாய்
உதிக்கப்பெற்றது
விசுவாமித்திரரோடு எழுவர்
மேலிருந்து எழுந்தனர்
வாலகில்யரோடு எண்மர்
முதுகுப்புறம் கொடுத்தது
ஒன்பது பிருகுக்கள்
முன் பாகக்கொடை
பத்து அங்கிரசர்கள்
அதனில் ஒருவனே
கபிலனெனும் மாமுனி ( ரிக்10/27)

ஆடியது போதும் சூதாடியே
நம்பு நீ என்னை
காய்களை விட்டெறி
மன்ணைச்சீராக்கு
பயிர்த்தொழில் செய்
பசுக்கள் வாழ்ந்திடும்
மனையாள் மகிழ்வாள் ( ரிக் 10/34)
————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி