வீண்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

பாரதிராமன்


திடார் மின்தடை

மெழுகுவத்தியும் தீப்பெட்டியும்

எடுத்துவரவேண்டும்

இருட்டில்

தடவித் தடவித்

தேடியெடுத்துப் பற்றவைத்ததும்

உயிர் பெற்ற

மின்விசிறியின் வீச்சில்

உயிர் நீக்கிறது வத்தி.

தேடாமலே இருந்திருக்கலாம்.

——————————————————————————–

Series Navigation