லதாமகன்
குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o
நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o
பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o
எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo
மழைபொழியும் நாளை
ஐஸ்கிரீம் வழிய
நீ பார்த்துக் கொண்டிருந்த
போதுதான்
என்
முதல் கவிதையை எழுதினேன்
நான்
o
அழும் குழந்தையை
அணைத்து சமாதனப்படுத்துவாய்
எப்பொழுதும்
மழை பொழியும் போதெல்லாம்
அழும் குழந்தாய் மாறிவிட
ஆசை எனக்கு
o
உன் கூந்தல்
வழிந்த மழையைத்தான்
தேனென சேகரித்துப்
போகிறது
தேனீக்களெல்லாம்.
o
நட்சத்திரங்களின்
எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய்
மழை நாளில்
மழை பொழிந்த வானாகிறேன்
முத்த நாளில்.
o
ஒற்றைக்குடைக்குள்
நீயும் நானும்
ஒண்டிக்கொண்டிருக்க
நிலமெல்லாம்
பூக்கள் தூவும்
காதலின் மழை
oOo
மரணம் உதிரும் மரமென
அழிந்து கொண்டிருக்கிறது
இந்நாள்கள்
ஒற்றைக் கல்லெறிதெலில்
கலைத்துப்போனாய்
தென்றல்கள் தொட்டிருக்காத
மரக்கிளையொன்றை
சலசலக்கும் இலைகளின்
பேரிரைச்சலில் இடையறாது
உதிர்ந்துகொண்டிருக்கும்
உயிர் மரம்.
o
பின் மழைப்பொழுதின் தார்ச்சாலையில்
எதிரொலிக்கும் பொன்மஞ்சளென
படிந்து விட்டிருக்கிறது
உன் முகம்
தீராத பாதையெங்கும்
அலைந்து திரிகிறேன்
நினைவுச் சுமைகளை
சுமந்து கொண்டு
ரகசியப்பிழையின் தீங்கங்குள்
எரிந்து தீர்கிறது
நிகோடின் வெண்புறாவுடன்
o
விலகிப்போதலின்
எல்லா சாத்தியக்கூறுகளும்
ராணிகளுக்கு இருக்கிறது
எட்டுச் சதுரங்களுக்குள்
இடையறாது
சுற்றித்தீரவேண்டியிருக்கிறது
எனக்கு
புன்னகைத்துச் சொல்கிறாய்
செக் மேட் என
எப்போதாவது
எதிரில் வருகையில்
நகர்தலுக்கான கண்ணியற்ற
ராஜாவைப்போல் உணர்கிறேன்
இப்பொழுதெல்லாம்
o
துருவேறிற்று
இவர்கள்
கொஞ்சம் தட்டிப்பார்க்கிறார்கள்
பெருஞ்சத்ததுடன் வீழ்கிறது
காலங்களின் துரு
துருவேறிய காலங்கள்
குறித்த கேள்விகள் இவர்களுக்கு
நிறைய இருக்கிறது
பேச்சற்று பெருமூச்செறியும்
மூப்பெய்திய இரும்பு
ஆயாசத்தில் கீழ் வீழுந்த
ஆயுதங்கள்
காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது
சுழற்சியின் நினைவுகளை.
oOo
-லதாமகன்
Paramanantham
- ஆபத்து
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- கம்பன் காட்டும் விதி
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- கேள்விகளால் வாழும் மரணம்
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- உன்னோடு நீ..
- சலன மழை!
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3
- துடித்தலும் துவள்தலும்
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆயிரங்கால் மண்டபம்
- முள்பாதை 59
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- ஆதிவண்ணம்
- ரகசியம் பரம ரகசியம்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- கைப் பிடியின் பிடிவாதம்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20