மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

ஜான் பெர்தெலெஸன்

ஆசியா முழுவதும், இந்தியாவிலிருந்து சீனா, தெற்கே ஆஸ்திரேலியா வரை தீவிரமான எரிசக்தி போதாமை பரவிக்கொண்டிருக்கிறது. இவைகள் தீவிரமாக மின்சார நிலையங்களை கட்டிவருகின்றன. இருந்தும், தொழிற்சாலைகளின் அளவுக்கும், குடிமக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கும் இவைகளால் ஈடு கொடுக்கமுடியவில்லை.

நிச்சயமாக, ஆசியா தனியாக இந்த பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. சமீபத்திய வருடங்களில் அமெரிக்காவும், கனடாவும் பெரும் மின்சாரத்தடைகளை எதிர்கொண்டன. அமெரிக்காவின் நடுப்பிரதேசத்தில் ஒரு மின்சார நிலையம் நின்றுபோனதில் வட அமெரிக்காவின் பல மாநிலங்கள் மின்சாரத்தை இழந்தன. சுமார் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்க நேர்ந்தது. அதிக அளவு மின்சார தேவை காரணமாக, இன்னும் பல மின்சாரத்தடைகள் வரலாம் என்று இங்கிலாந்து, ஐரோப்பா ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்திருக்கின்றன.

நோமுரா செக்கியூரிட்டாஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரியும் சான் டார்பி அவர்கள், ‘உலக பொருளாதார வளர்ச்சி, நம்பத்தகுந்த எளிதில் பெறக்கூடிய விலை குறைந்த மின்சாரத்தையே நம்பி இருக்கிறது. சமீபத்திய அமெரிக்க மின்சாரத்தடை, ஈராக்கில் துருக்கிக்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் உடைப்பு, ஜப்பான் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த மின்சாரத்தடை பற்றிய எச்சரிக்கைகள் ஆகியவை உலகம் எப்படிப்பட்ட மின்சாரத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது ‘ என்று கூறுகிறார்.

பாரிஸில் இருக்கும் இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்ஸி என்ற சுதந்திர நிறுவனம், இந்த வருடத்தின் மொத்த பெட்ரோல் தேவையை 78.41 ஆக, ஏறத்தாழ சென்றவருடத் தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் அதிகரிக்கும் தேவை. ஆசியாவில் மின்சார தேவை மிகவும் அதிகமாகி வருகிறது. ‘வடக்கு சீனாவில் எண்ணெய் குழாய்களிலிருந்து திருட்டு நடப்பதற்கும், ஷாங்காய் மாவட்டத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இருப்பதற்கும் பல நிரூபணங்கள் இருக்கின்றன ‘ என்று டார்பி கூறுகிறார்.

‘மின்சார தட்டுப்பாடு காரணமாகவும், மின்சாரத் தேவையை கருத்தில்கொண்டு அதில் முதலீடு செய்யாமல் இருப்பதாலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவான வேகத்தில் வளரக் காரணமாகப் போகிறது ‘ என்று எச்சரிக்கிறார்.

உண்மையில், ஆசிய பசிபிக் பகுதியில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக சீனா இருந்தாலும், அதன் ஒருவருட பெட்ரோல் இறக்குமதி, அமெரிக்காவின் ஒரு வார பெட்ரோல் இறக்குமதிக்குத்தான் சமமாகும்.

சீனா மட்டுமே இப்படி மின்சாரத் தேவையை எதிர்கொள்ளவில்லை. இந்தோனேஷியா சென்ற மாதம் 27 சுகர்ட்டோ யுகத்து மின்சார நிலையங்களை மீண்டும் ஆரம்பிக்க முனைந்தது. வியத்நாம் ஆறு புதிய நீர்சக்தி மின்சார நிலையங்களை தொடங்க முனைந்தது.

சில நாடுகள் மரபுசாராத மின்சார நிலையங்களிலும் அக்கறை செலுத்தி வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாடு தேங்காய் எண்ணெயை எரி எண்ணெயாக மாற்றும் வழியை சொல்லிதர விவசாயிகளைப் பழக்குகிறது. ஆசியாவில் பல இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் வீடுகளில் சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓடுகள் வேயப்படுகின்றன. சீனாவில் மட்டுமே 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டிருக்கிறது.

