ஹெச்.ஜி.ரசூல்
தக்கலை எச்.முகமது சலீம் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிறந்த கல்வியாளர். சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில்
சிங்கப்பூர் தமிழக தமிழ் உறவுகள் தொடர்பான ஆய்வுத்தாளை வாசித்திருந்தார்.இஸ்லாமிய சூபி இலக்கியப்பரப்பில் தேர்ந்த ஞானமும் ஆழ்ந்த தேடலும் மிக்கவர்.குறிப்பாக சூபி ஞானி பீர்முகமது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சி, ஞானமணிமாலை,ஞானக்குறம் உள்ளிட்ட பாடல்களின் நுண்பொருளை கண்டடைவதில் இடைவிடாத பயணத்தை நிகழ்த்துபவர்.சூபிய இலக்கியவெளியில் பீரப்பா ஆய்வுக்கோவை
தொகுப்பு நூலில் இடம் பெற்ற துவக்ககால கட்டுரையிலிருந்து ஏராளமான படைப்பாக்கங்களை எழுதியுள்ளார். பீரப்பா குறித்த இணய தள வலைப்பக்கம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளார்.இஸ்லாம் குறித்த மேற்குலகின் உரையாடல்களையும் அவதானித்துவருபவர்.
சிங்கப்பூரின் 78 ஆண்டுக்கால பழமையுள்ள ஜாமியா நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுவரும் இஸ்லாமின் குரல்(voice of islam) இதழின் ஆசிரியர்குழுவிலும் செயல்படுகிறார்.அண்மையில் இவ்விதழில் தமிழ்பக்கங்களும் இணக்கப்பட்டுள்ளன். இதில் இவர் நிகர்- இஸ்லாமிய பெண்ணிய வாசிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார்.
திண்ணை இதழில்24 அக்டோபர்2010 ல் தன் விரலை துண்டித்த சூபி என்ற தலைப்பில் வெளியான கவிதையினை தற்போது அவர் The Sufis Finger என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.தமிழ் மூலத்தையும் அதற்கான ஆங்கில மொழியாக்கமும் இங்கே தரப்படுகிறது.
தன் விரல்களை துண்டித்த சூபி
ஹெச்.ஜி.ரசூல்
மரம் செடி கொடி தாவரங்கள் ஸப்புகளில்
உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன
தக்பீர் கட்டுகையில் பறவைகள்
உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன.
ஆடுமாடு ஒட்டகங்கள்
உன்னைப்போல் ருகூவு செய்கின்றன
உட்கார்ந்திருக்கும் மலைகள்
அத்தஹியாத் செய்யும்
உன்னைப் போல் இருப்பு கொள்கின்றன
தாயின் கருவறை குழந்தை
ஸுஜூது செய்யும்
உன்னைப் போல் வடிவம் கொள்கிறது
எல்லாமாகவும் நீ இருக்கிறாய்
எதுவாக நீ இல்லை
2)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து
அறிந்து கொண்டாய்
எங்கோ எதுவோ எரிகிறது
கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு
எரிகிற ஏதோ ஒன்றை தரிசனம் கொண்டாய்
விரலால் தொட்டு பார்த்தபின்
புரிந்து கொண்டாய்
தீ சுடுமென்றும்
பூ தீயல்ல என்றும்
3)தன்னைக் கிள்ளிப் பார்த்தபோது வலித்தது
பிறரைக் கிள்ளியபோது
அடிக்க வந்தார்கள்
மிருகங்களைக் கிள்ளிப் பார்க்க
கொம்பாலும்
கொம்பற்றும் முட்டித் தள்ளின.
செடிகளைக் கிள்ளிப் பார்க்கையில்
தொட்டாவாடி இலை தன் இதழ்மூடி
வருத்தம் தெரிவித்தது
உயிரைத் தேடி புறப்பட்ட சூபி
தன் விரல்களை
தானே துண்டித்துக் கொண்டான்.
The Sufis Finger
(Tamil Poem of H.G.Rasool ,24 oct 2010
English version : Thuckalay H.Mohamed Saleem)
1)Trees,plants and vegetations
Stand in sufs like you
Birds spread wing
Like your spreading arms for Salathu Takbir
Goats Oxen and Camels
Are they praying in Rukuh like you
The seated mountains are in prayer
Like you in Aththahiyaat
Fetus in mothers woumbpray
Like you in Sujud
You are everything
What not are you?
2)Sighting the floating smoke afar
You reckon the burning of something is on fire
Seeing the tongues of the blazing flame
It discerns that something is on fire.
When you touch
You experience the fire truth
Fire hurts
Fire is not flower
3)Pinch yourself
It aches
Is aching like joy like life
Universal
When you pinch others
They mob to harm you
You pinch the animals
They chase and push you with
And without their horns
Your finger tips stroked the tender plant
Minosa shrivelled
Folds and shrinks her leafy plates
In hurt
The Sufi in eternal search of the
Truth of life
Lies nipping his finger
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- ஓயாத கடலொன்று..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- இருட்டும் தேடலும்
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- விடாது நெருப்பு
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- கொசு