T V ராதாகிருஷ்ணன்
அவனது ஆறாம் ஆண்டு திருமணநாள்.
அவன் மனதிற்குள் அழுதுக்கொண்டிருந்தான்..ஒரு லாட்ஜின் அறையில்
படுக்கையில் புரண்டவாறு.
அவன் மனைவி அழகி..இல்லை..இல்லை..பேரழகி.இவன் அவளைப்போல
இல்லாவிடினும்…பார்க்கவாவது சுமாராய் இருப்பானா எனில் அதுவும் இல்லை.
அவள் பளீரென..அடுத்து..அடுத்து பந்துகளில் சிக்சர் அடிக்கும் ரின் தரும்
வெண்மை..இவனோ…
கருப்பு கூட அழகுதான்..கரியில் இருந்துதான்..வைரம்
பிறக்கிறது.ஆனால்..இவன் சோடா பாட்டில் கண்ணாடியோடு..முன் பற்கள்
இரண்டும் வெளியே துருத்திக் கொண்டு..கல்யாணராமன் கமலை ஞாபகப் படுத்திக்
கொண்டிருப்பான்..என்ன..கமல் இவனைவிட சிகப்பு.
தன் தாழ்வுமனப்பான்மையை மறைக்க..முதல் இரவன்று..எவ்வளவு தரக்குறைவாக
அவளிடம் நடந்துக் கொண்டான்.’இவ்வளவு அழகாய் இருக்கியே..இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியா? என்றான்..’யாருடனாவது படுக்கையை
பகிர்ந்துக் கொண்டிருக்கியா?’ என்றான்.
அவளோ..இவனை அறிந்து..இவன் அவமதிப்புகளை பொறுத்தாள்…’இந்த உடல்
அழகுதானே…அழகுதானே..என பிரகாஷ்ராஜ் பாணியில் பேசியபடியே..மறைவிடங்களில்
சிகரெட்டால் சுட்டிருக்கிறான்.
அழகிய மனைவி ஒருவனுக்கு சத்ரு..என நண்பர்கள் வேறு அவ்வப்போது தூபம்
போட்டனர்.அவர்கள் பேச்சைக் கேட்டு….ம்ஹூம்..அவளை அப்படி சித்திரவதை
செய்திருக்கக் கூடாது.
தூக்கம் வராமல்..திரும்பி படுத்தான்..
மணி 10-30
அவள் ஞாபகமாக அன்று ஒரு பெண்ணை அனுபவித்து விட வேண்டும்..என அந்த
லாட்ஜில் அறை எடுத்தான்.ஒரு மாமாப்பையனை பிடித்தான்.அவன் 11 1/2
க்கு..ஒரு பெண்ணுடன் வருவதாகக் கூறினான்.அதற்கு முன் பழைய நிகழ்ச்சிகள்
அவன் முன் கோர நடனமாடின…
*** **** **** **** ***
அன்றும் அப்படித்தான்..அவன் முதலாம் ஆண்டு..திருமண நாள்..
அவள் அன்று தேவை..என்று..ஒப்புக்காக மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு..சற்று
முன்னதாக அலுவலகம் விட்டு கிளம்பி வந்தான்..
அவன் வீட்டு தெருமுனை வந்த போது…அவன் வீட்டிலிருந்து ஒருவன்
வெளியேறுவதைக் கண்டான்.
சந்தேகம்..தலை விரித்து ஆட..அவளிடம்..”யாரேனும் தேடி வந்தார்களா?’ என்றான்.
அவள் ஏதும் பேசாது அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அவன் நாசி…சிகரெட் புகை வாசனையை உணர்த்தியது.
குப்பைக் கூடையில்..ஒரு சிகரெட் துண்டு..பாதி அணைந்தவாறு..’மேட் ஃபார்
ஈச் அதர்’ சிகரெட் அது.வந்தவனும்..அவளும் தானோ அது?
பின்..பலமுறை..இப்படி நடப்பதை அறிந்தான்.
வம்புக்கென்றே அலையும்..பக்கத்து வீட்டுக்கார பெண்மணி
ஒருத்தி..’தம்பி..நீ வேலைக்குப் போனதும்..காலைல வர்ற ஆளு…மாலைல தான்
போறான்’ என்று சொன்னாள்.
கோபத்தோடு..சில கெட்ட வார்த்தைகளுடன் அவளை விசாரித்தான்…அவளும்..இவன்
சித்தரவதையை எவ்வளவு நாள் பொறுப்பாள்…’ஆமாம் நான் அப்படித்தான்
இருப்பேன்’ என்று சொன்னாள்.
பிறகுதான் அந்த முடிவுக்கு வந்தான்..
**** ***** ***** ***** *****
சார்…சார்…அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.
எழுந்து வந்து கதவைத் திறந்தான்..
அவனுடன் ..அவள் ..நின்றிருந்தாள்..பார்க்க அவன் மனைவி போலவே
இருந்தாள்..’இவளில் அவளைக் கண்டேன்’ மனம் குதூகலித்தது.
‘என் தங்கைதான்..’ என அசடு வழிந்தான்..உடன் வந்தவன்.. சிகரெட் புகை வாசனை
அவனிடம்…மேட் ஃபார் ஈச் அதர் வாசனை.’காலைல வரேன்..’ என அவளை
விட்டுவிட்டு நகர்ந்தான்.
உள்ளே..இயந்திர கதியில் வந்தவள்…ஆடைகளை அகற்ற
ஆரம்பித்தாள்..ஏற்கனவே..அரங்கேற்றம்..ஆகி இருந்தும்..அன்றுதான்
அரங்கேற்றம் என்றாள்..அரங்கேறியது.
கைகளை அவள் மீது..போட்டபடியே உறங்கிவிட்டான்.
திடீரென…விழித்தான்..
ஒரே நாற்றம்…பிணவாடை அல்லவா..அடிக்கிறது..குமட்டல் எடுத்தது..உடல்
கருகும் நாற்றம்..
படுத்தவாறே…பக்கவாட்டில் இருந்த ஸ்விட்சைப் போட…அறையில் வெளிச்சம்
பரவியது.பக்கத்தில்…அவள் ..அமைதியாக..சிட்டுக்குருவி போல..சின்ன வாயை
சற்றே திறந்தவாறு..தூங்கிக் கொண்டிருந்தாள்.
நாற்றம் குடலை பிடுங்க..ஏதேனும் செத்துக் கிடக்கிறதா…என..கட்டிலின்
அடியில் பார்த்தான்..ஒன்றுமில்லை..
திரும்பி வந்து படுத்தான்..இப்போது..ஊதுவத்தி வாசனை..ஆனால்..பிணத்தருகே
ஏற்றப்படும்..மட்ட ஊதுவத்தி வாசனை.
சன்னல் வழியே..நிலவைப் பார்க்கமுடிந்தது…பால் நிலா…ஒளி வீசிக்
கொண்டிருந்தது. தூரத்தில்..எங்கோ நாய்கள் குரைக்கும் ஓசை..
திடீரென..அவன் முகத்தில் ஏதோ விழுந்தது..தலையணை..
அவள் அவன் முகத்தில்..தலையணை வைத்து அழுத்தினாள்…எவ்வளவு வலிமை அவளுக்கு…
‘ஏய்…ஏய்..என்ன செய்கிறாய்?’
‘நீ அன்னிக்கு..என்ன செஞ்சியோ..அதைத்தான் செய்யறேன்.
கைகால்களை உதறுகிறான்..கொஞ்சம்..கொஞ்சமாக..நினைவிழக்க
ஆரம்பிக்கிறது..கால்கள் விரைக்க..நாடித்துடிப்பும் அடங்குகிறது.
இதற்கும் நிலவுதான் சாட்சி.
**** ***** **** **** ****
மணி 11-30
‘சார்..சார்..’ என்று ரகசியகுரலில் கூப்பிட்டபடி..கதவைத்
தட்டினான்..மாமாப்பையன்..ஒரு பெண்ணுடன்.
T V Radhakrishnan
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ராஜநீதி.
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- உடைகிறக் கோப்பைக்குள்
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- பறவைகளைப் போல வாழ்வோம்
- ஒரு குழந்தை மழை.
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!