மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

நட்சத்திரவாசி


என் தலைமறைவு பிரதேசத்தில்
நீராகி போகிறதுன் நினைவின் ஒரு சுழி
அகாலத்திலிருந்து நீளுகிறதுன் கரம்
கழுத்தை இறுக்கி விழியை பிதுக்கிக்
கொள்ள செய்யும் வேகம் அசுரம்
தப்பிக்க வழியின்றி ஓடியலைகிறேன்
காற்றாய் வருகிறாய்
கொடுங்கோலெடுத்து வீசுகிறாய்
மேனியிதுவோ என பதைக்க
ரத்தம் கசிய ஓடி ஒளிகிறேன்
சூரிய மறைவு பிரதேசத்தில்
சட்டென நிலவாய் வந்துதித்து
கொடுங்கனல்களை நிரப்பிவிடுகிறாய்
என் கபாலத்தின் புதரிடுக்கில்
சொற்கள் கசைகளாகி அடித்து தள்ளுகிறது
ஈனக்குரலில் முனங்கி பிசாசின் தோற்றம்
கொண்டு நடுவிரவில் புகுந்து கொண்டேன்
சகல எத்தனிப்புகளையும் தாண்டி
ஆந்தையின் கண்களாக மாறி
அபசுரம் எழுப்புகிறதுன் அடிக்குரல்
ஜந்தாவது குரலில் வெளிப்பட்டு போனேன்
என்னையும் அறியாமல்
வெறும் பிண்டமாய் மயிர்களற்ற சதையுமாய்
மண்ணில் புரள்கிறேன்
மஞ்சள் வெளிச்சமாய் வந்து
மண்ணை புரட்டி விடுகிறாய்
மெல்ல உயிர் கசிந்திர்ருக்க கிளியாக்கி
கொண்டு சென்றாய் உன் காட்டுக்குள்

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி