கொசு

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



மசக்கையில்தான்
ரத்தம் தேடும் கொசுக்கள்
தனக்காக அல்ல
தன் முட்டைகளுக்கு
ஊட்டம் சேர்க்க

தாய்மையின் தவிப்பே
கொசுக்களின் கடிப்பு

ஆண் கொசுக்கள்
கடிப்பதில்லை

முட்டை விளைச்சலே
கொசுவின் வேலை
மற்றபடி
குலம் வளர்ப்பதோ
குளத்தின் வேலை

கொசுவை வாழ்த்த இதோ
ஒரு வாழ்த்துச் செய்தி

‘ஐயாயிரம் பெற்று
ஆறு மாதம் வாழுங்கள்’

கொசுக்களிலும் உண்டு
மூவாயிரம் ஜாதிகள்- ஆனாலும்
ஜாதிச் சண்டை
கொசுக்களில் இல்லை

கொசுக்களின் ஆயுதங்கள்
மலேரியா
மஞ்சள் காய்ச்சல்
சிக்குன் குனியா
டெங்கி – ஆனாலும்
சகோதரக் கொசுவைக்
கொல்லாது கொசு

கொசுக்களில்
மலடுகள் இல்லை
மரிக்கும் நோய்களில்லை

கொசுக்கள் இல்லையெனில்
கோடிப் பேருக்கு வேலையில்லை

கொசுக்களின் ஆண்டுச் சாதனை
படுக்கையில் ஏழு மில்லியன்
பாடையில் இரண்டு மில்லியன்

நோபல் வெல்ல
குவளயம் புரட்ட வேண்டாம்
ஒரு கொசுவைப்
புரட்டுங்கள் போதும்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

கொசு

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ராகவன் தம்பி


துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன் காலம் கழித்ததால் எவ்வித மாற்றமும் அடையாது இத்தனை வருஷங்களும் கிருஷ்ணமூர்த்தி என்னும் அவன் பெயர் அனைவராலும் வயது வித்தியாசமின்றி கொசு என்றே அழைக்கப்பட்டு வந்தது.

கல்லூரியில், அவன் காதலிக்கலாம் என்று திட்டமிட்ட பெண்ணுக்கும் நண்பர்களால் கொசு என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டான். இந்தப் பெயரையும் கொஞ்சமாக அவன் தோற்றத்தையும் வைத்துத் தன் காதலைக் கொஞ்ச நாட்கள் தள்ளிப்போடலாமா என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. இதன் காரணமாகவே யாராவது அவனைக் கொசு என்று அழைக்கும்போது கொலைவெறி கொள்ள ரம்பித்தான் கிருஷ்ணமூர்த்தி. அப்படித் தன்னை அழைப்பவர்களை உடனடியாக யானையாக விசுவரூபமெடுத்து அவர்களைக் கொசுவை நசுக்குவதுபோல நசுக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.
னாலும் தவிர்க்க முடியாமல் அவனைத் தேடி வரும் நண்பர்கள் அனைவரும் வாய் தவறி அவனுடைய தங்கையிடமே ”கொசு இருக்கானா?” என்று கேட்பார்கள். அவள் வாய் தவறாமல் அழுத்தமாக சில சில்லறைப் பகைகளை மனதில் வைத்துக்கொண்டு ”கொசுவா? உள்ளேதான் இருக்கான்” என்று புன்சிரித்துக்கொண்டே கூறும்போது அவனுக்கு இரண்டு காரணங்களுக்காகக் கோபம் வரும். முதல் காரணத்தை வாய்விட்டு சொல்லமுடியாத காரணத்தால், ”அது என்னது வர்ற கம்மனாட்டி கிட்டேயெல்லாம் காரணமே இல்லாமே எல்லாப் பல்லையும் காட்டி மினுக்கியாறது?” என்று அம்மாவிடம் கோபித்துக்கொள்வான். அம்மாவுக்கும் அவன் கோபத்தின் காரணம் அரசல் புரசலாகத் தெரிந்து விடுவதால் புன்முறுவலுடன், ”கூடப் பிறந்தவடா அவொ. நாக்கு கூசாம ஏன் பேசறே?” என்பாள்.

