ஊரறிய மாலையிட..

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


புத்தகம் திறந்தாலும்
புளுதி மண்ணில் நடந்தாலும்
புளுகித்திாிய மனசில்லை
இந்த பொண்ணு மனசில் நீதானையா.
வெக்கம் வெக்கம் எண்டு
மனசு அடிச்சாலும்
உதடு எப்பவும்
உங்க பெயரைத்தான்
உச்சாித்து பார்க்கிறது.
படிப்பம் படிப்பம் எண்டு
மனசு சொன்னாலும்
புத்தகத்துள் ஒளித்து வைத்த
உங்க புகைப்படம் தான் பார்க்கிறேனே.
படுப்பம் படுப்பம் எண்டு
பாய் விாிச்சு போட்டாலும்
கள்ள மற்ற உங்க சிாிப்பு
கண்ணுறங்கையிலை வந்து நிக்குமையா.
சேவல் கூவையிலும்
உறக்கம் தான் வருகுதில்லை.
சிவப்பழகன் நீங்கதாங்க
கண்ணுக்குழிக்கை நிக்கிறீங்க.
புற்தரையில் நடந்தாலும்
ஒக்காந்து இருந்தாலும்
மவராசன் நடந்து வரும்
மாதிாித்தான் இருக்கிறது.
உறக்கம் கொண்டாத்தான்
கனவு வருமையா.
உறங்கி நாளாச்சு
கனவும் வந்ததில்லை.
உங்க குறும்புகளை
நெஞ்சுக்குளிக்கை வைச்சதாலை
நெனைச்சே நெனைச்சே
இந்த மவராசி உசிரு மருகுதையா.
நீங்க நடந்து போனா
புல் பூச்சி சாகாதையா
இந்த புள்ளை மனசை மட்டும்
ஏனையா கசக்கி புளிகிறீக
உசிரும் உசிரும் உரசி
உசிரே வலிக்குதையா.
ஊரறிய மாலையிட
தேதி ஒன்று குறிங்கையா..!
—-
thamarachselvan@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.