பாகிஸ்தான், தன்னுடைய பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் 10 வருடத்தில் காலியாகிவிடும் என்றும், தன்னுடைய இயற்கை எரிவாயு கிணறுகள் 20 வருடங்களில் காலியாகிவிடும் என்றும் எச்சரித்து விட்டு, காற்றாலை, சூரிய சக்தி போன்ற தொழில்நுட்பங்களை சீனா ஜெர்மன் மற்றும் டானிஷ் தேச உதவியுடன் மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. 1.2 மெகாவாட் காற்றாலை மின்சார நிலையத்தை கராச்சி அருகே உருவாக்கியிருக்கிறது. சுமார் 70 சதவீத பலுச்சிஸ்தான் மாநில காடுகளும் மரங்களும் எரிபொருளுக்காக வெட்டப்பட்டுவிட்டன. பாகிஸ்தான் தன்னுடைய மின்சாரத்தேவைகளில் சுமார் 10 சதவீதத்தையாவது மரபுசாராத தீராத மூலப்பொருட்களிலிருந்து (சூரிய சக்தி காற்றாலை போன்றவை) 2015 வருடத்துக்குள் பெறவேண்டும் என்று திட்டம் தீட்டியிருக்கிறது.

வரும் வருடத்திலிருந்து திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று பெட்ரோலிய மந்திரி ராம் நாயக் அவர்கள் கூறுகிறார். இந்தியா உற்பத்தி செய்யும் இயற்கை வாயு சுமார் 65 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர்கள் ஒரு நாளைக்கு. ஆனால் அதன் தேவை சுமார் 119 mmscm ஒரு நாளைக்கு.

மின்சாரத் தேவை அதிகரிக்க அதிகரிக்க, இதன் வினியோகத்தால் சுற்றுச்சூழல் நசிவு ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. கிரேக்க எண்ணெய்க் கப்பல் தரை தட்டி கடற்கரை நாசம் போன்ற செய்திகள் வராமல் ஒரு நாள் கூட செல்வதில்லை. கடந்த மூன்றுவாரமாக கராச்சி கடற்கரையில் எண்ணெயை கொட்டி வரும் டாஸ்மான் ஸ்பிரிட் என்ற கப்பல், பாகிஸ்தானின் சுமர் 130 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமான கடல் உணவு ஏற்றுமதியை பயமுறுத்திவருகிறது.

ஏறத்தாழ எல்லா நாடுகளுமே மின்சாரத்தேவை சம்பந்தமான பிரச்னைகளை எதிர்நோக்குகின்றன இவற்றில் மிகவேகமாக வளர்ந்துவரும் சீனாவே மிகவும் அதிகமான பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. யாங்ஜிங் நகரத்தில் தன்னுடையை மிகப்பெரிய அணுமின்நிலையத்தை கட்ட சென்ற ஆகஸ்டு மாதத்தில் சீனா அறிவித்தது. இது 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 15லிருந்து 20 வருடங்கள் கட்டப்பட்டு ஆறு ஜெனரேட்டர்கள் கொண்டு 6 மில்லியன் கிலோவாட் கொடுக்கும்படி கட்டப்படும்.

சீனா உலகத்தில் இருக்கும் எண்ணெயில் 5 சதவீதத்தை வைத்துக்கொண்டு 7 சதவீத உலக பெட்ரோல் உற்பத்தியை சாப்பிடுகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது வெகு விரைவிலேயே அமெரிக்காவை இருப்புக்கு மேல் உபயோகிக்கும் தேசங்களில் முதலாவது இடத்திலிர்ந்து நீக்கிவிட்டு அங்கு உட்கார்ந்து கொள்ளும். அதன் தேவை வருடத்துக்கு 5.8 சதவீதமாக அதிகரிக்கிறது. அதன் மின்சார உபயோகம் 20 சதவீதம் அதிகரிக்கிறது.

சீனாவின் எண்ணெய் இறக்குமதி 29 சதவீதம் அதிகரித்து இன்று 50 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. சீனாவில் இருக்கும் எல்லா விஷயங்களைப் போலவே இதற்கும் அரசியல் பரிமாணம் உண்டு. வளர்ந்து வரும் இறக்குமதி அளவு சீனாவை சிந்திக்கவைத்திருக்கிறது. இது வெளியுறவு அரசியலாக பரிமாணம் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

கடந்த வருடம் மின்சார சாதனங்களுக்காக சீனா செலவு செய்த தொகை 50 சதவீதம் உயர்ந்தது. 2001இல் 185 மெகாவாட்டுகளாக இருந்த குடியிருப்பு மின்சார உபயோகம் 2002இல் 200 மெகாவாட்டுகளாகவும் 2003 முடிவுக்குள் இந்த வருட உபயோகம் 222 மெகாவாட்டுகளாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. எல்லா தொழிற்சாலைகள் பெரும் தொழிற்சாலைகள் குடியிருப்புகள் மின்சார உபயோகம் 1.4 கிகாவாட்டுகளிலிருந்து 2.10 கிகாவாட்டுகளாக 2004இல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார அமைப்பை சீர்திருத்த, சீனாவின் வழமையான மின்சார நிறுவனங்களை உடைத்து பிராந்திய அளவில் பிரிக்க முடிவு செய்திருக்கிறது. இன்னும் 3 வருடங்களில் இந்த சீர்திருத்தத்தை செய்ய முடிவு செய்திருக்கிறது.

***

Series Navigation