உலகம் என்பது வண்ணம்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

ம.நவீன்


உறங்கி விழித்த தருணம்
கண்ணெதிரே வெறுமை

எனது வீட்டுச்சுவர்
அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை
என் கட்டில்
இவற்றோடு என்னையும் காணவில்லை

இறங்கி நடந்து
முட்டுப்பட்டபோது புரிந்தது
பிரபஞ்சம் நிறம் இழந்திருப்பது

ஜடத்திலிருந்து
உதிர்ந்த வண்ணங்கள்
நிலபரப்பில்
கரைவதற்காகக் காத்துக் கொண்டிருந்தன.

அங்கே கறுப்பு நிறத்தில்
குவிந்து கிடப்பது
என் நிறமாகத்தான் இருக்க வேண்டும்

கொஞ்சம் தள்ளி
ரோஜாவின் உதிர்ந்த சிவப்பில்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்

இனி எதைக்காட்டி அப்பா
பெரிய வீடென
பீற்றிக்கொள்வார் ?

நிறமற்ற உடலை
நிர்வாணமாக்கி நடக்கையில்

வழக்கமான
கிளிகள்.பறவைகள்
காற்றில் அசையும்
மரங்களின் ஓசையோடு
உலகம் இன்னும்
இயங்கிக்கொண்டிருந்தது.

ம.நவீன், மலேசியா

na_vin82@yahoo.com.sg

Series Navigation

ம.நவீன், மலேசியா

ம.நவீன், மலேசியா