மறுபிறவி எடுத்தால்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

சத்தி சக்திதாசன்


பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவனவன்
துள்ளித் திரியும் வயதில் சுண்டல் விற்கும் நிலை
கல்வியின் மதிப்பு அறியா மனிதர் கடித்துத் துப்பும்
கடலைக்காக காத்து நிற்கும் ஏழைக் கூட்டம் ஒன்று
நிதியமைச்சர் வீட்டு விருந்தின் பின் வீசியெறியும் எச்சில் இலையின்
பொருளாதாரத்தில் வாழ்க்கை நடத்தும் கூட்டமொன்று
படிக்கும் மாணவரின் எதிர்காலத்தை சிதைத்து போதை மருந்தை
பணமாய் மாற்றும் நயவஞ்சகரின் கூட்டமொன்று
காதல் பேசி கலர் கலராய் கனவுகள் காட்டி பின்னர்
கசக்கி எறிந்துவிட்டு கை வீசி நடக்கும் இதயமற்றோர் கூட்டமொன்று
இதுதான் எமது நாகரீக உலகமென்றால் எனக்கு
இனியும் ஒரு பிறப்பு உண்டென்றால் இறைவா
மனிதனாய் பிறக்கும் வரம் மட்டும் வேண்டாம் என்றும்
மனதினில் நன்றியைச் சுமக்கும் நாயாய் என்னைப் படைத்து விடு.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்