பைத்தியமானேன் வைத்தியமுண்டா

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சத்தி சக்திதாசன்


மனதினிலே ஓருவிதமான மயக்கம் பிறக்குதடி
மாலைவேளையெல்லாம் ஏனோ உள்ளம் பொங்குதடி
நினைவினிலே அலையலையாய் துள்ளிப்பாயுதடி-என்
நிழல் கூட உன் உருவம் காட்டுதடி
தென்றல் அடிக்குதடி ஆனால் என்னுடலோ கொதிக்குதடி-இனந்
தெரியா உணர்வொன்று உள்மனதைக் கிள்ளுதடி
பசியென்றால் என்னவென்று பலநாளாய் மறந்ததடி
புரியாத இது எனக்கு வந்த புதிதான வருத்தமடி
குடம் குடம்,ஆய் தண்ணீராய்க் குடித்தேனடி
குறையவில்லை என்னிதயத் தாகமடி
முகவரி இல்லாமல் அலையும் இந்த மேகமடி
முடியாத ஒரு காவியத்தின் முடிவு நானா அறியேனடி
அரிவரி தொடங்கி டிகிரி வரை படிப்பு முடிந்ததடி
ஆனாலும் இன்றுவரை புரியவில்லை காதலடி
இறுதியாகஒன்றை மட்டும் உரைத்தேனடி
இதயத்தில் அழியா விம்பமான உன்னால்தான் பைத்தியமானேனடி.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்