பிரிவிலே ஓற்றுமையா ?!

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

செங்காளி


எழுகின்ற ஞாயிறுதான்
விழுகின்ற மாலைவரை
கழனியில் உழைத்ததெல்லாம்
பழுதாய்ப் போனதம்மா.

நட்டுவிட்ட பயிரெல்லாம்
பட்டுப்போய்ப் படுத்திடவே
கொட்டிய பணமெல்லாம்
வெட்டியாய்ப் போனதம்மா.

இக்கதையை எங்குசொல்ல
மக்களை ஆளுவோரும்
பக்கத்து நாட்டரசும்
தக்கபடி பேசவில்லை

தண்ணீரும் வரவில்லை
மண்ணுமிங்கே காய்ந்திடவே
எண்ணியெண்ணி அழுதழுது
கண்ணீரும் வற்றியதே.

பிரிவிலே ஒற்றுமையாம்
பெரிதாய்ச் சொல்லுகின்றார்
புரியவில்லை எனக்கதுவே
சரியாக விளக்கிடுவீர்.
—-
natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி