அது ஓர் நிலாக்காலம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

கரவிபயணி


இன்றுவரை

ஏன் தொடரவில்லை

நினைத்துப் பார்க்க

நெஞ்சு விம்முகின்றது

வால்த்தும்பி பிடித்து

நூல்கட்டி பட்டம்

பறக்கவிட்ட நாட்கள்

வீட்டிற்குவரும்

வீதி நாய்களை கல்லெறிந்து

காலுடைத்த நாட்கள்

யாருமறியாது

அடுத்தவீட்டு கிணற்றினுள்

மீன்பிடித்து மகிழ்ந்த நாட்கள்

உச்சில் வயலில்

பட்டம் ஏற்றி வயலெல்லாம்

நாசமாக்கிய நாட்கள்

வீட்டு மணற்கும்பியில்

வீடுகட்டி மகிழ்ந்த நாட்கள்

கடைவீதி சென்றால்

காணும் யாவற்றையும்

வேண்டி தரும்படி

அடம்பிடித்து அழுத நாட்கள்

ஆலயம் சென்றால்

மோதகம் வடைக்கு

சண்டை பிடித்த மகிழ்ந்த நாட்கள்

பாடசாலை இடைவேளையுடன்

மதிலேறி கள்ளமாக

வீடுவந்து சேர்ந்த நாட்கள்

கள்ளுமுட்டிகளை

கல்லெறிந்து உடைத்த நாட்கள்

நண்பர்களுடன்

கள்ள மாங்காய்

பறித்துண்ட நாட்கள்

கள்ளச்சினிமா பார்க்கப்போய்

அம்மாவிடம் அடிவேண்டிய நாட்கள்

வகுப்பு மாணவியின்

உணவு திருடி

தின்ற நாட்கள்

மாாிகாலங்களில்

வயல்கிணற்றில்

குளித்த நாட்கள்

இன்னும் எத்தனை எத்தனையோ

எண்ணற்ற நினைவுகள்

உள்ளமெங்கும் உள்ளது

அவற்றை இன்று

உணரத்தான் முடிகின்றது

மழை வெள்ளத்தினுள்
காகிதக் கப்பல் செய்து
விட்டு மகிழ்ந்த நாட்கள்

ாியூட்டாியில் ஆங்கிலப்பாடத்திற்கு
மதிலேறிப் பாய்ந்து
கொத்து ரொட்டி சாப்பிட்ட நாட்கள

ஆண்பெண் பேதமின்றி
பாடசாலையில் கிளித்தட்டும்
கள்ளன் பொலிஸ் விளையாடடும்
விளையாடிய நாட்கள்

இரவுநேரத் திருவிழாக்களில்
கச்சான் விற்பவாிடம்
கிழிந்த காசுகொடுத்து
ஏமாற்றிய நாட்கள்

ஆங்கில வாத்தியார்
தொல்லை தாங்காது
அவர்வீட்டிற்கு கல்லெறிந்து
ஊரவாிடம் திட்டு வேண்டிய நாட்கள்

பொங்கல் நாளில்
ஈர்க்கு வானம் விட்டு
வீதியில் போனவனடம்
ஏச்சு வேண்டிய நாட்கள்

மரவள்ளிக்கிழங்கு
கள்ளமாய் பிடுங்கி
சுட்டுத்தின்ற நாட்கள்

வீட்டின் மீதேறி பட்டம்விட்டு
கீழே வீழ்ந்து காலொடிந்து
நொண்டித்திாிந்த நாட்கள்

நீந்திப்பழக
கடற்கரைபோய்
வயிறுமுட்ட கடல்நீர் குடித்து
அழுதழுது வீடு வந்து சேர்ந்த நாட்கள்

இதைவிட

அம்மா கையால்
ஆசையாசையாய் உடையுடுத்தி
உணவூட்டி தலைசீவி
பாடசாலைக்கு அனுப்பிவைத்த நாட்கள்

தினமும் ஏதோவொன்றிற்காய்
சண்டைபோட்டு அழுதழுது
கழித்த அந்த நாட்கள்

இன்று கிடைக்கவில்லை
ஏங்கிக்கொள்கின்றேன்

siam7373@batelco.com.bh

Series Navigation

கரவிபயணி

கரவிபயணி