எச் பீர்முகம்மது
கனவு வெளியின் பரப்பு அகலமானது. அதே நேரத்தில் ஆழமானது. அதன் வெளியில் உருவாகும் படிமம் ஒன்றை குறிப்பிட்டு சொல்லும் அது கவிஞனை மீறியும் நடக்கலாம். மீறாமலும் இருக்கலாம். ஆழ்மனத்தில ; தேக்கி வைக்கப்பட்ட ஞாபகங்கள் கனவாக வெளிப்படும் பொழுது அவை சில சமயம் கவிதை பிரதியாக மாறும்.
தமிழில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் பெண் கவிஞர்களில் மாலதிமைத்ாி முக்கியமானவர். பெண் என அடையாளமிடுதலை நிராகாிக்கின்றனர் இவர்கள். காரணம் அந்த அடையாளமே தன்னை வெளியேற்றல் நடவடிக்கையாக அவள் உணர்வதே காரணம். உலகின் தொன்மை காலங்களில் சமூகம் தாய் வழியாகவே இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அந்த சமூகத்தில் பிறந்த குழந்தையின் உாிமை முழுவதும் தாய்க்கே சொந்தமாக இருந்தது. இனக்குழு திருமணங்கள் கட்ட்த்திற்கு வந்த சமூக அமைப்பில் பெண்ணுக்கே முன்னுாிமை இருந்தது. திருமணத்தின் தீர்மான சக்தியாக பெண் இருந்தாள். அதனின் பாிணாம வளர்ச்சியாக ஒருதார மணம் என்ற கட்டத்திற்கு சமூகம் வந்து சேர்ந்த பிறகு தான் ஆண் முன்னிலைப்படுத்தப்பட்டான். அவனே தன்னிலையாக கட்டமைப்பு செய்யப்பட்டான். இனக்குழு திருமணங்கள் அறியாமை காலக்கட்டத்தையும் இணை திருமணங்கள் அநாகாீக கால கட்டத்தையும்/ ஒரு தார மணம் நாகாீக காலகட்டத்தையும் குறிக்கின்றன.
சமகாலத்தில் பெண் குறித்ததான பிம்பங்கள் மிதக்கின்ற/ நிலவுகின்ற சூழலில் எதிர் – பிம்ப சொல்லாட்டல்கள் பெண்ணின் மொழியில் கவிதைகளாகின்றன. ஆற்றின் கரைகளும்/ அதன் ஓட்டமும் பெண்ணுக்கு மிகவும் பழக்கமானவை. துணிதுவைப்பதில் தொடங்கி குளிப்பது வரை ஒவ்வொன்றும் அதன் தொடர்ச்சி தான். நாகாீக காலக்கட்டத்தின் தொடர்ச்சியில் குளிப்பது என்பது பெண்ணுக்கு அந்தரங்க செயலாக இருந்தது. விலக்கப்படுதலின் அடையாளமே அது.
அத்தையுடன் ஆற்றுக்கு காலையில் மலம் கழக்கபோகையில்
கால்கள் கெஞ்சும் ஈரம் நனைக்க இறுகித் துவளும் என் உடலை வீடு சேர்ப்பாள்
வாழா மகளால் திரும்பிய அத்தைக்கு திக்கு தொியாமல் தொலைந்து போன
தோழிகளுக்கு ஈடான தோழியானேன். துணி துவைக்க குளிக்க கும்மாளமிட
பெண்டுகளின் கண்ணீர் தான் ஆராய் ஓடு தென்பாள்.
–
ஆற்றின் ஏற்ற இறக்கத்தோடு மனமும் உடலும்.
குழந்தைக்கு கதை சொல்லி கொடுப்பது என்பது சமூகம் காலம் காலமாக பெண்ணுக்கு கொடுத்திருக்கும் திணிப்பு. கதை சொல்லி குழந்தையை ஊட்ட வைப்பதிலிருந்து தொடங்கி உறங்க வைப்பது வரை பெண்ணின் வேலை தான். இதன் வழி அவளே கதைவெளி முழுக்க நிரம்பியிருக்கிறாள்.
முன்பு ஒருநாள் தன் அம்மா சொன்னக் கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்கு பாிசாக கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல் யானையுடன் கடலுக்கு சென்றேன்.
–
கடலிலில் கரைந்த ஒன்றை யானைக்கு ஓராயிரம் தும்பிக்கைகளென
என் மகள் ஊருக்கெல்லாம் ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்
தேவதையின் இருப்பிடமும்/ நகர்தலுமே காடு தான். காட்டை மையப்படுத்தி ஏராளமான தொல்கதைகள் உண்டு. பெண்ணுக்கு காடும்/ ஆணுக்கும் காடற்ற வெளியும் இருப்பிட குறியீடுகளாயின. காட்டில் விறகொடித்தல் தொடங்கி கூடாரம் அமைப்பது வரை பெண்ணே மையம்.
பலமுறை வந்து பழகிய வழி என்றாலும் ஒவ்வொரு முறையும்பாதை
தவறி வடுகிறேன் – இக்காட்டில்பல தடங்கள் மறைந்தும்
புது பாதைகள் முளைத்தும்ஒரு கிளை தழைத்து
உன் பாதை மறிக்கப்படுமானால ;ஓர் இலையைக் கூட கிள்ளாமல்
கவனமாக வேறு திசை நோக்கித் திரும்பி விடுகிறாய்.
–
என் பெயர் சொல்லி அழைக்கும் ஒலி கேட்டு திரும்பினால்
அது பறவையின் ஓசையாகவோ விலங்கின் சப்தமாகவோ மீந்து என்னை நகைக்கிறது.
நாடக வெளி என்பது பெண் தன்னை மறு பிராதிபலிப்பு செய்து கொள்ளும் ஊடகம். அதற்கான மாற்று அரங்கத்தை தேடி கொள்வது பெண்ணுக்கான கால நிர்ப்பந்தம.; மாற்று அரங்கங்கள் குறித்த அகஸ்தோ போவால் நிறையவே சிந்தித்துருக்கிறார். அவாின் இன்விஸிபிள் தியேட்டர் இதன் படிவமாகும். அதில் பார்வையாளர் – நடிகர் என்ற வித்தியாசமே இருக்காது. நடிப்பே திட்டமிடாத ஒன்றாக இருக்கம். மின்னலின் தன்மை மாதிாியானது அது இத்தொகுப்பில் மாற்று அரங்கள்/ வீடுகள் மற்றும் வேலைபார்க்கும் இடங்கள.; அவர்கள் அதிலே உட்கார்ந்து கொண்டு உடல் மொழி மற்றும் முகமொழியை பயன்படுத்தலாம். இது சமிக்ஞைகள் : முலமாகவும் இருக்கலாம். பெண்ணின் மீதான உடலியல் வன்முறை நிகழும் போது அதிலியிருந்து விடுபடுவதற்கு இது ஓர் ஆயுதம் அகில உலக நாடக குழுவிற்கு நடிக்க ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கவும்.
–
காட்சி-1
உங்கள் வட்டார வழக்கில் பேசிக் கொண்டே அல்லது
பேசாமலே அல்லது நீங்கள் அழுது கொண்டிருந்தாலும் கையை
சாதாரணமாக நீட்டி தொடைகளுக்கு மத்தியில் வைத்து
வலு கொண்ட மட்டும் அவன் விதைகளை பிடித்து இழுங்கள்.
காட்சி-2
உங்கள் காலடியில் மல்லாந்து துடிக்க திரை விழுகிறது
உடலில் ாீதியாக பெண் மீதான வன்முறைகள் அவளை ஒடுக்குதலிலிருந்து வெளிவரமுடியாதபடி தடுக்கின்றன. ஆணை பெண் பலத்தகாரம் செய்ய முடியாது என்ற நிறுவப்பட்ட ஒழுங்கே அதற்கு காரணம்.
தாய்மை மீதான பரப்பின் அகலமும்;/ குழந்தை பற்றிய மனவோட்டங்களும்/ பெண்ணின் குறியீடும்/ சங்கேதமும் என்ற இரு நிலைக்குள் கொண்டு வரப்படுகிறது. மேற்கண்டவைகளில் மாற்றுச் சொல்லாடல்களாக சங்கராபரணி தொகுப்பு நிறைந்து கிடக்கிறது. கனவுக்குள் நுழைந்து/ கனவாக மிதந்து/ அதில் உருவாகும் பரப்பின் பிரதியாக நமக்கு சில கவிதைகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்ச்சூழலில் உருவாகி வரும் பெண்ணிய கவிதைகள் காணக்கிடைக்கின்றன.
தமிழ்ச்சூழலில் உருவாகி வரும் பெண்ணிய கவிதை வெளியில் ஒன்றாக மாலதிமைத்துாியின் இத்தொகுப்பை நாம் அடையாளப்படுத்தலாம். பெண்ணின்கவிதை வெளியில் ஒன்றாக மாலதிமைத்ாியின் இத்தொகுப்பை நாம் அடையாளப்படுத்தலாம்;. பெண்ணின் எதிர்மொழி இன்னும் விாிவடையும் பொழுது நிலவுகின்ற கட்டமைப்பானது சிதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
peer13@asean-mail.com
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- கடிதங்கள்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- வசிட்டர் வாக்கு.
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- போராடாதே … பிச்சையெடு
- ஆசி
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…