சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

சுப்ரபாரதிமணியன்


சாகித்திய அகாதமி சார்பில் சென்னையில் தமிழ், கன்னட எழுத்தாளர்கள், ஓவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,.சாகித்திய அக்காதமியின் செயலாளர் அக்ரஹார கிருஸ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தும் போது வள்ளுவர், சர்வஜ்னா சிலைகள் திறப்பு முதல் ரஜினிகாந்த் வரையிலான தொடர்புகளைக் குறிபிட்டார்.கவிஞர் சிற்பி சமணமதம் பற்றிய வரலாற்றையும், கொங்கு மண்டலத்தில் சமணம் ஆட்சி செய்த
வரலாற்றையும் முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார். உடுமலை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் இருக்கும் சமண நினைவுச் சின்னங்களைப் ப்ற்றி அவை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் பதிவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
திரைப்பட கலை இய்க்குனர் தோட்டத்தாரணி தனது ஆரம்ப கால திரைப்பட முயற்சிகளில் கன்னடத்திரைப்ப‌டங்கள்குறிப்பிடத்தக்கதாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் இந்திரன், மனுஸ்யபுத்திரன், நா முத்துகுமார் , மதுமிதா, லீனா மணிமேகலை ( தமிழ் ), வைதேகி, பிரதிபாநந்தகுமார், சி கே ரவீந்திர குமார், பி சந்திரிகா ( கன்னடம் ) ஆகியோர் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வாசித்தனர்.

திரைப்பட இயக்குனர் ஞான ராசசேகரன் தாய் மொழி அக்கறை மனித வாழ்வில் எப்படி முக்கியத்துவம் கொண்டது என்பதை இந்திய, உலக சம்பவங்களுடன் விளக்கினார். கர்னாடகத்தின் சிவானந்த ஹெக்டே குழுவினரின் யக்சகானா நிகழ்வும், ஹரிகிருஸ்ணனின் சேலம் தெருக்கூத்துப் பட்டறையின் பாஞ்சாலி சபதமும் இடம்பெற்றன. ‌

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்செல்வி, எஸ் நடராஜ புடலு, மம்தாசாகர் கன்னடத்திலும், மலர்விழி, இறையடியான் ஆகியோர் தமிழிலும் திருவள்ளுவர் , சர்வஜ்னா ஆகியோர் பற்றின அறிமுகங்களான கட்டுரைகளை வாசித்தனர்.

: ” எனது உலகம் , என‌து ஓவியம் ” என்ற தலைப்பில் ஓவியர்களின் படைப்பாக்க முறை பற்றின பேச்சுகள் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தன‌, ஓவியர்கள் வாசுதேவ், ஹரிதாஸ், அல்போன்சோ அருள் தாஸ், சாந்தாமணி, கோபிநாத், குல்கர்னி, மகேந்திரன், ரூபா கிருஸ்ணா, ஜாக்கோப் ஜெப்ஹாராஜ், விவேக் ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

A dialogue with Painting, The scuptural Energy என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன.இயக்குனர் : இந்திரன் . இந்திரனின் பன்முக ஆளுமையில் இபடங்களின் அறிமுகத் தன்மை பற்றி ராம. பழனியப்பன் விரிவாகப் பேசினார்.

ராமகுருநாதனின் உரை கன்னட தமிழ் எழுத்தாளர்களுக்கான உரையாடல் நவீன இலக்கியத்தளத்திலும்,திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் படைப்புகளிலும் எவ்வாறு இருந்த்து என்பது பற்றி விளக்கமானதாக இருந்தது.பி எம் பெல்லியப்பா நிறைவு நிகழ்ச்சிக்குதலைமை தாங்கினார். எனது நிறைவுரை திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் ப்டைபுகளை முன் வைத்து இடம் பெயர்வு, அக‌தி வாழ்வு, உலகமயமாக்கல் , பாலியல், உடலரசியல் உட்பட பல விசயங்களைப் பற்றி பேச இரண்டு நாள் கருத்தரங்கம் இருந்த‌தைப் பற்றின மையமாக இருந்த‌து .

மேலும் 1. பாவண்ணன் தொகுத்து கனவு வெளியிட்ட நவீன கன்னடக்கவிதை சிறப்பிதழின் அம்சங்களாக நவீன தன்மையுடன் மரபு ரீதியான விசயங்களும் , வாய் மொழி இலக்கியமும், நாட்டார் மர‌பும் இணைந்திருந்ததை நினையூட்டினேன்.

2.வாசந்தி வெளியிட்ட இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் தாய் மொழியைக் கன்னடமாகக் கொண்டு தமிழில் எழுதி வரும் எழுத்தாளன் என்ற பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது குறித்தான சர்ச்சை .

3.எனது சாய்த்திரை நாவல் சமீபத்தில் ” பண்ணத்திர ” என்ற தலைப்பில் தமிழ் செல்வி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நவயுக பதிப்பகம், பெங்களூருவில் இருந்து வெளிவந்திருப்பதையும், கன்னடம் படிக்க இயலாத நிலையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வுணர்ச்சி பற்றியும்.

யாளி அமைப்பின் பூஜா சர்மா நன்றி உரை வழங்கினார்.யாளி அமைப்பின்
முக்கிய நிர்வாகியான கவிஞர் இந்திரனின் அக்கறை, தீவிரம் இரண்டு நாள் நிகழ்ச்சியின் தேர்ச்சியில் காண நேர்ந்தது.

= subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்