லூசா வாலென்சூலா (அர்ஜென்டினா) தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன்
என்முன் கிண்ணத்தில வாதாங்கொட்டைகள். அவற்றை ஒண்ணொண்ணாக கை தன்¬ன்பபோல எண்ணுகிறது. மனம் எணணுகிறது, நல்லகாலங்களும் வ்நது போயிருக்கு… இல்லையா மக்களே? என் தோளில் நானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறேன், செல்லமாக! பளாரென்று உற்சாகப் பாராட்டு முதுகில் முன்ன வாங்கியதைப் போல, அது இப்ப முடியாது. என் கிழட்டு யந்திரம் லொடலொடத்திட்டது. நல்ல சாப்பாடு கிடைப்பதே குதிரைக்கொம்பாய் ஆகிவிட்டது. இடத்தைக் காலி பண்ணுய்யா, என கத்துகிறார்கள். பூமியில் பிறத்தியாருக்கு நான் இடம் விட வேண்டும். என் வயலினை அதன் பெட்டிக்குள் வைக்கிறேன், அதாவது என் முகத்தைத் தோள்களுக்குள் புதைத்துக் கொள்கிறேன் – என் ஒரே சொத்து இதுதான், என் சரீரம்… கொஞ்சம் கதகதப்பு வேண்டியிருக்கிறது. சுரங்க ரயில் நிலையம் இத்தனை குளிராது..
நிலையம் சனக்காடாய்க் கிடந்தது. சொலவடை இருக்கே, குழம்பிய குட்டையில மீன்பிடி… பிரயாண டிக்கெட் வாங்கின ஆளுங்களோட ஊடே சுதந்திரமாகப் புகுந்தேன். எவனும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஒரே கூச்சலும் ஓடலுமாய் இருந்தார்கள். யாரோ அலுத்துக் கிட்டான். –
”தூத்தெறி. ரயிலுக்கடில விழ இந்த நேரமாப் பாத்தான் பார். ஈரமில்லாப் பாவி. மனுசாள் வேலைக்குப் போவத் தாவலயா. நேரம் பாத்து சாவ வர்றான். யாருக்கும் இப்டிக் காரியத்துக்கு உரிமையே கிடையாது. முதலாளி என்ன சொல்லப் போறானோ, ‘எப்பவும் எதாவது நொண்டிச்சாக்கு உனக்கு’ன்னுதான் நம்மளாண்ட அவன் சொல்வான். ஏன்டா விழணும்னா என் ரயிலுதான் கெடைச்சதா உனக்கு? இன்னிக்கு நான் கட்டாயம் லேட்டுத்தான். எல்லாம் அந்தப் பைத்தாரன் பண்ன தப்பு…”
நான் யார் பக்கம், அந்தக் கடுகடுக்கிற ஆளா, தற்கொலைக்காரனா… யார் பக்கம் என எனக்கே ஒரு குழப்பம். சில வருஷங்களுக்கு முன்னன்னா நான் அந்த முணுமுணுப்பான் பக்கம். இப்ப நான் தற்கொலைக்காரன் பக்கம். ச், அது சரியில்லாம இருக்கலாம். சூட்டும் டையுமா வகுப்புக்குள்ள சரியான நேரத்தில் நுழைகிற வாத்தியாரா நான் இருந்தேனே, அப்ப தற்கொலை செய்திட்டிருக்கணும். இப்ப, எனக்கு இன்னா போச்சு, நோவாம வாய்வார்த்தையா எவனையாச்சும் கட்டியேறலாம். கெட்ட வார்த்தைகள் மனசுக்கு ஆறுதல் அளிக்கின்றன. என்னாண்ட இழக்க ஏதுங் கிடையாது. நீங்க எதையும் உங்களாண்ட வெச்சிக்கிட்டு துணிவா ஒரு காரியம் பண்ண ஏலாது, உங்க எதிர்ப்பு சோனியாத்தான் இருக்கும். அது அடித்தொண்டைலேர்ந்து கிளம்பாது. எவனாவது நம்மத் திருப்பி அடிச்சிருவான், பூமராங் ஆயிரும்னு உள்ள கிடுகிடுக்கும், எல்லார்க்கும் இது தெரியும். ஆனால் இப்ப – என் கூடாது? எனக்கு எதைவேணாப் பரிட்சை பண்ணிப் பார்க்கலாம். எவனையாச்சும் மூக்குல குத்தலாம். இத்தினி நாளா கோழையாவே வாழ்ந்திட்டேன். ஒரு எகிறல் – திரும்பப் பிறக்கறா மாதிரி இருக்கும். என் நாடி நரம்பு சுதாரிக்கும்… கிளம்புறா மவனே!…