”நீயே அவளுக்கு எல்லாம் கத்துக்குடு” என்று அம்மாவின் காதில் படாமல் முணுமுணுத்துக் கொண்டே வெளியே போய்விடுவான். அவன் போன பிறகு அம்மா தங்கையைத் திட்டுவாள். ”நீ ஏண்டி அவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே? சரி. கூட்டு முழுக்க நீயே கொட்டிக்காதே. கொசுவுக்குக் கொஞ்சம் மிச்சம் வெச்சி வை” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொள்வாள்.

அப்பா வீட்டுக்கு வரும் நேரங்களில் அநேகமாக அவன் வீட்டில் இருப்பதைத் தவிர்த்து விடுவான். அவர் இரவு வீடு திரும்பும்போது லேசாகக் குடித்துவிட்டுத்தான் வருவார். தள்ளாட மாட்டார். ஒரு வார்த்தை யாரையும் தவறாகப் பேசமாட்டார். ரேழியில் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்து சீட்டுக்கு அடியில் இருக்கும் துணியை எடுத்துப் பளபளவென்று துடைத்து விட்டு வீட்டுக்குள் வருவார். அம்மா தினமும் அவர் வாங்கி வராத ஏதாவது ஒரு பொருளை அவருக்கு ஞாபகப்படுத்தி ”வாங்கி வரல்லையா?” என்று கேட்பாள். அவர் தலை குனிந்து கொண்டே ”அந்தக் கொசுக்கம்மனாட்டிக்கு சொல்றது. அவன் எதுக்கு மயிர் பிடுங்க இருக்கானா வீட்டுலே தடி ம்பிளையா?” என்று கேட்டுக்கொண்டே செருப்பை நடையில் அவிழ்த்துவைத்து அதை ஒருமுறை பளபளப்புடன் துடைத்து விட்டு நடையில் உள்ள குழாயிலேயே கையை ஒரு கால்மணி நேரம் தேய்த்துத் தேய்த்துக் கழுவி விட்டு உள்ளே வருவார். இந்த அர்ச்சனையைத் தவிர்ப்பதற்கே அவர் வரும் அநேக நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதைத் தவிர்ப்பான். அப்படி வீட்டில் இருந்து அர்ச்சனையைக் கேட்க நேர்ந்தால் அம்மாவிடம் தங்கத்துடன் கடிந்து கொள்வான். ”ஏம்மா, உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்டே சாயங்காலமே சொல்லித் தொலையேன். ஏன் இப்படிக் கண்டவா கிட்டேயெல்லாம் திட்டு வாங்க வைக்கிறே?” னாலும் இது நாள் தவறாமல் நடக்கும் ஒரு சடங்காக இருந்தது – அவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

