மதுரை உயர் நீதிமன்றம்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

மயிலாடுதுறை சிவா


25 ஆண்டுகால தென் மாவட்ட மக்களின் கனவு ஒரு வழியாக மதுரை ‘புதிய நீதிமன்ற திறப்பு ‘ மூலம் நிறைவேறியது. பலத்தரப் பட்ட சர்ச்சைக்களுக்குப் பிறகு, பலமுறை ஒத்தி வைக்கப் பட்டப் பிறகு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கும் அவருடைய அறிவிப்பிற்கும் பிறகு சென்ற மாதம் தில்லி தலைமை நீதிபதியால் புதிய, மிக அழகான கட்டிடம் வேலைப் பாடுகள் நிறைந்த நீதி மன்றம் சிறப்பாக திறந்து வைக்கப் பட்டது. தென் மாவட்ட மக்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஆனால் இந்த விழாவில் சென்னை வழக்குரைஞர்கள் கலந்து கொள்ளவில்லை, அதுமட்டும் அல்ல, பலமான எதிர்ப்பையும் இன்று வரை காட்டி வருகிறார்கள். மதுரை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு கிட்டதட்ட 10 மாவட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. மாவட்ட அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் சென்னை வழக்குரைஞர்கள். மேலும் ‘ரிட் மனுவை ‘ விசாரிக்க கூடாது என்கின்றனர் சென்னை வழக்குரைஞர்கள். சென்னை வழக்குரைஞர்களின் தேவைதான் என்ன ? தங்களுக்கு வருகின்ற நல்ல வருமானம் வெறு யாருக்கும் போய் விட கூடாது என்பதை தவிர வெறு என்ன காரணம் இருக்க முடியும் ?

சாரசரி தமிழன் கடைசியாக கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை வைத்துள்ளது – நீதி தேவதையின் தீர்ப்புக்களுக்கு மட்டுமே. எத்தனை குடும்பங்கள் தன்னுடைய சொத்துக்களை விற்று, உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடுகிறார்கள். இவர்களின் கண்ணீர் கதைகள் ஏன் சென்னை வழக்குரைஞர்கள் கண்களுக்கு புரியவில்லை ? தேங்கி கிடக்கும் ஆயிரகணக்கான வழக்குகளில் கிட்ட தட்ட 40% வழக்குக்கள் தென் மாவட்ட வழக்குகள். இவர்களுடைய கண்ணீருக்கும் மனப் போராட்டங்களுக்கும் ‘மதுரை உயர் நீதிமன்றம் ‘ ஓர் பெரிய தீர்வு அல்லாவா ? இதனை சென்னை வழக்குரைஞர்கள் மறுக்க வலுவான காரணங்கள்தான் என்ன ?

மேலும் மதுரை நீதிமன்ற திறப்பு விழாவிற்க்கு பெரிதும் உதவிய சென்னை தலைமை நீதிமன்ற நீதிபதியை சுபாஷன் ரெட்டியை நீக்க சொல்லி போரட்டம் நடத்திகிறார்கள் சென்னை வழக்குரைஞர்கள். இப்படி தலைமை நீதிபதியை நீக்கச் சொல்லி போராட்டம் நடத்துவது வரலாற்றில் இதுவே முதல் முறை. என்ன அநியாயம் ? அது மட்டும் அல்ல, தொடர் போராட்டம் வேறு!!! சென்னையில் தேங்கி கிடக்கும் வழக்குகள் ஏராளம். அவற்றை நம்பி கிடக்கும் சாதரண குடிமகனின் நிலமை ? இந்தப் போரட்டம் எப்படி முடிய போகிறது என்று தெரியவில்லை. மாநில சட்டத் துறையும், மத்திய சட்டத் துறையும் காலம் தாழ்த்தமால் இதனை தீர்த்து வைத்தால் மிக நன்று.

மயிலாடுதுறை சிவா…

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா