This entry is in the series 20110213_Issue

ராம்ப்ரசாத்


வானத்தின் கீழமர்ந்து
பாடங்களைக் க‌ற்ற‌வ‌ன்,
க‌ற்பித‌ங்க‌ளை உருட்டி
விதைக‌ளாக்கியிருக்கலாம்…

வீசிச்செல்ல‌ ம‌ற‌ந்துபோன‌
அந்த‌ விதைக‌ள்
நினைவுக்கூட்டுக்குள்ளேயே
ந‌முத்துப் போய்விடுகின்ற‌ன‌…

ப‌ய‌ன்க‌ளின் அத்துவான‌த்தை
இங்கிருந்தே பார்த்து
பெருமூச்சுவிடும் அத‌ன் ஏக்க‌ங்க‌ளை
அவ‌ன் உண‌ர்ந்திருக்க‌லாம்…

நாளை ஒருவ‌ன் ஏதுமில்லாத‌
அத்துவான‌த்திலிருந்து கீழே
குதிக்க‌க் காத்திருக்கிறேன்…

அவ‌னிட‌ம் நிர‌ம்ப‌
விதைக‌ள் இருக்கிற‌து
நான‌றிவேன்…

அவ‌ன் சாய‌லில்
என்னை ஒத்து இருப்பான்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation