திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நீ வருவாய் என…..

This entry is in the series 20030309_Issue

மலர்வனம்


விடியற்காலை பொழுது
இளந்தென்றல் காற்று
சாளரத்தின் ஓரமாய்
உனக்காக காத்திருக்கிறது……….

உன் வீட்டு கொடியில்
பூத்த மல்லிகைப் பூ
உன் கூந்தலுக்காய்
காத்திருக்கிறது………..

அழகிய புல்வெளிகள்
உன் மலர் பாதங்களுக்காய்
காத்திருக்கிறது…………..

கிழக்கே உதிக்கும் சூரியன்
நீ வரும் திசை நோக்கி
காத்திருக்கிறது…………

நானும் அப்படி தான்
உன் விழிப் பார்வை
என் மீது படும் என்ற ஏக்கத்தில்
காத்திருக்கின்றேன்…….

என் வாழ்க்கையின் முடிவு
உன் ஒற்றை சொல்லுக்காய்
காத்திருக்கிறது……………

malar_vanam@sify.com

Series Navigation

About மலர்வனம்

மலர்வனம்

View all 11 articles →

நீ வருவாய் என..

This entry is in the series 20030104_Issue

வேதா


உன் தரிசனம் தேடி
துவண்டு போனதோ,
சின்னஞ்சிறு அலையும் ?

உன்னைக் காணாமல்
இங்கேயும் அங்கேயும் அலையும்
நண்டுகளின் பரபரப்பு!!

அதோ, மேகத்தின் மேனியில்
மறைந்தபடி மஞ்சள் நிலா!
ஒருவேளை,
நீ வரக்கூடுமோ ?
எட்டி எட்டிப் பார்த்ததாலேயே
ஒரு பக்கமாய் தேய்ந்தபடி!

எங்கோ புள்ளியாய்
தெரியும் ஓடத்தின் பயணம்,
உன் அன்பைத் தேடித்
தத்தளிக்கும் என்னைப் போலவே!

உன் பாதங்களுக்காய்
பார்த்திருந்த புல்வெளுகள்,
உன் கால் தடத்தை
இன்னமும் கலைக்காத
கடற்கரை மணல்…
இயற்கையே காத்திருக்க,

நான் என்ன விதிவிலக்கு ?

நீ இல்லாத காற்று வந்து
என் இரவைக் கிழிக்கிறது!

நாளைக்காவது ஏதேனும்
நடக்கக் கூடும்!
இன்று மட்டும் வாழ்ந்திருக்க,
உன் நினைவுக் கடலில்
நானும் மெல்ல இறங்கி
நடக்க ஆரம்பித்தேன்…
tamilmano@rediffmail.com

Series Navigation

About வேதா

வேதா

View all 39 articles →