தமிழே ! தமிழே !

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

சத்தி சக்திதாசன்


தமிழே !
தரணியெங்கும் புகழ்பரப்பும் தாய்மொழியே
தணியாத தாகமதை நெஞ்சினிலே ஊறவைக்கும் தேன்மொழியே
தமிழே !
மழலையின் வாய்மொழியாய் மதுரமென ஒலிக்கும் ஓசையே
மங்காத புகழ் மறையாமல் பரப்பும் விசையே
தமிழே !
தாய் எனக்களித்த நிகரற்ற பெரும் பொருளே
தந்தையின் இதழ்களிலே தவழ்ந்த இளம் தென்றலே
தமிழே !
தங்கத்தை வீசினாலும் தன்னிகரற்ற செம்மொழியே
தனியான குணம் கொண்டு அணையாது ஒளிரும் தீபமே
தமிழே !
தேனின் சுவையென்ன சுவையென்று உன் சுவை மகிழவைக்கும் கனியே
தெவிட்டாத சங்கீதமாய் எம் செவிகளிலே இசைத்திடும் மணியே
தமிழே !
என் வாயில் நீ தவழ்ந்து எனக்கு பெருமை சேர்த்திட்டாய்
என்றுமே உன் புகழ் பாடியே என் காலம் மறையும்

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்