பாரதியார் பாதையில்….

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

கவியோகி வேதம்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கவிஞர் போட்ட தடத்தினிலே-இன்று
..கவித்தேர் அழகாய் நகர்கிறது!
சுவையும்,கருத்தும் பரவசமாய்த்-தினமும்
..சொர்க்க வாசல் திறக்கிறது!
..
பக்தி வீதி சமைத்தஅவன்-சந்நதி
..பலர்க்கும் அருளைத் தருகிறது;
செக்கச் சிவந்த சக்தியின் ‘கை ‘-நமக்கே
.. சிறந்த பொருளைக் கொடுக்கிறது!
..
தேச விலங்கின் பூட்(டு)அவிழ-அவன்
..செய்த சாவி தெரிகிறது;
பாசத் தாயை மீட்டுவர-பாரதி
..பதித்த ‘வ்யூகம் ‘ புரிகிறது!
..
அந்த நாளில் சகாதேவன்-கண்ணனை
..அன்பால் பிணைத்த ‘பிடி ‘அறிந்தே,
சந்த ‘மலரால் ‘ இறுக்கிவிட்டான்!-மகாகவி
.. தனித்த வழியைக் காட்டிவிட்டான்!
..
தமிழ்த்தாய் வாழ்த்தும் அவன்கொடுக்க-நாமும்
..சரமாய்ப்,புதிதாய்த் தினம்தொடுத்தோம்!
அமிழ்தம்,அமிழ்தம் அவன்வழிகள்!-ஆழ்ந்தால்,
..அறிவீர், உணர்வீர் ‘கவி-விழிகள் ‘!
*****************
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்