களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

கோ.புண்ணியவான்.


இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில்
கைக்குழந்தையுடன் காத்திருந்து
பின்னுக்கு ஓடி மறைந்தும்
கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள்

பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும்
இரு கால்களையும்
விபத்தாலோ வியாதியாலோ
இழந்த முகத்தோடு
அன்னாந்து கையேந்தும்
அவன் இடுப்புக்குக்கீழ்
கால்களாய் கவிதைகள் முளைத்தன

வியிற்றை நிரப்பிக்கொண்ட
புத்தி சுவாதீனமற்ற
இளம் தாயொருத்தி
சிக்குப்பிடித்த தலையோடும்
புராதன உடையோடும்
தன்னிலை மறந்து திரிகிறாள்
வாகனங்கள் சரசரக்கும்
மேய்ன் சாலையில்
அப்போதும் ஒர் கவிதை
குழந்தையை மையமிட்டிருந்தது


பள்ளிச்சீருடையோடு
பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த
மாணவி ஒலித்து வைத்திருந்த
புத்தகப்பையைத்தேடி
அலைந்தது
இன்னுமொரு கவிதை

பேரங்காடிப்பையோடு
வாசலைதொட்ட வேளையில்
ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும்
மையமிட்டிருந்த கவிதைகள்
சப்தமின்றி கசிந்து போய்விட்டன
பேரங்காடிகள் களவாடிவிட்ட
நோட்டுக்களைப்போல.


கோ.புண்ணியவான்.
Ko.punniavan@gmail.com

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்