சரியாய் உலகில் வாழ்ந்துவிடு

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail. sethumalar68 yahoo.com
உன்னது என்னது நம்மது அவரது
இவரது என்று எதுவுமில்லை!
வந்தது போனது இருப்பது எதுவும்
யாருக்கும் இங்கே சொந்தமில்லை!
நினைப்பது நடப்பது இருப்பது செல்வது
என்பது நமது கையிலில்லை!
அனைத்தும் அறிந்த அவனுக்கே சொந்தம்
அதனையும் நீயே உணர்ந்துகொள்வாய்!
பிறா¢ன் மனதை அறிந்து கொள்ளாது
ஆட்டத்தைப் போட்டு அழியாதே!
பிறரது மனது நோகுமென்றால் உன்
பிழைப்பில் மண்விழும் உணர்ந்து கொள்வாய்!
மனதையும் வருத்தி உடலையும் வருத்தி
கொள்ளையடிப்பதை நிறுத்திவிடு!
அனைத்தையும் வருத்தி அள்ள நினைத்தால்
அனைத்தும் போய்விடும் அறிந்துவிடு!
உள்ளதைக் கோண்டு உலகுக்குக் கொடுத்து
வாழ்க்கையில் நீயும் உயர்ந்துவிடு!
மின்னலைப் போன்று மறைந்திடும் வாழ்வில்
மிடுக்கென்ன வேண்டும் சொல் உனக்கு!
கன்னலைப் போன்று மாறிவிடு வாழ்வில்
கவலையும் இல்லை உணர்ந்துவிடு!
உன்னுழைப்பால் நீஉயர்ந்தால் தினம்
உலகம் உன்னை வாழ்த்திவிடும்! பிறர்
உழைப்பைச் சுரண்டி நீ உயர்ந்தால் உன்
வாழ்வும் சுருங்கி அழிந்துவிடும்!
எத்திப் பிழைத்து வாழாதே தினம்
பித்தரைப் போன்றுளம் உழலாதே!
இத்தரை என்பது பொ¢யதடா அதில்
சித்தரைப் போன்று வாழ்ந்திடடா!
நேர்மையுடன் நீ நடவாமல் என்றும்
நேர்மையைப் பற்றிப் பேசாதே!
நேர்மையே என்றும் நிலைத்துவிடும்
நேர்மையல்லாதது மறைந்துவிடும்!
உண்மையாய் என்றும் வாழ்ந்துவிடு அதில்
உருப்படியாய் எதுவும் செய்துவிடு!
வாழ்கின்ற வாழ்வு சிறியதுதான் பிறரை
வீழ்த்த வாழ்வது சா¢தானோ?
சா¢யென்றென்பதைச் செய்துவிடு
சா¢யாய் உலகில் வாழ்ந்துவிடு!

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.