இரயில் பயணம்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

ப.மதியழகன்,


புகை வண்டி எனப் பெயர்
அது ரயில் வண்டி ஆனது
புகைவிட்டுப் போன காலம்
மலையேறிப் போனது
தூரத்தில் கண்டாலே
நம்மை உற்றுப் பார்க்க வைப்பது
அருகாமையில் வந்துவிட்டால்
குதூகலப்பட வைப்பது
ரயில் பயணிகளை கண்டாலே
டாடா காட்ட நினைப்பது
ஜனங்களுக்கு
நிரந்தரப் பழக்கமாகிப் போனது
பேருந்து பயணம்
நினைவடுக்குகளிலா தங்குது
ரயில் பயணம்
ஒரு முறை போனாலே
ஞாபகத்தில் இனிக்குது
எப்போது இனி
ரயில் பயணம் என
ஏங்கவே வைப்பது
ரயில் சத்தம் கேட்டாலே
மனம் அதிலேயே லயிக்குது
தின்பண்டங்களும், புத்தகமும்
அருகிலேயே கிடைக்குது
வயிற்றுக்கும், புத்திக்கும்
தீனி நிறைய கிடைக்குது
படுத்துக்கொண்டு போவதிலே
சுகம் நிறைய இருக்குது
தற்போது அதிகமாக
ரயில் விபத்தாகும் போதெல்லாம்
பயம் வந்து தொலைக்குது.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்