ருத்ரா
விக்கிலிங்கபுரத்திலெ இருந்து
அம்பாந்தரத்துக்கு வந்துட்டா
அங்ஙனெ இருந்து
ஊர்க்காடு
செல்லும் பாதேல
தாம்ப்ரபரணிக் கரைக்கு
வல்லாட்டு போட்டாப்ல
கெடக்கும் சாலெ அது.
பக்கத்துல
மல மேல இருக்கும் சாத்தா
பளிங்கு பாய்
விரிச்சாப்ல ஓடுற
தண்ணிய
ஊடுருவிப் பாக்கும்.
தல உச்சியிலே
எலிவால் பின்னல்
போட்டமாதிரி
ஆட்டி ஆட்டி
ஆடுற நாணப்புல்லுக
தண்ணிக்குள்ள
தகிடுதத்தம் போடுறதயும்
பாக்கும் அது.
நீட்ட நீட்டமா
வளந்த அந்த புல்லுக
தொட வரைக்கும்
žலைய தூக்கிகிட்டு
ஆத்துக்குள்ள
நடக்குற
பொண்டுகளப் போல
தோணும்
அந்த சாத்தாவுக்கு.
ஆத்துக்குள்ள
கொத்து கொத்தா
போய்ட்டிருக்கும்
அயிரைகூட்டங்களை
தன் முண்டக்கண்ணாலயே
பாத்து பொரிச்சு
குழம்புவச்சு சாப்ட்ரதைப்போல
அதுக்கு
ஒரு பூதப்பார்வை!
அக்கரையில
கல்டகுருச்சி ஊரு
படித்துறையிலே
சலவைக்காரங்க
வீசி வீசி அடிச்சு
தொவக்கிற
துணிகள்ள கேக்குற
தூரத்து தாளங்க தான்
சாத்தாவுக்கு தாலாட்டு.
எதுக்கால
சாமியாடறவ
துண்இரு வீசுனாலும் சரி
வேப்பங்கொள
அடிச்சாலும் சரி
முட்டைய ஊதி
கப்பூரம் கொளுத்துனாலும் சரி
சாத்தா பாட்டுக்கு
தூங்கிட்டு தான் நிக்கி.
அந்த சந்திப்பின்
ஆலமரத்து நிழலில்
குட்டியாய்
இன்னொரு
‘சொள்ள மாட சாமி ‘
புதிதாய் வர்ணம் பூசிய
வெட்டரிவாளை
தூக்கிப்பிடித்துக்கொண்டு
நின்றிருந்தார்.
அறுவாளின் கூர்முனை
வானத்தை
குத்திக்கிழித்ததில்
கிழிந்த மெத்தையிலிருந்து
சிதறிய பஞ்சுகள் போல்
மேகங்கள்.
பீடத்தில்
பிஞ்சுகளாய்
குறும்பாடுகள்.
பீடவிரிசலில்
நீண்டு செழித்த
புல்கற்றைகளை
புசித்துக்கொண்டு
தன் ‘கோலி உருண்டை விழிகளில் ‘
சில கனவுகளின்
சித்திரப்பார்வைகளோடு
அவை அங்கு
திரிந்து கொண்டு நின்றன.
அந்த மேடையின்
இன்னொருபக்கம்
தோல் சுருங்கி
எட்டாய் மடிந்து கிடந்த
ஒரு தொண்ணூற்று
வயதுக்கிழவன்
படுத்துக்கொண்டே
கத்திக்கொண்டிருந்தான்.
‘எலெ மாசானம்
அந்த ஆடுகளப் புடிச்சு
கட்டிப்போடுலெ
இன்னும் ரெண்டு நாள்லெ
கொடெ வருதுலெ. ‘
மானžகமாய்
பம்பைக்கொட்டு உறுமலும்
பூசாரியின் வெட்டுக்கத்தியும்
அந்த கிழட்டு நாக்கில்
ஜொள் ஊற வைத்தது.
குரலைக் கேட்டு
வெறித்த ஆடுகள்
கிழவனையே
உற்றுப்பார்த்தன.
ஆவேசங்கொண்டு
ஒரு மாறுதலுக்காக
அந்த ஆடுகளின்
கனவுக்காட்சிகள்
தலைகீழாய் மாறின.
அத சூச்சுமமா பாத்த
மலமேல இருக்கும்
அந்த சாத்தாவுக்கு கூட
மொகம் தொங்கிப்போச்சு.
ஏன் ?
இது தான்
அந்த ஆடுகளின் கனவு..
கிழவன் கழுத்தில் மாலை.
மஞ்சத்தண்ணி
தெளிக்கப்பட்டு
வெட்டுக்கட்டையில்
அவன் கழுத்து
அமுக்கிப்பிடிக்கப்பட….
பூசாரியாய் வந்த
ஒரு முரட்டு வெள்ளாட்டின்
கையில்
பளபளப்பாய்
ஒரு வெட்டரிவாள்!
—-
epsi_van@hotmail.com
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- இசை கேட்டு…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதம் ஜூன் 10, 2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- கடிதம் ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் – ஜூன் 10,2004
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- எலக்ட்ரான் எமன்
- கவிதைகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- நஞ்சில் விளையும் பருத்தி
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- போர்வை
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- பெண் ஒன்று கண்டேன்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- பிறந்த மண்ணுக்கு – 5
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- அம்மாவின் கடிதம்!
- நாத்திக குருக்கள்
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- பறத்தல் இதன் வலி
- நிழல்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்