ஆயிரம் மினராக்களின் நகரம்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

ஹெச்.ஜி.ரசூல்



மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

எகிப்தின் மக்கள் கிளர்ச்சியும் அரசியல் எழுச்சியும் என்ற பொருளில் 05 – 02 – 2011 சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கூட்டுக் கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலித்சிந்தனையாளரும் பெருமன்ற மாவட்ட செயலாளருமான வி.சிவராமன் தலைமை தாங்கினார். தோழர் கண்ணன் எகிப்தின் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து விரிவானதொருஆய்வுரையை நிகழ்த்தினார்.

ஆய்வுரைக்குப் பிறகான கூட்டுக் கலந்துரையாடல் நிகழ்வில் நாவலாசிரியர் மீரான்மைதீன் ,மொழிபெயர்பாளர் ஆர்.பிரேம்குமார்,குறும்பட இயக்குநர் சிவசங்கர்,மாநிலச் செயலாளர் சி.சொக்கலிங்கம், தாமரை மாத இதழின் இணையாசிரியர் ஹாமீம் முஸ்தபா, கவி தாணுபிச்சையா, கவி கோதைக் கண்ணன், ஹெச்.ஜி.ரசூல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.க்க்ட்டத்தில் கீழ்கண்ட பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன்.

எகிப்தில் நிகழ்ந்த ராணுவப் புரட்சிக்குபின் முதன்முதலாக1952 -ல் நாஸர் அதிபரானார். மன்னராட்சிமுறை ஒழிப்பு, நிலச் சீர்திருத்தம், சூயெஸ்கால்வாய் மீதான உரிமை சோவியத் உடனான உறவு உள்ளிட்ட நடைமுறைகள் எகிப்தை புரட்சிகர அரபு தேசியவாத நாடாகவும் சோசலிச சித்தாந்த்த்தோடு இணைந்த அரபுசோசலிச சிந்தைப் போக்கின் துவக்கமாகவும் அடையாளப் படுத்தியது..எனினும் இஸ் ரேலுடனான ஆறு நாட்கள் யுத்தம் எகிப்துக்கு பெரிதான பின்னடைவைக் கொடுத்திருந்தது.

இரண்டாம் கட்டமாக முகமதுஅன்வர் சதாத்தின் ஆட்சிக்கும் அவரது படுகொலைக்கும் பிறகு 1981 லிருந்து 28 ஆண்டுகளாக முகமது ஹோஸ்னிமுபாரக் அதிபராக உள்ளார். தேசிய ஜனநாயக் கட்சியின் வேட்பாலராக தேர்தலின் மூலமாகவே 5 – வது முறையாக முபாரக் ஆட்சியை அமைத்துக் கொண்டார்.1952 க்கு பிறகே பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. எனினும் 2005 -ல் முபாரக்கு எதிராக தேர்தலில் நிற்க எதிர்கட்சித்தலைவர் அய்மான் நூருக்கு அனுமதி தரப்படவில்லை.அதுபோல் 1928 -ல் உருவாக்கப்பட்ட ஹஸ்ன் அல் பன்னாவால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கமும் இதுநாள்வரை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருந்து வந்துள்ளது. இக்கட்சி உறுப்பினர்கள் சுயேச்சையாகதேர்தலில் நின்று 2005 தெர்தலில் இருபது சதவிகித தொகுதிகளை வெண்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எகிப்து பார்லிமென்டில் 2007 -ல் கொண்டுவந்த சட்டதிருத்தங்கள் மேலும் எகிப்தின் அரசியல் நெருக்கடியைப் பெரிதாக்கின். தற்போதைய சமூக பொருளாதார நெருக்கடியும்,விலைவாசி உயர்வும், குறைந்தபட்சகூலியும் பிற தாகங்களாக உருவாகின.
எதிர்வரும் செப்டம்பர் தேர்தலில் முபாரக் தன் மகன் கமாலை ஆட்சி வாரிசாக்க நினைத்துள்ளார் என்ற செய்தியும் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கின.இதனிடையே துனிஸியாவில் நடைபெற்ற ஜாஸ்மின் புரட்சியும் ஆட்சிமாற்றமும் இன்னும் மக்களுக்கு உத்வேகத்தை அளித்தன்.

இந்நிலையில் ஊடகங்களின் வழியாகவும் பரவிய ராணுவத்தன்மை கொண்ட அதிபராட்சிக்கு எதிரான கருத்தியல் மக்களிடையே கிளர்ச்சியாக உருவாகின்.சர்வதேச அணுசக்தி விஞ்ஞானியும் மேற்குலகிலும் புகழ்பெற்ற தொழில்நுடபசிந்தனையாளருமான எல்பராடே இக்கிளர்ச்சியை முன்னெடுப்பவராக உள்ளார். மேற்குலக ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்கிற எல்பராடே அல்லது இஸ்லாமியத்தை நிறுவுகிற பாணியிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் பிரதிநிதி என்கிற நிலையில் எகிப்தின் ஸ்திரமற்ற அரசியல் நிலை உருவாகி உள்ளதையும் இத்துடன் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்