மூலம் – மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்
விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்
உடலழகு தொலைந்துவிடுமென்று
இரவுணவையும் தருகிறார்களில்லை
இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்
அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்
பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்
ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும்
மேலதிகமாக ஆனாலும்
மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும்
புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்
கவரப்பட்ட செல்வந்தனொருவன்
பரிசுகள் தந்திட அழைக்கிறான்
நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்
விழா நாட்களில் எனக்கு எனது
அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன
உண்மைதான் சில விழிகளில்
பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்
ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க
நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது
ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்
வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்
அம்மாவின் மருந்துகளையும்
அப்பாவின் திதிக்கான பொருட்களையும்
வாங்கத் தேவையான பணத்தை இதோ அம்மா
இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்
சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து
எப்பொழுதேனும் மகள் வருவாளென
வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி அம்மா
பார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது
* நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி – கிராமிய ஆடல், பாடல்வகைகள்
பின்குறிப்பு – பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடிப்புத் திறனை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண் அவளது அன்னைக்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம் – மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
- கவிதையும் அவனும்
- ஒரு ராஜகுமாரனின் கதை
- ஓர் இரவு
- ஆதலால் நோன்பு நோற்போம்
- நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே
- சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு
- சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி
- வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.
- முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்
- எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
- ‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு
- நானும் என் எழுத்தும்
- இவர்களது எழுத்துமுறை – 5 மௌனி
- சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ? [கட்டுரை: 2]
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்
- பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9
- குப்பனுக்கு கல்யாணம்
- தவறிச் செய்த தப்பு
- புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4
- தமிழக தேர்தல் கூட்டணி அலசல்
- முள்பாதை 43
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1
- ஓர் மடல்
- அவசரகதியில்;
- வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்
- ஒரு சொட்டுத் தண்ணீர்
- நிகழ்தலின் நொடி
- வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)
- சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்