வெளியுலகத் தொடர்பே முற்றும் அறுந்துபோனதால் அவனுடைய பாட்டி அவனை எப்போதும் ”கொசு” என்று கூப்பிடமாட்டாள். அதே நேரத்தில் அவனுடைய வேறு பெயரான கிருஷ்ணமூர்த்தி என்றோ குழந்தையாக இருந்தபோது அனைவரும் கூப்பிட்ட கிச்சா என்ற பெயரிலும் அவள் என்றும் அவனை அழைத்ததில்லை. கிருஷ்ணமூர்த்தி அவனுடைய தாத்தாவின் பெயர். அந்த முழுப்பெயரின் செல்லமான வடிவத்திலும் அவனை எப்போதும் அழைக்க விரும்பியதில்லை அவன் பாட்டி. அவளுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவனைக் குட்டீ…. என்று நீட்டி முழக்கி அழைப்பாள். அது அவனுக்கு இன்னும் எரிச்சலாக இருக்கும். கொசுவின் தேவை அவளுக்குக் குறைந்தது இருபது நாட்களுக்கு ஒருமுறை தேவைப்படும். மொட்டையடிக்கப்பட்ட தலையைத் தடவிக்கொண்டே இருக்கும் அவளுக்கு முடி கொஞ்சம் முள்ளாக உறுத்தத் துவங்கும்போது கொசு உடனடியாகத் தேவைப்படுவான். உட்கார்ந்த இடத்திலிருந்தே குட்டீ… குட்டீ… என்று கர்ண கடூரமாகக் கத்தத் துவங்குவாள். அப்பா அவளை ஏனென்று கேட்கமாட்டார். கொசு எங்கிருந்தாலும் தேடிப் பாட்டியின் முன் நிறுத்தப்படுவான். ”ராமுவை அழைச்சுண்டு வாடா குட்டீ… என்று தீனமான குரலில் கேட்பாள் பாட்டி. அவனுக்கு எரிச்சலாக வரும். ”பிராணனை வாங்குறியே. ஏன்? அப்படியே கொஞ்ச நாள் இருந்தா காதா? எங்காவது அழகிப்போட்டிலே கலந்துக்கிட்டாகணுமா?” என்று எரிச்சலுடன் முணுமுணுப்பான். ”கொஞ்சம் கூட நன்னா இல்லேடா குட்டீ. முகத்துலே தரித்திர களை தாண்டவமாடிண்டிருக்கு. கண்ணாடியிலே என்னையே பாத்துக்க சகிக்கலே. அழைச்சிண்டு வாயேண்டா குட்டீ… என்று கெஞ்சுவாள்.

லமாரியில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து எடுத்துத் துடைத்துக்கொண்டிருக்கும் அப்பா, ”இவனே ஒரு வேலையில்லாத அம்பட்டன். அவனையே அந்த முண்டைக்கு சரைச்சி விடச் சொல்லேன்” என்று பாட்டிக்குக் கேட்காதவாறும் அவனுக்கு மட்டும் கேட்குமாறும் கடிப்பார். ”பாட்டிக்கு என்ன? பக்கத்துலே உக்காரச்சொல்லு. அந்த பிராமணனுக்கும் எல்லாத்தையும் சரைச்சி விடுறேன்” அம்மாவுக்கு மட்டும் கேட்குமாறும் அப்பாவுக்குக் கேட்காதவாறும் முணுமுணுப்பான்.

பல நேரங்களில் அவனுக்குத் தோன்றும். இந்த சனியன்களையெல்லாம் விட்டு இந்த ஊரைவிட்டே எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் விடவேண்டும் என்று. னால் மஞ்சுளா தன் காதலைப் பற்றி இதுவரை தீர்மானமாக எதுவும் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்ததால் அப்படி ஓடிப்போகும் தீர்மானத்தை சற்று ஒத்தி வைத்தவாறு இருந்தான். அப்படி அவள் தன்னுடைய காதலின் இசைவினைச் சொல்லும் பட்சத்தில் அவளையும் இழுத்துக்கொண்டு ஓடியாகவேண்டுமே என்று பதட்டத்துடன் காத்திருந்தான். னால் மஞ்சுளா ஏற்கனவே இவனைப்போன்ற மூன்று நான்கு பேர்களிடம் தன் இசைவினைத் தனித்தனியாகத் தெரிவித்து சிறிது நாட்களுக்குப் பின் அவர்களுடன் ஊடல் ஏற்பட்டதாலும் அந்த மூன்று நான்கு பேர்களின் ஜாதிகளும் ஏறத்தாழ உள்ளதாக சிறிது நாட்களில் தெரியவந்ததும், கொசு என்று அனைவராலும் அழைக்கப்பட்டாலும் தன்னுடைய சொந்த ஜாதியை சேர்ந்தவன் என்று தோழியர் வழியாகக் கேள்விப்பட்டு இவனுக்குத் தன் இசைவினைத் தெரிவிக்கலாமா என்று கொஞ்சம் தயங்கி யோசித்துக்கொண்டிருந்தாள். அவள் தயக்கமும் யோசனையும் அவனுக்குத் தெரியவந்தபோது அவனுக்குத் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரித்தது.

னால் கொசுவுக்கு உறவில் தங்கை முறையாகும் மஞ்சுளாவின் தோழியர் ஓரிருவர் ற்றுப்பிள்ளையார் கோயில் தெருவில் புதிதாகக் குடிவந்திருக்கும் சிரஸ்தாரின் பையன்களில் ஒருவன் கித்தார் வாசிக்கிறவனாகவும் ஓரிரு இசைக்குழுக்களில் பாட்டுப்பாடுகிறவனாகவும் உள்ள சதீஷ் என்ற அழகிய பெயருடைய பையன் அந்த மஞ்சுளாவுக்கு அறிமுகமாகாமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டார்கள்.

பலநேரங்களில் வீட்டுக்குத் தெரியாமல் சினிமா போகவும் ரிப்பன்கள் வாங்கவும் மஞ்சுளாவைப் பற்றிய பேச்சுக்களை எடுத்து விட்டு கொசுவிடம் நிதியுதவி பெற்றுச் செல்வார்கள் அந்தக் கன்னிகைகள். அதற்கு இவ்வளவு சீக்கிரமாக இப்படி ஏதேனும் பங்கம் ஏதும் வந்துவிடக் கூடாது என்னும் நியாயமான பயம் இருந்தது அவர்களுக்கு. அதனால் அவனிடம் அவர்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதுக்கதையாக அவிழ்த்து விட்டு அவனைத் தவணை முறையில் குதூகலிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒருத்தி பிள்ளையார் கோயிலில் பிரசாதம் சாப்பிட்டு எறிந்த இலைகளை வெளியில் எடுத்துப்போடும் சாக்கில் இவனைத் தேடி வந்து, ”அண்ணா, நேத்து உங்க ள் கதாகாலட்சேபத்தும்போது கண்ணாலே உன்னையே தேடிண்டிருந்தாளே பாக்கலையா நீ?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்பாள். இவன் அப்பாவித்தமனமான பதட்டத்துடன், இல்லையே… உன்கிட்டே எதுனா சொன்னாளா?” என்று கேட்பான். ”சொல்லணுமா? கண்லேயே எல்லாம் எழுதிக் காண்பிச்சுடறாளே. நான் அவகிட்டே பேச்சை எடுக்கறதுக்குள்ளே அவளோட அண்ணன் அவளைக் கூப்பிட வந்துட்டான். அவன் சரியான தடி ம்பிளை. விவஸ்தையே இல்லாம முறைச்சுப் பார்த்துண்டிருப்பான். அதனாலே அந்த எடத்தை விட்டு ஓட வேண்டியதாயிடுத்து. னா அவொ என்னமோ என்கிட்டே சொல்லணும்னு துடிச்சிண்டே இருந்தா. அந்தத் தடியன் வந்து கெடுத்துட்டான்”

”அது சரி. அந்த மாதிரி பொம்பளைப் பொறுக்கிப் பசங்ககிட்டே உன்னை மாதிரிப் பொண்கள் தன்னை ஜாக்கிரதையாகக் காப்பாத்திக்கணும். நீ செய்ததுதான் சரி. என்ன குடிமுழுகிப்போச்சு. நாளைக்குப் பேசிக்கோ” என்பான். அன்று மதியக் காட்சிக்கு ராயல் டூரிங் டாக்கீஸில் இரண்டு பெஞ்ச் டிக்கெட் எடுத்து வைத்து அந்தத் தூதுவள் மற்றும் அவளுடைய தோழியின் கையில் ரகசியமாக ஒப்படைத்துவிட்டு, சைக்கிள் ஏறிக் காலேஜூக்குப் பறந்துபோவான் கொசு. அன்று மதியத்திலிருந்து சமையலறையில் வைத்திருந்த பணத்தில் று ரூபாய் குறைகிறது என்று அவனுடைய அம்மா வீட்டின் வேறு இடங்களில் தேடிக்கொண்டிருப்பாள்.

அன்று இரவு வழக்கம் போல தலையைக் குனிந்து வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்தான். ரேழியில் அப்பா ஸ்கூட்டர் துடைத்துக் கொண்டிருந்தார். வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகக் குடித்திருப்பார் போல. இன்னும் வேகமாகவும் அழுத்தியும் துடைத்துக் கொண்டிருந்தார். கை லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது போல இருந்தது. கடந்து உள்நுழையும்போது ”ஒருத்தனுக்குப் பொறந்திருந்தா உள்ளே காலடி எடுத்து வக்காதே” என்று கர்ஜித்தார். அவர் குரலில் தெறித்த அதிகாரம் தன்னை ஒன்றும் செய்யாது என்று காட்டிக்கொள்ள அவசரப்பட்டான்.

”அது உனக்குத்தானே தெரியணும்? என்னைக் கேட்டா?” என்று விரைப்புடன் திரும்பினான்.
”தேவடியா மகனே” என்று உறுமினார் அப்பா.

”ஒங்க சண்டையை ஒங்களோடவே வச்சிக்கங்கோ. என் வரைக்கும் வந்தா ரெண்டு பேருக்கும் துடைப்பக்கட்டை பிஞ்சிடும்” என்று வெளியில் வந்தாள் அம்மா.

”வாயை அடக்குடி. ரொம்பப் பேசினா எல்லாத்தையும் கிழிச்சிடுவேன். நாற முண்ட. புள்ளையை வளர்த்திருக்கா பாரு… உம் புள்ளை அந்த வாத்தியார் வீட்டுப் பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கான். அந்த மகானுபவன் ஸ்துமா இம்சையோட கன்னா பின்னான்னு கத்தி நடுரோட்டிலே மானத்தை வாங்கிப்புட்டான். எல்லாம் இந்தக் கம்மனாட்டியாலே வந்தது. நான் இருக்கும் வீட்டில் இவன் இருக்கப்படாது. சொல்லிட்டேன். இந்த சண்டாளனாலே இன்னிக்குக் கொஞ்சம் அதிகமாக் குடிக்க வேண்டிப்போச்சு”.

”அது சரி. கண்ணாடியிலே கொஞ்சம் முகத்தைப் பாத்துக்குங்கோ. அம்பி ஏண்டா இப்படித் திட்டு வாங்கறே?”

”அவன் பண்ணதைச் சொல்லாதே. நான் திட்டுறதைச் சொல்லு”. தள்ளாடிக்கொண்டே ஸ்கூட்டரின் மீது சரிந்தார். அம்மா ஓடிச் சென்று தாங்கிக் கொண்டாள். ”உள்ளே அழைச்சுண்டு போடா. என்ன கர்மாந்திரமோ. எல்லாம் ப்ராரப்த கர்மம்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

”யாராவது தொட்டா வகுந்துடுவேன். இந்த படுவா ஏன் லெட்டர் குடுத்தான்னு கேளு. ஒண்ணுக்கும் யோக்கியதை இல்லை. பொண்ணு கேக்குதா கம்மனாட்டிக்கு?” என்று தள்ளாடிக்கொண்டே சீறினார்.

புரிந்து விட்டது. ஒரு பன்னாடையிடம் ரொம்ப நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் கொடுத்து வைத்திருந்தான். மஞ்சுளாவிடம் பத்திரமாக சேர்ப்பிக்கச் சொல்லி. அந்த சனியன் எங்கோ தானும் மாட்டி இவனையும் மாட்டியிருக்கு.

”எவன் எழுதினானோ. நான்தான் எழுதினேன்னு இவாளுக்கு எப்படித் தெரியுமாம்?”

”எப்படியா? சண்டாளா. என் பேரை வேறே சேர்த்து ஜே.கிருஷ்ணமூர்த்தின்னு கொட்டையா எழுதியிருக்கியேடா நாயே…”

”லோகத்துலே நான் ஒர்த்தன்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியா? ஏம்பா இப்படி என்னை டார்ச்சர் பண்றே? சொல்லு. ஒனக்குப் பிடிக்கலேன்னா நான் எங்கியாவது ஓடிடுறேன். இல்லே விஷம் குடிச்சி செத்துப்போயிடறேன். உனக்கு எதுக்குப் பிரச்னை?” என்று உதட்டைப் பிதுக்கினான்.

உள்ளிருந்து தங்கை ஓடிவந்தாள். ”நீ வாப்பா உள்ளே… என்று தாங்கிப் பிடித்துக்கொண்டாள் அப்பாவை. உள்ளே அழைத்துப்போகும் போது, ”இந்தக் கொசு செஞ்ச வேலை. அந்த மஞ்சுளா பாவம் விக்கி விக்கி அழுதுண்டிருக்காம். இனி உயிரோட இருக்க மாட்டேன். தூக்குலே தொங்கப்போறேன்னு ஓடி ஓடிப் போறதாம். அவளோட அண்ணன்காரன் நம்ம கொசுவை வெட்டாம விடமாட்டேன்னு சபதம் போட்டிருக்கானாம். ஏம்பா உம்புள்ளைக்கு இப்படி புத்தி போறது?” என்று போகிற போக்கில் கொஞ்சம் போட்டுக்கொடுத்தாள்.

அப்பா ஏதோ தெளிவில்லாதபடிக்கு நிறைய கெட்ட வார்த்தைகளில் வசவுகளை எறிந்து கொண்டிருந்தார்.

”த்துலே பொண்கள் இருக்காளேன்னு இந்த பிராமணனுக்கு ஏதாவது விவஸ்தை இருக்கா பாரேன். வாயிலே என்னல்லாம் வர்றதுன்னு. உனக்கு ஏண்டா இப்படி புத்தி போகணும்? அப்பாவோட வயித்தெரிச்சலை ஏன் இப்படிக் கொட்டிக்கிறே?” என்று அழுகிறாற்போல் முகத்தை வைத்துக்கொண்ட கேட்டாள் அம்மா.

பாட்டி உள்ளிருந்து உட்கார்ந்த நிலையிலேயே இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து முன்னறை வாசலுக்கு வந்தாள்.

”என்னடா ஜெகந்நாதா. ஒடம்பு சொகமில்லையா? என்ன பண்றது? உன் வயசிலே உங்கப்பா ரெண்டு கையாலேயும் ரெண்டு சீமெண்ணெய் டின்னை தூக்கிண்டு படியேறி வருவா. தேக்குலே செஞ்ச தேகம் அது. இப்போ உன்னை தாங்கிண்டு ரெண்டு பேர் வரவேண்டியிருக்கு. என்ன கர்மமோ போ. அந்த குட்டீ தடியன் ராமு கிட்டே சொல்லலை போலிருக்கு. அவன் இந்தப் பக்கமே காணம். நாளைக்கு நீயாவது சொல்லுடா. ரொம்ப வளர்ந்துடுத்து”

என்று குறுக்காலே வருவது போல நகர்ந்து வந்தாள். ருக்கு ஜாக்கிரதையாக பாட்டியைத் தாண்ட வைத்து அப்பாவை வழிநடத்தி அழைத்துப்போனாள். அப்பா பாட்டியையும் ஏதோ தெளிவில்லாத வார்த்தைகளால் வைதார். பாட்டி உட்கார்ந்த நிலையிலேயே திரும்பிப் பார்த்து,

”என்னடா ச்சு ஜெகந்நாதா?” என்று அழுவதுபோலக் கேட்டாள்.

”ரொம்ப அவசியமா தெரிஞ்சுண்டாகணும். இல்லைன்னா மண்டை வெடிச்சிடும். அம்பி பாட்டிக்கு எல்லாத்தையும் விலாவரியா சொல்லிட்டு வாடா. இல்லேன்னா ராத்திரியெல்லாம் கேள்வி கேட்டுண்டே இருப்பா” என்று குத்தலாகச் சொல்லிக் கொண்டே அம்மாவும் உள்ளே போனாள்.

கொசுவுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. கையறு நிலை என்பார்களே அதுபோல. விட்டத்தையே வெறித்துக்கொண்டு நின்றான். அந்த தரித்திரம் வசமாக மாட்டி வைத்துவிட்டது. இனி தப்பிக்க வழியே இல்லை. அப்பா இப்போது தூங்கி விடுவார். காலையில் எழுந்ததும் இன்னும் பாட்டு கேட்க வேண்டும். என்ன செய்வது? விடிந்தால் அந்த முரடன், மஞ்சுளாவின் அண்ணனையும் சமாளித்தாக வேண்டும். அது அவ்வளவாகப் பிரச்னை இருக்காது. எங்கே போனாலும் பாலுவை அழைத்துக்கொண்டு சென்றால் போதும். அவன் அந்த முரடனை சுலபமாக சமாளிப்பான். மேலும் பாலுவுக்கு மஞ்சுளாவின் அண்ணனுடைய ரகசியங்கள் சிலவும தெரியும். அதை வைத்து அவனை மிரட்டச் சொல்லலாம். னால் இந்த ரேஷன் கடை குமாஸ்தா பிராமணன்தான் உயிரை விட்டுக்கொண்டு கத்தும். நாளைக் காலை ஸ்கூட்டரைத் துடைக்கும்போதும் இதே மண்டகப்படிதான் கிடைக்கும். அதைத்தான் எப்படி சமாளிப்பது என்று யோசித்தான்.

அந்த மஞ்சுளா முண்டைக்கு என்ன னது? துரத்தித் துரத்திக் காதல் பார்வையை வீசினாளே? நிஜமான காதலை மதிக்கத் தெரியவில்லையே அவளுக்கு? அப்படி ஒரு கடிதமே மாட்டிக்கொண்டாலும் மாம். எனக்குத் தான் எழுதினார். என்னை வைத்துக்காப்பாற்றும் திறமையும் சக்தியும் அவருக்கு உண்டு என்று இந்த உலகத்தையே எதிர்த்து நிற்க வேண்டாமோ? இப்படி அழுது அரற்றி மானத்தை வாங்குகிறாளே சண்டாளி? இவளை வைத்து நாளை எப்படிக் குடித்தனம் நடத்தப்போகிறேன் என்று வெகுவாகக் கவலைப்பட்டான்.

ஒருவேளை வீட்டாரிடம் நாடகமாகிறாளோ? எது என்ன இழவோ. இப்போதைக்கு இந்தத் தெரு முழுக்க மானம் கப்பலேறியாகி விட்டது. நாளை ஊர் முழுக்க நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்காத குறையாக வம்பு பரிமாறிக்கொள்ள பல பிராமணர்கள் அழுக்கு முதுகை சொரிந்து கொண்டு தயாராகி விடுவார்கள். என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான் கொசு.

உள்ளே அப்பாவைப் படுக்கையில் சாய்த்து மல்லாக்கப் படுக்க வைத்தாள் ருக்கு. அவர் திடீரென்று எழுந்துகொண்டு அம்மாவையும் இவனையும் கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.

”ராமுவை நாளைக்கு அழைச்சிண்டு வருவான். குழந்தையை சும்மா சும்மா திட்டாதே ஜெகந்நாதா” என்று உறுதி கலந்த குரலில் கடிந்து கொண்டாள் பாட்டி.

”ரொம்பத்தான் இப்போ தேவை” என்று சலித்துக்கொண்டாள் அம்மா. அவன் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். அவன் அப்படியே எங்காவது ஓடிப்போய்விடுவான் என்று நினைத்தாளோ என்னவோ, அவனருகே வந்து கையைப் பிடித்துக்கொண்டாள்.

”போகட்டும். உள்ளே வாடா. எல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம். ஏழரை நாட்டுச் சனி. பிடிச்சி ட்டுறது. நாளையிலிருந்தாவது இந்த கெட்ட சகவாசம் எல்லாம் விடு. அந்த பாலு, கோலு எல்லாரையும் விட்டுத்தொலை. எல்லாம் சரியாயிடும்”

கொசுவுக்கு ஒருமாதிரி தழுதழுத்துக் கொண்டு வந்தது. அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் கையை விடாமல் அம்மா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

”சரி. வந்து படுத்துக்கோ. காலையிலே பாத்துக்கலாம்”


Series Navigation

ராகவன் தம்பி

ராகவன் தம்பி