துரோணா – கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

துரோணா


இன்று,
மெழுகுவர்த்தியின்
கடைசித்துளி தீயின்
மேல் விழுந்த
மழையின் முதற் தூரலில்
நான் உன்னுடைய
முகத்தைக் கண்டேன்.
அது என்னுடைய
முகம் இல்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே.
ஒருவேளை இதுவரை
நீயேக்கூட பார்த்திராத
உனது முகமாக இருக்கலாம்.
************
இறுதியில்,கண்ணீர் சிந்தாமல்
அழக்கூட பழகிக் கொண்டு விட்டேன்.
இனியொரு பிரச்சனையுமில்லை.
புறக்கணிப்பின் கரங்களை
வாஞ்சையுடன் திரும்பவும்
முத்தமிடலாம்.
*************

Series Navigation

துரோணா

துரோணா