விலகி

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

அருண்பிரசாத்


நிச்சயமின்மையின் வெளிகளில்
மெல்ல கரைகிறது
இலைக்குள் சிறைபட்ட
துளியின் துக்கம்.

விலகிச் சென்று
வழிகாட்டுகிறது
ஒற்றை ஆடு
முழு மந்தைக்கு.

அளவிட முடிவதில்லை
எங்கும் பரவி நிற்கும்
சார்தலின் பரிமாணங்கள்.

everminnal@yahoo.com

Series Navigation