கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

Dr மா.தியாகராசன்



காற்று அடிப்பது “ஜில்”.
அங்கே நின்று காற்று வாங்குவதும் “ஜில்”.
ஆனால்… சூறாவளி என்றால் இல்லை “ஜில்”.

கார்மேகங்கள் சூழ்வது “ஜில்”.
மழை பெய்தால் “ஜில்”.
வெள்ளம் வந்தால் இல்லை “ஜில்”.

குளிர் என்றாலே “ஜில்”.
குளிர்பானம் அருந்துவதும் “ஜில்”.
குளிரில் நடுங்கும்போது மட்டும் இல்லை “ஜில்”.

நண்பர்கள் என்றாலே “ஜில்”.
நண்பர்களுடன் சுற்றுவதும் “ஜில்”.
நண்பர்களுடன் ஆபத்தில் மாட்டினால்… இல்லை “ஜில்”.

ஆசிரியர்கள் என்றால் “ஜில்”.
ஆசிரியர்கள் சிரிப்பதைப் பார்த்தால் “ஜில்”.
ஆசிரியர்கள் சினந்தால் மாணவர்களுக்கு இல்லை “ஜில்”.

ஆ. கீர்த்தனா
உயர்நிலை 1D
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

உடைந்துபோன மின்சார விளக்கே!
உடைந்துபோன மின்சார விளக்கே!
எந்த நேரமும் உதவி செய்யும் விளக்கே!
ஏனிந்த கோலம்?
ஏனிந்த கொடுமை?
யார் இந்த நிலைக்கு ஆளாக்கியது?
எத்தனை முறை எனக்கு இக்கட்டான சூழ்நிலை வந்தபோதும்
வெளிச்சம் கொடுத்து உதவி இருக்கிறாய்.
எனக்கு இரவில் வெளிச்சம் கொடுத்துக் கொடுத்து நீ இறந்துவிட்டாயே!
இனிமேல் நான் எத்தனை விளக்கை வாங்கினாலும்
அது உன்னைப் போல வருமா?
இந்த உலகத்துக்கே நீ முக்கியம்.

சு. ஆகாஷ்
உயர்நிலை 1E
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

பட்ட கிளையே பட்ட கிளையே
பொட்டல் வெளியில் புழுங்கும் கிளையே
ஏனிந்த கோலம்?
ஏனிந்த கொடுமை?
யாருந்தன் ஆடையைக் களைந்தது?
யாரிந்த வெறுமையைத் தந்தது?

எடுப்பாய் இருக்கையில்
எத்தனையோ எழில் கொண்டாய்!

நெ. கேசவர்ணி
உயர்நிலை 1F
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

பள்ளி முடிந்தால் = ஜில்!
பட்ட மரம் துளிர்த்தால் = ஜில்!
காற்றில் இலை அசைந்தால் = ஜில்!
கானமழை நீ பொழிந்தால் = ஜில்!
என் பெயர் = ஜில்லோ ஜில்!

ஞா. ஐரின்
உயர்நிலை 1G
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

தோழனே! என் தோழனே!
என்னுடன் நீ எப்பொழுதும் இருந்தாய்.
நான் அழும்போதும் சிரிக்கும்போதும்
எனக்காக உன் தோள் கொடுத்தாய்.
என் பெற்றோர்கள் என்னைப் பிரிந்தபோது
என்னுடனே நீ இருந்தாய்.
என் உறவினர்கள் என்னை ஒதுக்கியபொழுது
எனக்காக உன் நேரத்தைச் செலவழித்தாய்.

நான் தனிமையில் வாடியபொழுது
உன்னைப் பார்க்காத நாள், அது நாளல்ல.
அப்படியே பார்த்தாலும் பார்த்த நேரம் போதவில்லை.
உன் குரலைக் கேட்காத நாள், அது நாளல்ல.
அப்படியே கேட்டாலும் அந்த இன்பம் போதவில்லை.
நட்பின் மற்றொரு பெயரே உன் பெயரடா!
நண்பனே! என் நண்பனே!

ஐஸ்வர்யா
உயர்நிலை 2C
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

காலை நேரத்தில் தாமதமாக எழுந்தால் ஜில்.
அம்மா சமைக்கும் காலை உணவு ஜில்.
புன்முறுவலுடன் பள்ளிக்குச் சென்றால் ஜில்.
அப்போது கிடைக்கும் காலைக் காற்று ஜில்.
பேருந்து கூட்டமில்லாமல் வந்தால் ஜில்.
அதில் என் நண்பர்களைக் கண்டால் ஜில் ஜில்.
ஆசிரியர்கள் சுவையாகக் கற்பித்தால் மாணவர்களுக்கு ஜில்.
நான் பாடத்தில் கவனம் செலுத்தினால் என் ஆசிரியருக்கு ஜில்.
பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புவது ஜில்லோ ஜில்.

பவித்ரா
உயர்நிலை 2D
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

மழை பெய்யும் போது வீட்டில் தூங்கினால் ‘ஜில்’.
சோகமான நேரத்தில் இனிய இசை கேட்டால் ‘ஜில்’.
நெருக்கமானவரைக் கட்டிப்பிடித்தால் ‘ஜில்’.
வெறும் வயிற்றில் ருசியான உணவைச் சாப்பிட்டால் ‘ஜில்’.
தங்கும் விடுதி மெத்தையில் படுத்துத் தொலைக்காட்சி பார்த்தால் ‘ஜில்’.
காரசாரமான உணவைச் சாப்பிட்டுக் குளிர்பானம் குடித்தால் ‘ஜில்’.

ஷஹிடா பீவி
உயர்நிலை 2D
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி

இயற்கைக்கு மரம் ‘ஜில்’
மரத்திற்குப் பூக்கள் ‘ஜில்’
பூக்களுக்குப் பழங்கள் ‘ஜில்’
பழங்களுக்கு விதைகள் ‘ஜில்’

மழையில் நனைவது ‘ஜில்’
பூப்பந்து விளையாடுவது ‘ஜில்’
பனிக்கூழ் சாப்பிடுவது ‘ஜில்’
‘Facebook’ பயன்படுத்துவது ‘ஜில்’
நண்பர்களுடன் வெளியே செல்வது ‘ஜில்’

கு. யமுனா
உயர்நிலை 1F
புக்கிட் மேரா உயர்நிலைப் பள்ளி
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளித் தமிழ்மொழி நிலையம்

‘ஜில்’ ‘ஜில்’ மனதில்

பசிக்குக் கோழிக்கறி ‘ஜில்’
மழையில் காற்பந்து ‘ஜில்’
தாகத்துக்குக் கோக் ‘ஜில்’
மழை நேரத்தில் தூங்குவது ‘ஜில்’
இவை எல்லாம் ‘ஜில்’ ‘ஜில்’
என் மனதில்.

கவிதை

கணினி விளையாடினால் ‘ஜில்’
விக்ரம் படம் பார்த்தால் ‘ஜில்’
தை பிறந்தால் ‘ஜில்’
கவிதை எழுதினாலே என் மனதில் ‘ஜில்’ ‘ஜில்’.

ந. சரவணன்
உயர்நிலை 1C
ஃபேர்ஃபீல்ட் மெத்தடிஸ்ட் பள்ளி (உயர்நிலை)
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளித் தமிழ்மொழி நிலையம்

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்

• திருமதி சிலம்பாயி முத்துசாமி
• திருமதி திலகா ராஜந்திரா
• திருமதி ஹம்சா மொகிதீன்
• செல்வி அ. ஷகிரா

Series Navigation