மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை



பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சி உரைநடை முதல்வர்களில் ஒருவர் வ.ரா. என்ற வ.ராமசாமி அய்யங்கார் ஆவார். அனைவராலும்அன்புடன் வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ. ராமசாமிஐயங்கார் சிறந்த நாவல் ஆசிரியர் மட்டுமல்லர்; வாழ்க்கை வரலாற்றாசி¡¢யர்; பல கட்டுரைகளைத் தந்த உரைநடை நூலாசி¡¢யர்; பத்தி¡¢க்கைகளில் பணியாற்றிய இதழாசி¡¢யர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்; வாழ்க்கைச் சித்திரம் என்ற புத்திலக்கியத்தின் வகையையும், உயர் கற்பனை நாவல் என்னும் இலக்கியத்தின் வகையையும் முதன் முதலாகத் தமிழ் மொழிக்கு அறிமுகப்படுத்தியவர்; அனைத்திற்கும் மேலாகப் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்லிலும், செயலிலும் கடைபிடித்து வாழ்ந்து காட்டிய வீர,தீர மிக்க இந்திய விடுதலைப் போராட்டவீரர்; இங்ஙனம் பன்முகத் தன்மை கொண்ட உன்னத இலக்கியச் சிற்பியாகத் திகழ்ந்தார் வ.ரா.

வ.ரா.அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் திங்களூர் என்ற சிற்றூ¡¢ல் 1889-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் வரதராஜ ஐயங்காருக்கும் பொன்னம்மாள் என்பாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.உத்தமதானபுரத்தில் உள்ள திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் தமது எட்டுவயதில் திங்களூ¡¢ல் உள்ள பள்ளியில் சேர்ந்து வ.ரா. கல்விகற்றார். பின்னர் திருவையாற்றிலுள்ள சென்டிரல் உயர்நிலைப்பள்ளியில் மேற்படிப்புப் படித்தார். பின்னர் தஞசாவூ¡¢ல் உள்ள புனித பீட்டர் கல்லூ¡¢ல் சேர்ந்து எப்.ஏ. பயின்றார். தேர்வில் தோல்வியுற்ற வ.ரா. மனம் வருந்தி, கல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் பானர்ஜி நடத்தி வந்த தேசீயக் கல்லூ¡¢யில் சேர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் கலகத்தா சென்ற அவர், தகுந்த பா¢ந்துரையின்மையால் கல்லூ¡¢யில் சேர இயலாது ஊர் திரும்பினார். அத்துடன் அவர் கல்வி கற்பதனை நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரது மனம் தீவிரமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டது. அப்போது திருவரங்கத்தைச் சார்ந்த கொடியாலம் ரெங்கசுவாமி ஐயங்கார் விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு தேசியவாதிகளுக்குப் பொருளுதவி செய்து வந்தார். ஒருமுறை அவ்வாறு புதுவையில் இருந்த அரவிந்தருக்குப் பொருளுதவி செய்ய விரும்பிய அவர் அதற்கு வ.ரா.வைப் பயன்படுத்திக் கொண்டார். வ,ராவும் முழுமனதுடன் இதனைச் செய்தார். 1911-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வ.ரா. புதுச்சோ¢யில் பாரதியைச் சந்தித்தார். இ·து வ.ரா.வின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். பாரதியைச் சந்தித்த வ.ரா.வை அந்நிகழ்ச்சி பாரதிப் பித்தராக மாற்றியது. 1914-ஆம் ஆண்டு வரை புதுச்சோ¢யில் தங்கி பாரதிக்குச் சேவை செய்து அவருடன் உடனிருப்பதில் தம்மை வ,ரா, ஈடுபடுத்திக் கொண்டார். இத்தொடர்பு பின்னர் பாரதியின் இலக்கியத் தரம் குறித்து வ,ரா.எழுதுவதற்கு உதவியாக இருந்தது. இதே ஆண்டில் வ.ரா. பங்கிம் சந்திரா¢ன் குறுநாவலை மொழிபெயர்த்து ஜோடிமோதிரம் என்ற பெயா¢ல் தமது முதல் படைப்பாக வெளியிட்டார். வ.ரா.வின் இந்த மொழிபெயர்ப்பைக் கண்ணுற்ற பாரதியார்,”வசனத்திற்கு வ.ரா. போதும். கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன் ” என்று வ.ராவிடம் கூறி உற்சாகப்படுத்தினார். இதனை மணிக்கொடி ஸ்ரீனிவாசன் அவர்கள், வ.ரா.வாசகம் என்ற தமது நூலில் (ப.6) குறிப்பிடுகின்றார்.

காங்கிஸ் இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபட்டார். 1910-ஆம் ஆண்டு அலகாபாத் நகா¢ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட வ.ரா. தொடர்ந்து காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் தாம் பணியாற்றிய பத்தி¡¢க்கைகளில் அதைப் பற்றி வி¡¢வாகவும் எழுதினார். இந்த அனுபவ அறிவு அவருக்கு பின்னாளில் காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் ஆண்டு நிறைவு ஆகிய நூல்களை எழுத உதவியது. காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் வ.ரா. அவருடன் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்தார். 1919-ஆம் ஆண்டு காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது, பாரதியார் அவரைச் சந்தித்தார். இந்தச் செய்தியைத் தமிழர்களுக்கு முதன்முதலாகச் சொன்னவர் வ.ரா.வே யாவார். இந்த நிகழ்ச்சியின்போது வ.ரா. உடனிருந்தார். காவலாக நிறுத்தப்பட்டிருந்த வ.ரா.வைத் தாண்டிக் கொண்டு பாரதியார் உள்ளே சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சியை வ.ரா.தமது மகாகவி பாரதியார் என்ற நூலில், பாரதியாரைத் தமிழ்நாட்டுக் கவிஞர் என்று முறையாகக் காந்தியடிகளுக்கு ராஜாஜி அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை, என்று கூறி, “பாம்பின் கால் பாம்புக்குத் தொ¢யும் என்பார்கள். மேதாவியான காந்தி, மேதாவி பாரதியாரை, அவரது முகப்பொலிவிலிருந்தே தொ¢ந்து கொள்ள முடியாதா? மேலும் தங்கள் இயக்கத்தை ஆசிர்வதிக்கிறேன் என்று உள்ளன்போடு பாரதியார் சொன்னபோது தமது இயக்கத்தை ஆசிர்வதிப்பதாகச் சொல்லக்கூடிய ஒருவர் பொ¢ய மனிதனாகத் தான் இருக்க வேண்டும் என்று காந்தி முடிவு செய்து கொள்ளமுடியாதா?” என்று எழுதுகின்றார். வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து நுட்பமாக மனிதச் சித்திரங்களை உருவாக்கக்கூடிய வ.ரா.வின் எழுத்தாற்றலுக்கு இந்த நூல் நல்ல சான்றாகத் திகழ்கின்றது.

1930-ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புசத்தியாகிரகப் போராட்டத்தில் வ.ரா. பங்கு பெற்று அதற்காக ஆறுமாத காலம் தண்டனையடைந்து, அதனை அலிப்பூர் சிறையில் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின் தீவிரவாத அரசியலை விட்டுவிட்டு மிதவாத அரசியலுக்குத் திரும்பினார். சிறையிலிருந்தபோது அவர் நிறைய எழுதி அதனை ஜெயில் ¨டா¢ என்ற பெயா¢ல் தொகுத்து வைத்திருந்தார். ஞானபானு போன்ற பல்வேறு இதழ்களில் வ.ரா. எழுதி வந்ததோடு பல்வேறு பத்தி¡¢க்கைகளில் ஆசி¡¢யராகவும், உதவி ஆசி¡¢யராகவும் பணியாற்றினார்.

மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக வ.ரா. திகழ்ந்தார். மணிக்கொடியில் பணியாற்றியபோது வ.ரா. மணிக்கொடிப் பரம்பரை என்ற இளைஞர் கூட்டத்தையே உருவாக்கினார். பி.எஸ் ராமையா, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, சிட்டி, ந.சிதம்பரசுப்பிரமணியன்.தி.ஜ.ரங்கநாதன் உளிட்ட பலருக்கும் வ.ரா.வழிகாட்டியாக விளங்கினார். அதனாலேயே டி.எஸ்.சொக்கலிங்கம், “இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவது வ,ரா.விற்கு இயற்கையான குணம். புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் கொடுத்து, மேலும் மேலும் தூண்டிவிட்டவர் அவர்தான். அவரைச் சுற்றி எப்பொழுதும் எழுத்தாளர் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அவருடைய ஆதரவான மொழிகளைக் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் பொ¢ய எழுத்தாளர் என்று நினைக்கும்படி தன்னம்பிக்கை ஏற்படும்” என்று வ,.ராவைப் பற்றி குறிப்பிடுவதிலிருந்து அறிய முடிகின்றது. வீரகேசா¢ என்னும் பத்தி¡¢க்கையில் பணியாற்றுவதற்காக வ.ரா. இலங்கை சென்றார். அங்கிருந்தபோது தம்முடைய நாற்பதாவது வயதில் பாஞசாபியைத் தாய்மொழியாகக் கொண்ட வேற்று இனத்தவரான புவனேசுவா¢ அம்மையாரைத் மனம் விரும்பிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை அந்த நாட்களில் அவருடைய நெருங்கிய நண்பர்களும்,உறவினர்களும் ஏற்றுப் பாராட்டினார்கள். மிக இளம் வயதிலேயே சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்த அவர் சாதியின் அடையாளமான பூணூலை கழற்றி எறிந்தார். பாரதியார் பாண்டிச்சோ¢யில் வாழ்ந்தபோது, அவருடன் இருந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதனை வ.ரா.,”எனக்கு அச்சா¢யமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான், என் பூணூலை எடுத்துவிடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார். அவரோ வெகு காலத்திற்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார்” என்று மகாகவி பாரதியார் நூலில் (ப.138) குறிப்பிடுகிறார். இவ்வாறு சாதிச் சின்னங்கள், பழைய சம்பிரதாயங்கள் இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்துச் சமூகமாற்றத்திற்காக உழைத்து, தாம் கூறியபடியேதம்முடைய வாழ்க்கையில் வ.ரா. வாழ்ந்து காட்டினார்.

வ.ரா.நான்கு நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகள் கற்றது குற்றமா? என்ற பெயா¢ல் தொகுப்பாக வெளிவந்துள்ளது. 1945-இல் வ.ரா. கோதைத்தீவு என்ற நாவலைப் படைத்தார். “உயர் கற்பனை” நாவல் என்ற வகையில்இது அமைந்தது. வ.ராவின் இந்நாவலுக்கு பாரதியா¡¢ன்ஞானரதம் முன்னோடியாக அமைந்தது. பத்தி¡¢கைகளிலும் வானொலி உரையாகவும் வ.ரா. எழுதிய கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் மறுமலர்ச்சி உடைநடையின் முன்னோடியாகவா.ரா.வை இனங்காட்டுவதாக அமைந்துள்ளன.

“நடைச்சித்திரம்” என்ற பெயா¢ல் தமிழுக்குப் புதிய இலக்கிய வகையை வ.ரா. மணிக்கொடி மூலம் உருவாக்கினார். பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய சித்திரங்கள் அவை. வாசகனை முன்னிலைப்படுத்தி அவனிடம் சித்திரங்கள் அறிமுகப்படுத்தும் முறையில் எழுதப்பட்ட படைப்பிலக்கியம் அல்லாத இந்தப்புதிய வகைஇலக்கியத்திற்கு இணையாக மற்றொன்று தோன்றவில்லை எனலாம். இங்ஙனம் நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறுஇலக்கியங்களைப் படைத்து வ.ரா. தமிழன்னைக்கு அணிசெய்தார்.

வ.ராவின் இல்லற வாழ்க்கை அமைதியாகவும், இனிமையாகவும் கழிந்தது எனலாம். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தது. முதல் மகன் இரண்டரை வயதிலும், இரண்டாவது மகன் பிறந்த சில நாட்களுக்குள்ளும் இறந்து போயினர். இத்தகைய இழப்புகளால் வ.ரா. மனந்தளராது வாழ்ந்தார்.1948-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராசர் தலைமையில் வ.ராவுக்கு மணிவிழாக் கொண்டாடப்பட்டது.அவ்விழாவில் தமிழக மக்களால் வழங்கப்பெற்ற பணமுடிப்பைக் கொண்டு சொந்தமாக வாங்கிய வீட்டில் வ.ரா.தமது இறுநாட்களைக் கழித்தார். 1949-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் வ.ராவிற்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஏற்கனவே ஆஸ்துமா நோயினால் போராடி வந்தவருக்கு இந்த விபத்து சுமையாயிற்று. இருப்பினும் வ.ரா. துன்பங்களைப் பொருட்படுத்தாது வாழ்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு 29,8,1951 அன்று பகல் உணவிற்குப் பின்னர் வழக்கம் போலக் கண்ணயர்ந்த வ.ரா. கண் விழிக்கவே இல்லை பிற்பகல் அவரை எழுப்பப்போன அவரது மனைவியார் ஆவி பி¡¢ந்த உடலைக் கண்டார். இதனை, ” அந்தக் குடும்பத்தில் சூ¡¢யன் அஸ்தமித்து விட்டது. வ.ரா. இருந்த இடத்தில் இரா (இரவு) வந்து கவ்விக் கொண்டது அகால மரணம்” என்று வ.ரா. வாசகம் நூலில் அதன் ஆசி¡¢யர் மணிக்கொடி சீனிவாசன் உருக்கமாக வருணிக்கிறார். தம் சொந்த இன மக்களால் புறக்கணிப்பும், முன்னால் முகத்துதியும் பின்னால் கேலிப்பேச்சும் என அவர்பட்ட துன்பங்கள் பல. எனினும் வ.ரா.என்ற மாமனிதா¢ன் வாழ்க்கை சமூக மாற்றங்களுக்கான போராடத்திற்காகவே கழிந்தது. பாரதியிடம் அவர் கொண்ட ஈடுபாடு அவரைச் சிந்தனையிலும், செயலிலும் புரட்சி மிக்கவராக ஆக்கியது. வ.ரா. என்ற புத்திலக்கியச்சிற்பி தமிழ்நாட்டுக்குச் செய்த தொண்டுகளில் எல்லாம் சிறந்த தொண்டு பாரதியா¡¢ன் பெருமையை உலகறியும்படி செய்ததாகும். பாரதியா¡¢ன் பெயர் உள்ள வரையில் வ,ராவின் நினைவும் தமமிழர் உள்ளத்தை விட்டு அகலாது என்ற கல்கி அவர்களின் கூற்றுப்படி வ.ரா. மறைந்தாலும் தமிழர்தம் நெஞ்சங்களில் அவர் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.