ப.மதியழகன்
தாயெனும்…
பிறந்தவுடன்
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.
நிலா சோறு
அந்த சிறு வயதில்
அமாவாசை, பெளர்ணமியெல்லாம்
என்னவென்று எங்களுக்குத்
தெரியாது
ஆனாலும்
வாரத்தில் இருமுறையாவது
வானில் முழுநிலவு
தோன்றிடவேண்டுமென்று
ஆசை எங்களுக்கு
அப்பொழுது தான்
நாங்கள் குடியிருக்கும்
காலனிவாசிகளனைவரும் ஒன்று கூடி
மொட்டை மாடியில் நிலா சோறு
சாப்பிடுவோம்
மற்ற நாட்களில்
வெண்டைக்காய், சுண்டைக்காய்,
பாகற்காய் – என்றால்
தட்டிலேயே ஒரு ஓரமாக
ஒதுக்கிவிடும் நாங்கள்
அன்று மட்டும், நிலாவில்
வடைசுடும் பாட்டி
இரக்கப்பட்டு இலவசமாகக் கொடுக்கும்
வடையைத் தொட்டுக் கொண்டு
அடம்பிடிக்காமல் சமத்தாகச் சாப்பிடுவோம்
தற்போது
சந்திராயன் நிலவைத் தொட்டவுடன்
இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில்
அந்தப் பாட்டி இன்னும்
வடை சுட்டுக்கொண்டிருக்கிறாளா என்று
கண்ணிமைக்காமல் தேடினேன்,
எங்கும் காணவில்லை…
பால்யம் எப்போது தொலைகிறதோ
அப்பொழுதே அப்பாட்டியும்
மறைந்து விடுவாள் போலும்
தேடும் விழிகளிலிருந்து!
கனவு
தங்களது கனவுகளை
நிறைவேற்ற
பிள்ளைகளை நிர்பந்திக்கும்போது
பெரும்பான்மையான தந்தைகள்
மறந்துவிடுகிறார்கள்
குழந்தைகளுடைய கனவுகளையும்,
தங்களுடைய தந்தையினால்
நசுக்கி ஓரங்கட்டப்பட்ட
அவர்களுடைய பதின்வயது
கனவுகளையும்…
mathi2k9@gmail.com
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)