கரையில்லா ஓடங்கள்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஷம்மி முத்துவேல்



கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில் இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட
ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள்

சிறுவயதுக்கனவொன்று
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள்
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது

மலை எனவும் மடு எனவும்
இலட்சியங்கள், நம்பிக்கைகள் வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால்
மிதிபடும் என
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள்

கனவுக்காலம் வரும் பொழுது
மீட்டு கொள்ளவென ….
காலம் என்றும்
அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி அவள் மறந்தாள்?
அவள் ஓடங்களுக்கு தான் கரைகள் இல்லையே ….

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்