பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

-மா. சிவஞானம்


இடிமழையி ராத்திரியின் நேர்காலையில் பூத்திடும்
பொடிமண் விரிநிலம் கீறியே – காளான்கள்
ஆடியே ஈர்த்திழுக்கும் மலிந்தெங்கும் கவின்குடைகள்
பாடும் நசியா துயிர்.

கூடி யிடுவார் குறுகத் தடையே
ஆடி யிதற்குத் தலையசை – சாகவே
வானம் பழிக்கும் வளர்மதி சுடும்
மரமோ ஈகும் பழம்.

பழமே பறிப்பதாய் வந்த தெனில்
மரமுறித்து எரிப்பதுவோ அதுதகுமோ – அனலம்பு
உடலெரித்து வீசிட்டாலும் கணப்பொழுதில் துலங்குமாம்
வேற்றுருவங் காட்டிடுமாம் உயிர்.
msgnanam@tm.net.my

Series Navigation

மா. சிவஞானம்,

மா. சிவஞானம்,

பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும்.

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

மா. சிவஞானம்.


இல்லாதவங்க அல்லாருக்கும் ஆட்டு லோனுங்கோ
பொல்லாதவங்க இல்லீங்கோ ஜென்டில்மேனுங்கோ – பாண்டு பண்ணை
அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ
அல்லாருக்கும் தருவிச்சாரு ஆட்டு லோனுங்கோ

அல்லாருக்கும் வந்ததுங்கோ ஆளுக்கொரு ஆட்டுக்குட்டி
அல்லாந்து வாங்கிப்போன பாண்டுல பதுங்கினது மீதிக்குட்டி – பாண்டு பண்ணை
அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ
அல்லாந்துக்கு எப்பவுமே ஆண்டை அவருதாங்க

உள்ளதும் போச்ச்சுங்க நொள்ளக் கண்ணுங்க
ஓடிவந்து கதறுனவ அம்மாக் கண்ணுங்க – உள்ளபடி
சொன்னாருங்க மலமஞ்சனூர் சோசியக்காரவங்க
அல்லாந்து தூக்கிப் போனது ஆட்டுக்குட்டிங்க

இல்லாது போனதுங்க, எப்பவுமே அவிங்க பேர்ல ஆட்டு லோனுங்க
மல்லாந்து படுக்கவச்சு அல்லாந்து தோல உரிச்சாருங்க – பாண்டு பண்ணை
அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ
அன்னாந்து பாருங்க, ஜேம்சு ஐயா நெனப்பெல்லாம் சனநாயகமுங்கோ.

msgnanam@tm.net.my

Series Navigation

மா. சிவஞானம்,

மா. சிவஞானம்,