அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

சின்னக்கருப்பன்

இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவுக்கு பலர் எரிபொருள் தருகிறேன் என்று சொன்னாலும், அதனை வாங்கும் நிலையில் இந்தியா இல்லை. அதன் முதல் காரணம், பெட்ரோலின் விலையை அமெரிக்க டாலரில்தான் வாங்கவேண்டும். இந்திய ரூபாய் கொடுத்து அமெரிக்க டாலர் வாங்கி பெட்ரோலை வாங்குவது இந்தியாவுக்கு பெரும் கடனை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் பெட்ரோலின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் சாலை எங்கினும் பெட்ரோலால் ஓடும் கார்களால் நிரம்பி வழிகிறது. இது எதிர்காலத்தில் குறையும் என்று எண்ண எந்த வித முகாந்தரமும் இல்லை, இந்திய அரசாங்கத்துக்கு அதனைக் குறைக்க எந்த திட்டமும் இல்லை. அது போல குறைவாக இந்திய தெருக்களில் பெட்ரோல் கார்கள் ஓடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கார்கள் உற்பத்தியையும் கார்கள் இறக்குமதியையும் கட்டுப்படுத்தி வந்தது. அது வெற்றியடையவில்லை. அது மக்களிடையே இருக்கும் உயர்வு தாழ்வை அதிகரித்துவிட்டது.

இப்போது இந்த கார்கள் எளிதாக இறக்குமதி செய்யவும், இந்திய கார்கள் உற்பத்தி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. இது பல நடுத்தர வருமான குடும்பங்கள் கார்கள் வாங்க ஏதுவாக இருக்கின்றன. ஆனால், இத்தனைக்கும் பெட்ரோல் கொடுக்க வேண்டும். எப்படி கொடுப்பது ? இந்தியாவில் அங்கும் இங்கும் பெட்ரோல் அல்லது இயற்கை வாயு கண்டறியப்பட்டதாக செய்திவந்தாலும் அவை பல் குத்தக்கூட போதுமானதில்லை என்பது விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

வேகமாக வளரும் பொருளாதாரத்துக்கு ஏராளமான எரிபொருளும், உடனடி மின்சாரமும் வேண்டும். அவைகளை உற்பத்தி செய்ய இன்று முதன்மையான வழி பெட்ரோலால் ஓடும் மின்சார நிலையங்கள்தாம்.

இன்று காற்றிலிருந்து மின்சாரம், சூரியனிலிருந்து மின்சாரம் போன்ற நிறைய திட்டங்கள் பேசப்பட்டாலும் அவை எல்லாம் வளரும் பொருளாதாரத்தின் தேவைக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அறிந்ததுதான். இன்று அவ்வளவு விலை கொடுத்து பெட்ரோல் வாங்கி பண்ணும் மின்சாரம், காற்றிலிருந்து பெறும் மின்சாரத்தை விட விலை மலிவு என்பது பலருக்குத் தெரியாதது. இதே விஷயம்தான் சூரிய சக்தியிலிருந்து பெறும் மின்சாரமும். பலர் இந்த சூரிய சக்தி மின்சாரத்தை விலை மலிவாக்க பல ஆராய்ச்சி மையங்களில் உழைத்துக்கொண்டிருந்தாலும், அவை இன்னும் பெட்ரோலைவிட விலை மலிவாக ஆகவில்லை. ஆகும் ஒரு கனவை நம்பி இந்தியா காத்திருக்க முடியாது.

சமீபத்தில், தொழிற்சாலைகள் நிரம்பிய மேற்கு மின்சார வலை சக்தி இழந்து 5 முக்கிய மாநிலங்கள் இருட்டில் கிடந்தன. இது பல பிரச்னைகளை முன்னே கொண்டுவந்திருக்கிறது.

முதலாவது தொழில்நுட்ப சீர்திருத்தம் மூலம் இந்த மின்சார வினியோகத்தை குறைந்த மின்சார இழப்போடு சரிவரச் செய்யவேண்டும். அவ்வாறு செய்தாலும் இந்தியாவின் தேவைகளை தொழில்நுட்பச் சீர்திருத்தங்கள் சரிக்கட்டமுடியாது.

இந்தியா சுதந்திரமடையும்போது 1300 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்தது. இன்று இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 90,000 மெகாவாட்டுகள். இருப்பினும், இன்றைய மின்சாரத்தட்டுப்பாடு 11.5 சதவீதம். (அதாவது இன்றைய மின்சார உற்பத்தியில் இன்னும் 11.5 சதவீதம் அதிகத்தேவை இருக்கிறது) இதனால் தொடர்ந்து பொருளாதார முன்னேற்றம் தடைபடுகிறது.

இந்தியாவின் கச்சா பெட்ரோல் இறக்குமதியும் அதற்குத்தகுந்தாற்போல அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் மொத்த பெட்ரோல் உபயோகத்தில், இறக்குமதியாகும் கச்சா பெட்ரோல் எண்ணெயின் சதவீதம் 1980ல் சுமார் 30 சதவீதமாக இருந்தது. இது 2010இல் சுமார் 90 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. இயற்கைவாயுவும் பல பாதுகாப்பான குழாய்கள் வழியாக வெளிநாடுகளின் வழியே இறக்குமதி செய்யப்படவேண்டும்.

எரிபொருள் கனிம வளம் குறைந்த, ஆனால் வளரும்பொருளாதாரமான இந்தியாவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துகொண்டே இருக்கும். இது வெளிநாடுகளை இதன் தேவைக்காக நம்பியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றவர்களை நம்பி அவர்களின் சொல்படி ஆடவேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சாணவாயு, சூரிய வெளிச்சம், காற்றாலை, ஆற்றிலிருந்து மின்சாரம், கடலிருந்து மின்சாரம், வீண் கழிவுகளிலிருந்து மின்சாரம் ஆகிய அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட மின்சார உற்பத்தியின் உலகிலேயே இந்தியாவே முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட மின்சார உற்பத்தி இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதத்துக்கும் மேல்.

இருப்பினும் இந்த மூலப்பொருட்களை ஒரு எல்லைவரைக்குமே உபயோகிக்க முடியும். ஆகவே அணுசக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியதை இந்தியா தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.

உண்மையில் உலகளாவிய முறையில், அணுசக்தி மின்சாரத்தில் எல்லா நாடுகளுக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. மின்சாரத்தேவைக்கும், மின்சார சப்ளைக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளி பல நாடுகளை மீண்டும் இந்த அணுசக்தி மின்சாரத்தை மறுபார்வை பார்க்கத்தூண்டுகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல அரசியல் கட்சிகள் 1990களில் அணுசக்தியை முழுக்க மூடிவிட வேண்டும் என்று பேசிவந்தன. இன்று அதைப்பற்றியே பேசுவதில்லை. அதே நேரத்தில் அணுசக்தி மின்சார தொழில்நுட்பத்தில் நடந்திருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், இத்தோடு சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு கொடுத்திருக்கின்றன. பெரும் அணு உலை அமைப்புகள், இவைகளை தயாரிக்க வேண்டிய நீண்டகால திட்டம், அணு உலை பாதுகாப்பு, இதிலிருந்து உருவாகும் கதிரியக்க உபரிப்பொருட்கள் ஆகியவை பற்றிய பல பிரச்னைகளை இன்று தொழில்நுட்பம் தீர்த்திருக்கிறது.

ஐ.ஏ.ஈ.ஏ என்ற உலகளாவிய அமைப்பு, புதிய அணு உலை வடிவமைப்புகளையும், எரிபொருள் மறு உபயோகம் பற்றியும் பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறது. இந்த வடிவமைப்புகள் பாதுகாப்பானவை, மிகவும் சிக்கனமானவை, தொழில்நுட்ப ரீதியில் அதிகம் வளராத நாடுகளால் கூட எளிய முறையில் நடத்தக்கூடியவை. இந்தியாவுக்கு இன்னும் அதிக சிறப்புகளும் உண்டு. இந்தியாவின் அணு மின்சார தொழில்நுட்பம் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வந்தது. இந்தியாவில் ஏற்கெனவே 14 அணுமின்சார நிலையங்கள் இருக்கின்றன. இவைகள் மொத்தம் 2720 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு இன்று தருகின்றன. இருப்பினும் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் இது வெறும் 2.2 சதவீதமே.

இந்தியா ஏற்கெனவே அணு மின்சார ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பத்திலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனங்களில் ஏராளமான அறிவியலறிஞர்கள் பணியாற்றுகிறார்கள். நிச்சயம் பாதுகாப்பான முறையில் இந்தியாவின் மின்சாரத் தேவைகளை அணுமின்சாரம் கொடுக்க முடியும். இந்தியாவில் நிறைய தோரியம் கனிமப்படிவங்கள் கிடக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் 300,000 மெகாவாட் மின்சாரத்தை 300 வருடங்களுக்கு உற்பத்தி செய்யலாம். இந்த அணுசக்தி மின்சாரத்தை நாம் உபயோகப்படுத்தாமல் போனோமானால், அது நேஷனல் வேஸ்ட். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அணுமின் உலையை விற்க முடியாத அணு உலை உற்பத்தியாளர்கள் இந்தியாவையும் சீனாவையும் அணுகி வருகிறார்கள்.

***

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பல மேலை நாடுகளுக்கும் இதுவே கதி என்பது யோசித்தால் புரியும். ஏனெனில் இருக்கும் பெட்ரோல் காலம் காலமாக பூமியில் இருக்கப்போவதில்லை. ஆயிரம் போர்கள் புரிந்து பெறும் பெட்ரோலை இன்று அமெரிக்கா தீர்க்கும் வேகத்தில் தீர்த்தால் இன்னும் 50 வருடங்களுக்குக்கூட தேராது. உலகத்து பெட்ரோல் சேமிப்பு மிக வேகமாக தீர்ந்துவருகிறது என்று புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அமெரிக்கா மட்டுக்குமே போதாத பெட்ரோலை அதி வேகமாக வளர்ந்துவரும் எல்லா நாடுகளும் அதே வேகத்தில் உபயோகிக்க முனைந்தால், இன்னும் 20 வருடத்துக்குக்கூட தேராது இந்த பெட்ரோலும் இயற்கை வாயுவும்.

***

மிக விலைமலிவான மின்சாரத்தால் பல பிரச்னைகளை இந்தியாவில் தீர்க்க முடியும்.

உதாரணமாக அதிக அளவில் உற்பத்தியான மின்சாரத்தைக் கொண்டு கடல் தண்ணீரை குடிக்கும் நீராக்கி பம்பு செட்டுகள் மூலம் பல இடங்களுக்கு அனுப்ப முடியும். இன்று அரேபியா முழுவதும் விவசாயம் நடப்பது பெட்ரோல் கொடுக்கும் மின்சாரத்தால் கடல் நீர் சுத்தத்தண்ணீராக்கப்பட்டு உள் நிலங்களுக்கு குழாய் மூலம் அனுப்பப்படுவதால்தான். ஆறுகளையும், வானத்தையும் நம்பி இருந்தோமானால் அடுத்த பருவ மழை பொய்ப்பின் போது, நாம் இன்னும் அதிகமான மக்கள்தொகையை கையில் வைத்துக்கொண்டு ஆற்றில் ஒழுகும் நீருக்கு போர் புரிந்து கொண்டிருப்போம்.

அடுத்தது, இன்றைய பெட்ரோல் கார்களுக்குப் பதிலாக மின்சாரக் கார்களை ஓட்ட இயலும். அது தெருக்களில் புகைக் கக்கிச் செல்லும் வாகனங்களை சுத்தமாக ஓடச்செய்யும். ஏற்கெனவே ரேவா போன்ற கார் நிறுவனங்கள் குறைந்த செலவில் மின்சாரக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இவைகள் பெட்ரோல் கார்களை விட சுத்தமானவை சத்தமற்றவை. இந்த கார்களுக்கு அதிக தேவை வரும்போது, இவை இன்னும் அதிக சக்தியோடும், அதிக பேர்களை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் போகும் கார்களாகவும் ஆக்க பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்தது அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தைக்கொண்டு தண்ணீரில் இருக்கும் ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் பிரித்து ஹைட்ரஜனை இன்று சமையல் வாயு அடைத்து விற்பது போல விற்க முடியும். ஐஸ்லாந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி ஐஸ்லாந்து முழுவதையும் ஹைட்ரஜன் பொருளாதாரமாக மாற்ற தேசியத்திட்டம் வகுத்து செயலாற்றி வருகிறது. இதனை முன்னுக்கு கொண்டுசென்றால், இன்றைய மின்சாரக் கம்பங்களை எல்லாம் எடுத்துவிட்டு ஹைட்ரஜன் குழாய்களைப் போட்டு தேவைப்பட்ட இடத்தில் மின்சாரத்தையோ, வெப்பத்தையோ பெற்றுக்கொள்ள முடியும்.

***

மேலும் விவரங்களுக்கு

http://www.renewingindia.org/index.html

Series Navigation

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்