உயிருண்டு வயிறில்லை

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


அவன் கவிஞனாகி விட்டிருந்தான்
அகல வாக்கில் அவன் சிரம் அகன்று
மேற்பகுதி நன்றாய் மேலெழுந்து
உயர்ந்து உப்பியிருந்தது
வழமையான ஈர் விழி நடுவாய்
முன்னந்தலைக்கு சற்று கீழாய்
முன்னங்கண் ஒன்று முளைத்திருந்தது
முற்றிலுமாய் உள்ளமுங்கி
இருந்தும் இல்லாததைப் போலிருந்தது
ஈரோர காதுகள்
அவன் நாசி துளைகள்
இன்னும் நன்றாய் அகல விரிந்து
உருண்டு விடைத்திருந்தன
கரமிரண்டும் கம்பிகளாய் மெலிந்து
முழங்கால் தாண்டி நீண்டிருந்தன
குறிப்பாய் வலக்கையின்
பெரு மற்றும் ஆட்காட்டி விரல்கள்
முன்பை விட தடித்திருந்தன
பாவம் அவன் வயிறு மட்டும் உள்வாங்கி
விலா எலும்புகள் துருத்திக்கொண்டு
அகோரமாய் வெளிநீட்டிக் கிடந்தது.

sunaithnadwi@gmail.com

Series Navigation

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.