நினைவெல்லாம் பாரதியே

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

சத்தி சக்திதாசன்


மகாகவி பாரதியின் நினவு நாள்
மனிதரின் அறிவொளியின் திருநாள்
சுந்தரத் தமிழினால் எமது சமுதாயத்தைச்
சுற்றியுள்ள குறைகளைனைத்தும் கூறி வைத்தான்
சாதியெனும் கொடும் வியாதியால் எம் சமூகம்
சரித்திரத்தில் இழுக்கடையும் நிலை பற்றி எடுத்துரைத்தான்
பெண்ணினம் என்றுமே ஆண்களுக்கு அறிவில் சளைத்தவரல்ல
பெரியதொரு புரட்சி வித்தை நறுக்கான தமிழில் இயம்பினான்
அந்நியரின் ஆட்சி இழைக்கும் அநியாயங்களை அனவருக்கும்
அழியாத உண்மைகளாய் கவிதைகள் மூலம் விளக்கி
விடுதலை வேட்கை இந்திய மக்கள் மனதினில் நிலையாக
வித்திட செந்தமிழ் துணை கொண்டு செயலாற்றினான்
காலங்கள் எத்தனை யுகங்களானாலும் இனியொரு உன்னத
கவிஞன் இவன் போல் யாரென்னும் நிலை படைத்தான்
பாரதியே ! தமிழின் தந்தையே ! கவியின் பேரரசே !
பதித்தேன் என் சிரத்தை உன் பாதங்களிலே

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்