யாரைத் தேடி ஒடுகிறது நதி ?

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

புஸ்பா கிறிஸ்ாி


யாரைத் தேடி ஒடுகிறது நதி ? மழை பெய்த நிலத்தில் தன்னை விட்டு ஓடுகிறது தண்ணீர்
எங்கே போகிறாய் என்றது காற்று காற்றின் திசையுடன் ஓடியது தண்ணீர் வழியில்
குறுக்கிட்ட மரத்தில் முட்டி மோதிய தண்ணீர் மரம் கேட்டது எங்கே உன் பயணம் என்று
பதிலின்றி ஓடியது மழைத் தண்ணீர் குடித்து நிறைந்து திருப்தியில் மண் எங்கே போகிறாய்
என்றது மண் பதிலின்றி ஓடியது மழைத் தண்ணீர் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட இலை
கேட்டது எங்கே உன் பாதை போகிறது ? நீர் எதுவும் சொல்லாது ஓடிக்
கொண்டிருந்தது. யாரைத் தேடி ஓடுகிறதோ என்று அனைவரும் வியந்தனர் மனிதன்
ஒருவனைக் கண்டது தண்ணீர் நீ உழவனா என்று கேட்டது தண்ணீர் இல்லை நான் மனிதன்,
உனக்கு என்ன வேண்டும் ? நான் உழவனைத் தேடி வந்தேன் நீ உழவனில்லை உன்னுடன்
எனக்கு கதையில்லை நான் போகிறேன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மனிதனும்
நீரோட்டத்துடன் ஓடினான் என்ன வேண்டும் என்றது தண்ணீர் நான் உழவனாக என்ன
தகுதி வேண்டும் ? திருக்குறளை நீ படித்ததில்லையா ? முதல் அதைப் படி உழுதுண்டு
வாழ்வார் முன்நின்று உாிமையுடன் வாழ்வார் மற்றவர் அவரைப் தொழுது பின்
செல்வார் நீ அந்த உழவனானால் நீ முன்னுாிமை பெற்று நிற்பாய் ஆக மனிதாில் நீ
உயர்ந்தவன் ஆவாய் சொல்லிக் கொண்டு ஓடிய தண்ணீர் நதியிடம் சென்று சரணடைந்தது
அந்த நதிக் கரையில் ஒருவன், அவன் உழவன், ஆம் அந்த தண்ணீர் சொன்ன அறிவுரை
கேட்டு உழவனான மனிதன். உழவனைத் தேடி ஓடியது அந்த புதிய தண்ணீர் நதி

Pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி