மடந்தையொடு எம்மிடை நட்பு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

கவிமாமணி யிலந்தை ராமசாமி


போர்வையின் உள்ளிருந்து-உடலம்

..புரண்டு கொண்டிருந்தேன்;

பார்வையி னால்தாக்கியே-ஒரு

..பாவை நடைபயின்றாள்.

..

நீரைப் பெறுவதற்கு-குழாய்ப்பிடி

..நீளப் பிடித்தடித்தாள்;

யாரும் உதவாரோ ?-கைகள்

..ஆழ வலித்திடுமே!

..

உதவி செய்திடலாம்;-ஆனால்

..உதடு-அ சையவில்லை;

யிதயமே டையிலே-வலியை

..ஏற்றுத் துடித்திருந்தேன்.

.

குடம் யிடுப்பினிலே-தூக்கிக்

..கோதை நடக்கையிலே

யிடம் பெயர்ந்தபடி-யிதயம்

..என்னை விலக்கியது!

..

அவளின் சேலையினை-மெல்ல

..அசைத்த காற்றுதான்

தவழ்ந்து வந்தெனையே-சற்றே

..தழுவிக் கொண்டதடா!

..

பக்கத்து வீட்டினிலே-அவளும்

..பாடம் நடத்துகையில்,

தக்கத் தகதிமிதோம்-மனம்

..தாவித் தடம்பதிக்கும்;

..

படித்ததெல் லாம்மறந்தே-நானும்

..பையனாய் மாறிடுவேன்;

பிடித்ததெல் லாம்கசக்க- ‘ஒன்றே ‘

..பிடித்த தாயிற்று!

..

கனவு ராச்சியத்தில்-என்றும்

..கற்பனை ஆளுகைதான்!

யினிமை குன்றவில்லை-மனம்

..எதிலும் ஒன்றவில்லை

..

பின்னால் அவள்தானே-வாழ்க்கைப்

..பேற்றின் துணையானாள்;

யின்னாள் அறுபதிலும்-அவளே

..என்னுளம் ஆளுகின்றாள்!

^^^^^^^^^^^^^^(யிலந்தை..)

subbaierramasami@yahoo.com
அனுப்பியது : sakthia@eth.net

Series Navigation

கவிமாமணி யிலந்தை ராமசாமி

கவிமாமணி யிலந்தை ராமசாமி