தற்கொலையா, கனவான்களே! என்ன ஈவு இரக்கமில்லாத விவகாரம். நேரங் காலத்துக்கு நாம வேலைக்குப் போகண்டாமா, அந்த அக்கறையில்லாத பாவி. உழைப்புன்னா என்னன்னே அறியாதவன். புருவத்துலேர்ந்து வியர்வை கொட்டற மாதிரி பாடு படறதுன்னா என்ன கண்டான் அவன்? அத்தனை ஒஸ்தியா யோசிக்கிற அல்லது வெறும் உழைப்பாளித்தோழர் புருவங்கள், இன்னாலும்… மன்னிக்கணும். நான் சொல்ல வந்ததை விட்றப்டாது… தற்கொலை, துரைமார்களே, பெண்மணிகளே, சோத்துப்பாட்டுக்கு புருசமக்கள் வருமானம் பத்தலன்றச்ச நீங்க வேலை செய்ய வர்றீங்க. பாதாள ரயில் ஒண்ணும் ஒடலன்றச்ச, நீங்க மேல்தளத் தரைக்கு வரீங்க. வேற எப்படியாவது, வண்டிபிடிச்சோ பஸ் பிடிச்சோ வேலைக்கு ஓடியாக வேண்டீர்க்கு, அதிக நேரமும் எடுக்குது. துட்டுக்கும் கேடு. செத்த பாவி இதையெல்லாம் மதிக்கவே இல்ல, கால
ங் கார்த்தால வன்ட்டான் சாவ, என்ன பண்ணீர்க்கணும், மத்தவாளுக்கு இடைஞ்சல் இல்லாம… ராத்திரிக்கு ஒரு பத்து மணிக்கு… சோம்பேறிகள் ரயில்ல வருவானுங்க, அந் நேரத்துல ரயிலுக்குத் தலை கொடுக்கலாம் இல்லியா? என்னாத்துக்கு இந்நேரம் பாத்து இதெல்லாம், அவனைப் பத்தி நாலு பேர் பேசண்டாமா, அதுக்குத்தான்றேன்…
”ஏய் என்ன செஞ்சிட்டிருக்கே? ஊளையிடாதே. உன்னைக் கைது செய்யறேன்.”
”ஒரு நல்ல குடிமகனா நான் என் எதிர்ப்பைச் சொல்லிட்டிருந்தேன் ஐயா…”
”தெரியுது. தெரியுது.”
/2/
தெரிஞ்ச விஷயம் – எனக்காக நான் குரல் கொடுக்கவில்லை. ஆனா இப்ப கம்பியெண்ணுகிறேன், எல்லாரும் சொல்றா மாதிரி இது அத்தனை குளிரா இல்ல. என்னோட இடத்துக்கே வந்தா மாதிரிதான் இருக்கு. சுவர்ல என் பேரை ஏற்கனவே பொறிச்சிட்டேன்!¢ பொதுவா போலிசைப் பத்தியும், குறிப்பா கார்ப்போரல் ஃபிகரஸ் பத்தியும் புரியாதபடி கிறுக்கினேன். அது போக, என்ன அமளிதுமளியா இருந்தது அங்கே, ஒரே தொந்திரவு. முக்கல் முனகல், அந்த சாபங்கள், அந்த ராத்திரியில் எங்கருந்து சத்தம் வருது, ஏன் வருது, ஒண்ணுந் தெரியாது.
அந்தக் காலத்தில் நான் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஸ்பானிய மொழி வாத்தியார். ஆக என்ன சொல்றேன்னு நான் அறிவேன், குறைஞ்ச பட்சம் என்ன சொல்லணும்னு தெரியும் எனக்கு. அந்த ராத்திரி அலறல்கள் என்னை எழுப்பி விட்டன. ரயிலடியில் எகிறினானே தற்கொலையை எதிர்த்து, அதே அடித்தொண்டை ஆவேசத்தைக் கேட்டேன். நானும் அளப்பறையக் குடுக்கலாம்னு இருந்தது. மனசு இப்ப ஒருநிலையா இல்ல, என்னோட தங்கியிருந்த ஆளுகளோட பெக் ஏத்தின மப்பு. இடத்தைத்தான் என்னுடன் அவங்க பகிர்ந்து கிட்டாங்களே யழிய நோக்காட்டை அல்ல. ராத்திரிக்கு ராத்திரி அங்கத்திய அலறல்கள் என் முதுகுத்தண்டை சிலிர்க்க வைத்தன. நிலைமை மோசமாகிக் கொண்டே போனது. உள்ள இருக்க முடியல… ஏய், தண்டனை குடுக்கணும்னா என்னை ஆஜர்படுத்துங்க, இங்கியே வெச்சிட்டிருந்தா எப்டி, என்று நான் முரண்டினேன். இது முறையான விசாரணை அறை அல்ல.
