மயிற்பீலிகள்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

அருண்பிரசாத்


கானலின்
தெளிவற்ற பிம்பங்கள்
கொடிய பாலையின்
நிகழ் வீதிகளில்.

சிறகு முளைக்கும்
சக்கரங்களாய்
வேட்கையின் கிளர்வுகள்.

நீர்மை அடர்ந்த
மயிற்பீலிகளின்
எடையேற்றங்களில்
அச்சு முறிகிறது.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்