முழுமை

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

காளி நேசன்



உலகில் எதுவும் முழுமையற்றது என்று
உன்னிடத்தில் உரைத்த கணத்தில் உதித்த
ஒரு பறவையின் பாடல் கேட்ட
நினவுடன் பதித்த மரக்கன்று
ஓங்கி உயர்ந்து நிற்க்கிறது உயர் காதலை போல!
எதையோ எதிர்பார்த்து உறைந்து நிற்க்கிறது
மரமாக எங்கும் நகராமல்
ஒரு காதல் நினைவை போல!
அதில் வந்தமரும் பறவைகள் கீதமாக இசைக்கும்
காலத்தில் உறைந்து நிற்க்கும் ஒரு காதலை!
காற்றில் மிதந்து வரும் அக்கீதத்தில்
உயிர்த்தெழும் ஒரு முழுமையான இன்மை!

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்

முழுமை

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

பவளமணி பிரகாசம்


இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை
இடர் நிறைந்து போனது புதுக்கவலை
இன்பமாய் இளமையில் துவங்குவது
இடையிலேன் தடம் புரண்டு போகுது
மூழ்கின்ற போர் சூழலிலே
மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே
உறவை முறிக்கத் துடிக்கும் உணர்விலே
உறைந்து கிடக்குதோ ஓருண்மை
“நாம்” என்று பன்மையில் ஒருமையுடன் எண்ணாமல்
“நான்” என்று கோலமயில் ஒருமையில் எண்ணுவதால்
அடுத்தவன் கை கொடுக்க காத்திருக்க
இனியிது ஆயுட்பந்தமல்ல
அணங்கோ அடுக்களைக்குள்
அடைந்து கிடக்கும் அடிமையல்ல
மாற்றியெழுதிய இவ்விலக்கணமே
மாற்றுது மதியை
மாலை மாற்றும் முறையேன் என்று
எழுதுது விதியை
தளையென்று எண்ணிட தலைப்பட்டபின்னே
தலைமுறையொன்று தடுமாறுவதென்னே
கொடிக்குக் காய் பாரமானது கொடுமை
பூக்காத பெண்ணே உனக்கேது முழுமை

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்