ஒருவழியா வெளிய விட்டானுங்க. விடறதாவது, ம். தூக்கி என்னை வீதில கடாசினாங்க. சோறு இனி இல்லை… ஜெயில் சாப்பாடு கண்றாவி, ஆனா மணியடிச்சாச் சோறு. மூட்டைப்பூச்சியற்ற போர்வையையும் குடுத்துட்டு வந்தாச்சு. அட இனி போர்வைக்கே வழி கிடையாது. தினசரி வயித்துப் பாட்டுக்கு இனி எங்க துட்டுத் தேத்த.., அன்றாட அவஸ்தைகளுக்கு வந்தாச்சி. எல்லாம் முன்னப்போல இல்ல இப்ப, ஊரு நாளுக்கு நாள் ஒண்ணுந் தேறாதபடி ஆயிட்டிருக்கு. அட காலைத் தூக்கம், அதுக்கே வழியில்லை, தினப்படி காலமே 8.37க்கு தற்கொலை நிகழுது, எவனாவது ரயில்ல விழுகறான். அத்தோட அந்த நாளோட மீதிப் பொழுதும் திண்டாட்டம்தான்.
ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்.
– ஸ்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில், ஹெலன் லேன்.
கீலீஷீ, னீமீ ணீ ஙிuனீ?
ஙிஹ் லிuவீsணீ க்ஷிணீறீமீஸீக்ஷ்uமீறீணீ
(நானா, பிள்ளைப்பூச்சியா?)
பள்ளிக்கூட வாத்தியார் என்கிறார் ஆசிரியர். இத்தனை சோத்துக் கஷ்டம் எப்படி வந்தது அவருக்கு தெரியவில்லை. பென்சன் கின்சன் வராது போல அந்தூரில். எப்படியிருந்தாலும் இப்படி ‘வெட்டி வீரமணி’ வாழ்க்கையை எப்படித் தேடி வந்தார், விளங்கவில்லை. நகர்ப்புற வாழ்வின் சவால்கள் சாதாரணர்களை மிரட்டுகிறது, ஒரு சம்பளம் பத்தவில்லை, குடும்பம்னா டபுள் இன்ஜின் தேவைப்படுது, எனச் சொல்ல வருகிறார். அந்தக் காலைத் தற்கொலைகள், சிங்கிள் இஞ்சின்காரனாகக் கூட இருக்கலாம். ஸ்பானிய மொழி ஆசிரியரிடம் இப்ப கட்டு தளர்ந்து விட்டது. தெம்பு இல்லை. தற்கொலைக்குக் கூடவும் தெம்பு இல்லைபோல அவர் உணர்கிறார்.
அர்ஜென்டினாவின் முன்னணி பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார் லூசா வாலன்சூலா. பிறந்தது புவனஸ் அயர்சில். ‘கிரைசிஸ்’ என்கிற இலக்கிய இதழின் ஆசிரியை. லா நேசியன் பத்திரிகையின் நிருபரும் கூட. 1958ல் பிரஞ்சு வணிகர் தியோடர் மெர்ஜக்குடன் திருமணம். இலரது முதல் நாவல் (‘கிளாரா’ என ஆங்கிலத்தில் வந்தது) 1966ல் எழுதியபோது இவளது மகள் அன்னா லிசா கைக்குழந்தை. தூங்குகிற நேரத்தில் அதை எழுதியதாக நினைவுகூர்கிறாள் லூசா.
—
storysankar@gmail.com
- மயான பராமரிப்பாளர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- வேத வனம் விருடசம் -50
- திருமணமொன்றில்
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- ஊசி விற்பவன்
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- தோழி
- மாற்றங்கள்
- தம சோமா.
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- தேவதைக்குஞ்சே…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- பயணம்
- Kalima is Mohmedans’ Copyrioght!
- துப்பட்டா
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- பெட்டிக்குள் வயலின்
- பிம்பம்
- தெளிவுறவே அறிந்திடுதல்
- நோன்பு
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- அமைதி
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- பழிக்குப் பழி
- பழிக்குப் பழி – 2
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- சொல் ரசனை
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- கே.பாலமுருகன் கவிதைகள்
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- :நகைப்பாக்கள்:
- மறுசிந்தனையில் ஸகாத்
- ப.மதியழகன் கவிதைகள்
- பார்வைகள்
- அரிதார அரசியல்