பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

காலித் ஹசன்


அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனிடம் வாக்குறுதி பெற்றார். இதன்படி சி ஐ ஏ-வுடன் ஆஃப்கானிஸ்தானுடன் நெருக்கமாக இணைந்து பணி புரியும். இதற்கு விலையாக அமெரிக்கா பெரும் உதவிகள் வழங்கும். பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும் , ஆனால் அமெரிக்கா கண்டு கொள்ளாமல் இருக்கும். அப்போதே அணுகுண்டு தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் பாகிஸ்தான் இருந்தது.

‘சார்லி வில்ஸனின் போர் ‘ என்ற புத்தகம் முந்நாள் அமெரிக்க மக்கள் பிரதிநிதியான சார்லஸ் வில்ஸன் பற்றியது. அமெரிக்கக் காங்கிரஸ் (சட்டமன்றம்) என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தால், ரீகன் பாகிஸ்தானுக்காக உறுதியாக நிற்பார் என்பதை ஜியா உல் ஹக் நன்கு அறிந்திருந்தார் என்று கூறுகிறது. அமெரிக்கச் சட்டமன்றத்தில் தெற்கு ஆசியாவை கண்காணிக்கும் குழுவின் தலைவராக இருந்த ஸ்டாபன் ஸோலார்ஸ் அவர்கள் பாகிஸ்தானின் நண்பர் அல்லர். அவர் பாகிஸ்தான் சம்பந்தமாக கேள்விகளைக் கேட்டு பாகிஸ்தானுக்குச் செல்லும் உதவியை நிறுத்த தயாரானார்.

1985இல் சிஐஏ பாகிஸ்தானின் அணுகுண்டு திட்டத்துக்குள் நுழைந்து அது எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை அறிந்து அறிக்கையை கொடுத்துக்கொண்டிருந்தது என்று இந்தப் புத்தகம் சொல்கிறது. ஸோலார்ஸ் நடத்திய கமிட்டி விசாரணைகளில், பாகிஸ்தானுக்கு உதவியை நிறுத்தினால், ஆஃப்கானிஸ்தானில் சிஐஏவுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு வருடமும் பல கோடி டாலர்களைக் கேட்டு ஜெனரல் ஜியா ஒரு ரசீதை அமெரிக்காவிடம் நீட்டுவார் என்று சிஐஏ கூறியது. அமெரிக்க தூதராக ஐ.நாவில் பணிபுரிந்து வந்த வெர்னன் வால்டர்ஸ் அவர்களிடம் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்று பொய் சொன்னார்.

அமெரிக்க உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் ராணுவ ஜனாதிபதியை இவ்வாறு பொய் சொன்னதைப் பற்றிக் கேட்டபோது, ‘இஸ்லாமுக்காக பொய் சொல்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது ‘ என்று கூறினார். அமெரிக்கா பாகிஸ்தானை தொடர்ந்து வற்புறுத்தினாலும், பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தைக் கைவிடவில்லை.

இந்தப் புத்தகத்தின் படி, சார்லஸ் வில்சனே பாகிஸ்தானையும் இஸ்ரேல் நாட்டையும் ஒன்றாக வேலை செய்ய வைத்தவர் என்று கூறுகிறது. ‘இருவருக்கும் பொதுவான ஆர்வமுள்ள விஷயங்களை இரண்டு நாடுகளும் சேர்ந்தே செய்தன. இது பாகிஸ்தானுக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது. இல்லையெனில், பாகிஸ்தானில் இருக்கும் அதன் அணுகுண்டு நிறுவனங்களையும் நிலையங்களையும் இஸ்ரேல் விமானங்களை அனுப்பியோ அல்லது படைவீரர்களை அனுப்பியோ அழித்துவிடும் என்று அஞ்ச வேண்டியதிருக்கும் ‘

இந்தப் புத்தகத்தில், ‘ஜியா வுல் ஹக் ராணுவ தளபதியாக பாகிஸ்தானை நடத்திக்கொண்டிராவிட்டால், ஆப்கானிஸ்தான் போர் நடக்க சாத்தியமே இல்லை ‘ என்று தெளிவாகவே சார்லஸ் வில்ஸன் குறிப்பிடுகிறார். அமெரிக்க ராணுவ ஆலோசகராக இருந்த ஜிபிகினியூ ப்ரெஸின்ஸ்கி அவர்கள் பாகிஸ்தான் தூதரக உணவு விருந்தின் போது நேரடியாக சோலார்ஸ் அவர்களை சந்தித்து, பாகிஸ்தானுக்கு உதவியை நிறுத்தக்கோரும் ஸோலர்ஸ் தன்னுடைய முயற்சியில் வெற்றிபெற்றால் என்ன விளையும் என்று தெரியுமா என்று கேட்டார். ஆப்கானின் சோவியத்துக்கு எதிரான எதிர்ப்புப்போர் உடையும். சோவியத்துகள் வெற்றியடைவார்கள். பாகிஸ்தானில் இருக்கும் ஜியாவுல் ஹக் ராணுவ ஆட்சி மறையும். அதற்குப் பதிலாக அங்கு அமெரிக்க எதிர்ப்பு அரசாங்கம் பாகிஸ்தானில் தோன்றுவதுடன் அது அணுகுண்டுகளையும் வைத்துக்கொண்டிருக்கும்.

அமெரிக்கச் சட்டமன்றத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு இருப்பதை சமாளிக்க தாங்க்ஸ்கிவிங் நாளன்று, ஒரு சக்திவாய்ந்த குழுவை கூட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு சார்லஸ் வில்ஸன் சென்றார். அங்கு, அரசாங்க உணவு விருந்தின்போது, ஜியா வுல் ஹக் பக்கம் திரும்பி, ‘ஜனாதிபதி அவர்களே, என்னைப் பொறுத்தமட்டில், நீங்கள் எவ்வளவு அணுகுண்டுகளை வேண்டுமானாலும் தயாரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் இன்று எங்கள் நண்பர். இந்தியர்கள் எங்கள் எதிரிகள். எல்லா அமெரிக்கர்களும் இதே போல எண்ணுவதில்லை. ஆகவே நீங்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். பிரச்னை தீவிரமாவதற்குள் ‘. அதற்குப் பதிலாக ஜியாவுல்ஹக் தன்னுடைய எழுதி வைத்திருந்த பேச்சை தள்ளி வைத்துவிட்டு, எல்லா வேலையாட்களையும் வெளியே அனுப்பி கதவை மூடிவிட்டு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளிடம் பேசினார். பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் சமாதானவழியானது என்றும், அவர் ஒரு போதும் அந்த அணுகுண்டுகளை கொண்டு செல்லும் அமைப்பை (ஏவுகணைகள், அல்லது அதிவேக விமானங்கள்) தயாரிக்க மாட்டார் என்றும் உறுதி கூறினார். ஆப்கானிஸ்தானப் போரின் இந்த கட்டத்தில் பாகிஸ்தானுக்கு உதவியை நிறுத்துவது என்பது ‘வரலாற்றுக்கு துரோகம் ‘ செய்வது போன்றது என்றும் கூறினார்.

அமெரிக்க உதவி இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, பாகிஸ்தான் சோவியத்துகளை எதிர்த்துப் போர் புரியும் என்றும் கூறினார். பாகிஸ்தான் எந்தவிதமான முன் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அறிவித்தார். இறுதி முடிவு ஹவுஸ் மற்றும் செனட் கமிட்டிகள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. வில்ஸனின் இந்த திறமையான திட்டம் பாகிஸ்தானை அன்று வெற்றிபெற வைத்தது. அமெரிக்கக் காங்கிரஸில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதன் காரணமாகவே சோவியத் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது என்று நினைக்கிறார்.

சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதும், அங்கு மீதமிருக்கும் சோவியத் ஆதரவு ஆட்களை தீர்த்துக்கட்ட வேண்டி ஏராளமான ஆயுதங்களை பாகிஸ்தானில் நிரப்ப ஒரு மாத அவகாசம் வேண்டும் என்பதற்காக ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் உடனே கலந்து கொள்ளாமல் காலம் தாழ்த்தினார். இந்த ஆயுதங்கள் ஓஜ்ரி முகாமில் குவிக்கப்பட்டிருந்தன. இவை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ளவை. இதில் 30000 ராக்கெட்டுகள், மில்லியன் கணக்கில் குண்டுகள், ஏவுகணை ஏவும் துப்பாக்கிகள் (ஸ்டிங்கர்) ப்ளோ பைப்புகள், டாங்கி உடைக்கும் ஏவுகணைகள், மல்டிபிள் பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகிவை அடங்கும். இது ஒருநாள் வெடித்துச் சிதறியது. அதில் சுமார் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் இருந்த ஜாம்ஷெட் கே ஏ மார்கெர் என்ற பாகிஸ்தானிய தூதரை ஜியா கூப்பிட்டு, சிஐஏவில் இருக்கும் வில்ஸனிடம் அந்த அழிந்து போன ஆயுதங்களுக்குப் பதிலாக நவீன ஆயுதங்களை உடனே அனுப்பச் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் நேடோ நாடுகளிலிருந்து அத்தனை தேவையான ஆயுதங்களையும் வில்ஸன் கொண்டுவந்து நிரப்பினார்.

1988இல் ஜியா இறந்தபோது, வில்ஸன் இஸ்லாமாபாத்துக்குச் சென்று ஜியாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரைந்தார். ஜெனரல் அக்தர் அப்துல் ரஹ்மான் இடத்துக்கு வரவேண்டியிருந்த ஜெனரல் ஹாமிது குல் அவர்களிடம் சென்று ‘என்னுடைய தந்தையை இந்த நாளில் இழந்தேன் ‘ என்று கண்ணீர் வடித்தார். ஜியா வுல் ஹக்கும் சார்லஸ் வில்ஸனும் வெள்ளைக்குதிரைகளில் ஏறி காபூலுக்குள் நுழையவும் அங்கு முஜாஹிதீன் போராளிகள் சாலையின் இருபுறமும் நின்று அல்லாஹூ அக்பர் என்று முழங்குவதாகவும் இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

வில்ஸன் பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டு இருந்தார். சிஐஏ ஆப்கான் போரில் பங்கு பெற்ற அனைவருக்குமான வெற்றி விழாவாக அதனை திட்டமிட்டிருந்தார்கள். இருப்பினும் திருமணம் நடக்கவில்லை. சிஐஏ தன்னுடைய ஆப்கான் போரில் பங்கு பெற்ற அனைவரையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை.

***

நன்றி: டெய்லிடைம்ஸ் , பாகிஸ்தான்

Series Navigation

காலித் ஹசன்

காலித் ஹசன்