நிழல்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ப.மதியழகன்,


எனக்குச் சம்மதமில்லை
நிழல் என்னை பின் தொடருவதற்கு
நிழல் தொடும் இடங்களெல்லாம்
சுகாதாரமாய் இருப்பதில்லை
என்னையும் மீறி
நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது
ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது
எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை
மேகம் சூரியனை மறைக்கும்
சமயங்களில்
சர்வம் போல் எனது நிழலை
விழுங்கிக் கொள்கிறது
நடைபாதையில் செல்லும்போது
மற்றவர் கால்களில் மிதிபடுகிறது
எனது நிழல்
சுவாமி வீதி உலாவில்
தெய்வச் சிலை மீது
விழுந்தது எனது நிழல்
சுவாமியை தீண்டுவதற்கு
எனக்கு ஏது துணிபு
இதெல்லாவற்றிக்கும் மேலாக
சிவப்பாய் உள்ள ரதிகளுக்கு கூட
கறுப்பாய்த் தான் விழுகிறது நிழல்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

நிழல்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

கற்பகம்.


—-
எங்கு சென்றாலும்
பின்னாலேயே வருகிறதே
எதற்கு இந்த நிழல் ? ?

வெயிலில் பாதம் சுடுகிறதே என்று
இதனில் ஒதுங்கத்தான் முடிகிறதா…
துக்கம் அடைக்கிறதே
கூடவே இருக்கிறதே என்று
தோளில்தான் விழ முடிகிறதா..
நீண்டும் சுருங்கியும்
பக்கத்தில் நின்று கொண்டு
பகல் முழுதும் நச்சரிக்கும்.
தனிமை வாட்டும் இரவில் மட்டும்
வெறுமெனே இருந்தாலும்
மறைந்து போய்த் தொலைக்கும்…
அல்லது முழுவதுமாய் வியாபிக்கும்.
என்னையே எனக்குக் காட்டி
ஒரு சில சமயம் பயமுறுத்தும்…


எங்கு சென்றாலும்
பின்னாலேயே வருகிறதே
எதற்கு இந்த நிழல் ? ?

– —-
karpagam610@yahoo.com

Series Navigation

கற்பகம்

கற்பகம்