யார் இங்கே ?

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

புஷ்பா கிறிஸ்ரி


ஒருவருமில்லாத இந்த வீட்டில்
தனியே நான் மட்டும்

அமைதி, மயான அமைதி
தனிமையிலும், அமைதியிலும்
மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

அது என் மனத்தின் அமைதி.
என் குணம், என் இதயம்
யாவும் அமைதியாக இருப்பதனால்
என் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

இங்கே என் மெளனத்தைக் கலைகக
யாரும் வரமாட்டார்கள்
அது என் வீடு, என் மன வீடு
நான் இருந்து, அமர்ந்து பார்த்து
அழகாகக் கட்டிய என் மண் வீடு
என் அமைதியான மன வீடு

இங்கே கவலையில்லை.
கண்ணீரும் இல்லை
காதலும் இல்லை, காமமும் இல்லை
இது என் பாச வீடு
பலரும் வந்து போக நான் இடமளிக்கும்
என் மன வீடு
பாசம் தேடி, அன்பு தேடி,
என் வீடு தேடி வர
எத்தனை உறவுகள்.

ஏழைகளாய், ஊனர்களாய்,
குருடர்களாய், செவிடர்களாய்
இன்னும் எத்தனை பேருக்கு
இங்கு இடம் வரும் என்றால்
என் மன ஆழத்திடம் தான்
கேட்க வேண்டும்

நான் இறைவனிடம் கேட்கிறேன்
என் மன அமைதியைக்
கொஞ்சம் நீட்டி விடு இறைவா
நான் நல்லது செய்ய வேண்டும்

நான் இருக்கும் நாட்களுக்குள்
நல்லது செய்ய வேண்டும்
பிறர்க்கும் எனக்கும் நான்
நல்லது செய்ய வேண்டும்

என் வாழ்நாள் கூடவேண்டாம்
இருக்கும் நாட்களில் நான்
நல்லது செய்ய வேண்டும்
தருவாயா இறைவா ?

Pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி