பம்பரமே – பராபரமே

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

ராஜி


பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம்,
சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்!
உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ?
பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1)

வேகமாய் வீசி விளையாடுகிறாய் !
உன் பிரகாசத்தை எனக்குக் காட்டுகிறாய்!
உன் சிரித்த முகத்திற்கு அலங்காரம்
நீ காட்டும் தோரணை- அதிகாரம்! (2)

கவிதையில், இசையில் நீ புத்திசாலிதான்!
ஆனால் கோபத்தைக் காட்டுவையோ, குருபெருமான் ?
விவேகமுள்ள அனுபவமுள்ள பம்பரமே!
உன் அறிவின் இரகசியம் தெரியவேண்டுமே!
கடவுளிடம் கேட்டால் விசித்திரவரம்
ஆவேனோ நானும் பம்ப-அமரம் ? (3)

*******

Series Navigation

ராஜி

ராஜி