கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


1. கற்பது…
***************

ஒளிப்பது
ஒளிவது
இதே
எனக்கு

ஒடிப்பது
ஒடிவது
இதே
உனக்கு

ஒளிர்வது
மிளிர்வது
கற்பது
எப்போது..

************************

2.. கட்டுக்கள்..:_
*****************

தற்காலிக கட்டுக்கள்..
கைக்கட்டோ கால்கட்டோ
நினைக்க வைத்தது
நிரந்தரமின்மையை..

காலூன்றிக்
கிளைத்திருந்த மரங்கள்
நதியோரம் கூட
சருகு தூவி
களைத்திருந்தன..

வெய்யிலின் பரிவட்டம்
சூடிய தாவரங்கள்
வெறுக்க முடியவில்லை
வெம்மை அனத்தியும்

மாலைநேர
வாடைக் காற்றுக்காய்..
ஜீவனை சுமந்து
வயதேறியும் வாழ்ந்து
கிடந்தன ஒற்றையா்ய்..

எதை நம்பியும்
எதுவுமில்லை எனினும்
கட்டுக்கள் ஏதோ ஒரு
விதத்தில் ஆதரவாய்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்