எது கவிதை ?

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

மாம்பலம் கவிராயன்


பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன்
லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் – வாடி
மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே
நிதியாம் கவிதைக் குணர்.

மாலையே மாற்றுங் கதைகள் பழையன
ஓலையே சொல்வதே பாடெனக் – காலையில்
மூலமா மாதியும் சக்கரம் சுற்றினால்
மாலையே மாற்றிடும் ஓய்!
***

Series Navigation

மாம்பலம் கவிராயன்

மாம்பலம் கவிராயன்